எங்களைத் தொந்தரவு செய்யாதீங்கப்பூ

17யப்பா சாமி..இந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் என்று ஒன்று இருக்கிறதே , பல நேரங்களில் நம்மை எரிச்சல் அடையச் செய்கிறது.நல்ல வேலை நான் தனியாகத்தான் வந்தேன் இரு வாரத்திற்கு முன்பு  சேலத்தில் இருந்து பெங்களுருக்கு.ஏற்கனவே சேலத்தில் ஒரு மணி நேரம் தாமதம்.12:30-க்குத்தான் பேருந்து சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பியது.இதில் நான் வந்தது அரசு விரைவுப்பேருந்து வேற.சுமார் காலை 3:30 மணிக்கு தனியாக ஒரு காட்டிற்குள் இருக்கும் ஒரு ஹோட்டல்-ல் (அதை அப்படித்தான் அவர்கள் சொல்கிறார்கள் , சாப்பிட்டு பாருங்கள் அப்புறம் தெரியும்) பேருந்தை நிறுத்தினார் மதிப்பிற்குரிய ஓட்டுனர்.இவ்விருவரும் பேருந்தை நிறுத்தி விட்டு சென்றவுடன் வந்தான் பாருங்கள் ஒரு அறிவு ஜீவி.பேருந்தின் அனைத்து பகுதியிலும் ஒரு கட்டையை வைத்து வேகமாக அடித்துக்கொண்டே சொல்கிறான் இப்படி “இங்கே பேருந்து 10 நிமிடம் நிற்கும் , சீக்கிரம் வந்து டீ , காப்பி குடித்து விட்டு போங்க” என்று.கிட்டத்தட்ட பேருந்தில் இருந்த அனைவரும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தோம் அந்த நேரத்தில்.அவன் கட்டையால் பேருந்தை அடித்த சத்தத்தால் அனைவரும் முளித்துக்கொண்டோம்.முளித்துக்கொண்டாலும் பரவாய் இல்லை.இவன் போட்ட சத்தத்தில் பயந்து போய்த்தான் முளித்துகொண்டோம்.நம்ம ஊருல விருக்குனு முழிச்சுட்டேன் என்று சொல்வதுண்டு.அதே ரகம் தான் இங்கே நான் சொன்னதும்.அதிக கோபத்துடன் பேருந்தில் இருந்த சிலர் அவனை பார்த்து கேட்டோம் “டேய் உனக்கெல்லாம் அறிவே கிடையாதா” என்று.அவன் அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லை.பேருந்தில் நல்ல வேலை குழந்தைகள் இல்லை.இருந்திருந்தால் அவ்ளோதான்.

தனியார் டிராவல்ஸ் ஓட்டுனர்களும் ஓட்டல்களில் நிறுத்துகிறார்கள் , இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் இதை போன்று மக்களை தொல்லை செய்யக்கூடிய ஹோடேல்களில் எல்லாம் அவர்கள் நிறுத்துவது இல்லை. தரமான ஹோடேல்களில் நிறுத்தினாலும் பயணிகளை அந்த ஹோட்டல் ஊழியர்கள் இப்படி எல்லாம் சத்தம் போட்டு டீ,காபி குடிக்கச் சொல்வதில்லை. தயவு செய்து எங்களை தொந்தரவு செய்யாதீங்கப்பூ.

பிறகு விசாரித்துப் பார்த்தால்தான் தெரிகிறது , இந்த ஓட்டல்காரங்க எல்லாம் அரசாங்கத்துக்கு பணம் கட்டுகிறார்களாம். அவுங்க அவுங்க ஓட்டல்களில் பேருந்தை நிறுத்த.ஓட்டுனர் அங்கே நிறுத்தாமல் சென்றால் அவர்களுக்கு மெமோ அது இதுன்னு கொடுத்துவிடுவாங்கலாம்.நமக்கேன் வம்பென்று அவர்களும் நிறுத்தி விடுகிறார்கள் , நமக்குத்தான் இம்சையிலும் இம்சை பெரிய இம்சையாக இருக்கிறது.இதை எல்லாம் அரசாங்கம் சரி செய்தால் நல்லாருக்கும்.

அது சரி…அது ஏம்ப்பா நான் போகும் பேருந்தில் மட்டும் எப்பொழுதும் பிரச்னை.ஜோசியம் பார்க்கணும் போலிருக்கு மக்களே 🙂

——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to எங்களைத் தொந்தரவு செய்யாதீங்கப்பூ

  1. maragatham says:

    enga mutti pathaalum arasu vivkarathildhan mudiyum..arasu kaiyil dhan anaithum iulladhu..

    Liked by 1 person

    • ஆம்.ஆனால் இது போன்ற மக்களுக்கு தொந்தரவு தரக்கூடிய விசயங்களில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s