அங்கே ஏரோடினால்தான் இங்கே காரோடும்

15விவசாயம் செழிக்கவும் விவசாயி வளம்பெறவும் வேண்டுவோம்.

தைப்பொங்கல் என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது கரும்புதான்.கரும்பு பயிறிடுவது சிறிது காலம் முன்பு வரை அதிக அளவில் இருந்தது என்றால் இன்று நிலைமையோ முற்றிலும் வேறு.சிறிது தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்த செய்தியின்படி சென்ற 2013-ல் கரும்பு சாகுபடி கிட்டத்தட்ட 50 சதவீகிதம் குறைந்து இருப்பதாக தகவல் தெரியவந்தது.இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.நீர் பற்றாக்குறை மற்றும் போதிய விலை கிடைப்பதில்லை என்பதே காரணங்களாக கூறப்படுகிறது.இவை இரண்டுமே அரசாங்கம் நினைத்தால் சரி செய்யக்கூடியவை(மழை வரச்செய்ய இயலாது , மற்ற வழிமுறைகள் நிச்சயம் உண்டு).ஆனால் இன்றோ நம் விவசாயிகள் தினமும் போராட்டம் உண்ணா விரதம் என்று எத்தனை முயற்சிகள் செய்தும் விவசாயத்திற்காக இதுவரை பெரிய முன்னேற்றத்திட்டங்கள் செய்ததுபோல் தெரியவில்லை.

இந்த நிலைமை கரும்பிற்கு மட்டும் இல்லை.மஞ்சள் , நெல் போன்ற மற்ற சாகுபடிகளுக்கும் தான்.விவசாயி செய்யும் வேலைக்கும் அவன் உடல் உழைப்பிற்கும் ஏற்ற விலை அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு கிடைப்பதில்லை.போராட்டங்களும் வெற்றி பெறுவதில்லை.எந்த ஒரு அரசாங்கமும் இந்த விவசாயிகளின் துயரைத்துடைக்கவில்லை என்ற போதிலும் அவர்களை சிரமப்படுத்தவும் தவறுவதில்லை.உதாரணத்துக்கு தஞ்சைப்பகுதியில் மீத்தேன் பிரச்சனை,கொங்கு மண்டலத்தில் பெட்ரோல் டீசல் எடுத்துச்செல்ல விவசாய நிலங்கள் கைய்யகப்படுத்தப்பட்ட பிரச்சனை என்று அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் நிறைய.இதை எல்லாம் தாண்டித்தான் இன்றைய நவீன உலகில் கஷ்ட்டப்பட்டு விவசாயம் செய்கிறான் விவசாயி , பெரிய பலனின்றி.

இது ஒரு புறம் இருக்க இன்றைய தலைமுறைக்கு விவசாயத்தின் மீதோ விவசாயம் சார்ந்த தொழில் மீதோ அவ்வளவாக நாட்டம் இல்லை என்பதே உண்மை.இன்னும் சொல்லப்போனால் அடுத்த தலைமுறைக்கு விவசாயம் என்றால் என்ன என்று சொல்லிக்கொடுத்தாக வேண்டிய சூழலும் ஏற்படும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.நம்மில் எத்தனை பேர்க்கு நம்மாழ்வாரைத் தெரியும் அவர் இறக்கும்முன் என்றால் எண்ணிக்கை அதிகம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.எவ்வளவு சிறந்த மனிதர் அவர்.அவரைப்போன்று விவசாயத்திற்கு தங்களை அர்ப்பணித்தவர்களை நினைவு கூற முடியவில்லை.

ஒன்று மற்றும் நிச்சயம்.பிற்காலத்தில் விவசாயம் செய்ய ஆட்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள்.நமக்கு தேவையான அளவு உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய முடிவது கடினமே.இன்று விவசாயம் செய்ய சிலர் விருப்பத்துடன் இருந்தாலும் அவர்களின் முன்னேற்றத்திற்கு நிச்சயம் அரசாங்கம் நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டிய தருணம் இது.இல்லை என்றால் இவர்கள் கூட இந்த தொழிலை விட்டு நகரத்துக்கு செல்லும் நிலை ஏற்ப்படும் , மாற்றுத் தொழிலைத் தேடி.பிறகென்ன நாம் எல்லோரும் ‘அந்த ஏழு நாட்கள்’ பாக்யராஜ்-ஐப் போன்று ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டியது தான்.ஆனால் நாம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம்.நல்லதே நடக்கும்.அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்வோம்.

விவசாயம் செழிக்க வேண்டும்.விவசாயி முன்னேற வேண்டும்.அங்கே ஏரோடினால்தான் இங்கே காரோடும் என்ற அந்தக்கால பழமொழியை மறவோம்.

வாழ்க வளமுடன்.

——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s