கடவுளைத் தேடியொரு பயணம்

29கடவுள் நம்பிக்கை , கடவுள் நம்பிக்கையின்மை , ஆத்திகன் , நாத்திகன் என்று இதுபோன்று எந்தத் தலைப்பில் வழக்காடுமன்றமோ , ஒரு விவாத நிகழ்ச்சியோ நடத்தினால் ஒரு மாதம் வரைக்கும் கூட நிகழ்ச்சியை கொண்டுபோகலாம்.இரண்டு தரப்பிடம் இருந்தும் போதிய அளவுக்கு தகவல்களை அள்ளிவிட்டு சண்டையிடுவார்கள்.நமக்கேன் வம்பு , எப்போவாவது இது போன்ற நிகழ்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அப்படியே போகவேண்டியதுதான்.கடவுள் இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் விவாதிக்க நுண்ணறிவுத் திறன் அவசியம்.அதுக்கும் நமக்கும்(என்னைக் குறிப்பிட்டேன் ) வெகுதூரம்.”உனக்கென்ன விருப்பமோ அதை நீ செய்” என்ற பாணியில் பிரயாணிக்க வேண்டியதுதான். அவரவர் விருப்பங்கள் அவரவர் உரிமை.விமர்சிக்கப்பட வேண்டியதல்ல.

இங்கே இரண்டு தரப்பிற்கும் உள்ள பிரதான பிரச்சினையே “நம்பிக்கை” என்னும் ஒற்றைவார்த்தை தான்.கடவுள் இருக்கிறார் என்பவன் அவனுக்கும் மீறிய சக்தி ஒன்று இருப்பதாக நம்புகிறான் , இல்லை என்பவன் அது போன்ற நம்பிக்கையே மூடத்தனம் என்றுரைக்கிறான்.ஆனால் இன்று வரை இதற்கான விடை கிடைத்ததாகத் தெரியவில்லை.பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் போன்றவர்கள் எல்லாம் இதில் கரைத்துக் குடித்து விட்டார்கள்.

பெரும்பாலான நண்பர்களைப் போன்றே நானும் தெய்வ வழிபாடு உள்ளவன்தான். நாம் கோவிலுக்குச் செல்வதே நம் சுமைகளை சற்று இறக்கி வைப்பதற்காகத்தான்.கடவுளிடம் முறையிட்டுவிட்டு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் திரும்பி வருகிறோம்.

ஆனால் கடந்த சில நாட்களாக கோவில்களில் நான் காணும் காட்சிகள் என்னையும் இது போன்ற விவாதங்களில் பேச வைத்துவிடுமோ என்றஞ்சுகின்றேன். இப்பொழுதெல்லாம் கோவிலுக்குச் செல்ல வேண்டுமானால் பாக்கெட் நிறைய பணத்துடன் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இன்றைக்கு கடவுள் கமெர்சியல் ஆக்கப்பட்டிருக்கிறார்.கோவிலுக்குள் நுழைந்தாலே போதும் , அர்ச்சனை , ஆசீர்வாதம் என்ற பெயர்களில் நாம் கேட்காவிட்டாலும் பூசாரிகளோ , அர்ச்சகர்களோ அவர்களாகவே அதை எல்லாம் செய்து விட்டு இவ்வளவு கொடுங்கள் என்று தயக்கமின்றிக் கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்கள்.கோவிலாயிற்றே , நாமும் அங்கே இவர்களிடம் விவாதம் செய்ய முடிவதில்லை.இறைவனிடம் ஆசி பெற இவர்கள்தான் இடைத்தரகர்கள்.முன்பெல்லாம் அப்படி இல்லை.இவர்களிடம் ஆசி வாங்கினால் ஆண்டவனிடம் ஆசி வாங்கியமைக்குச் சமமாகக் கருதப்பட்டதொரு காலம்.

சென்ற வாரம் கூட நான் ஒரு கோவிலுக்குச் சென்றிருந்தபொழுது கிட்டத்தட்ட என் பாக்கெட்டில் இருந்து பணத்தை பிடுங்கிக்கொண்டு அர்ச்சனை செய்தது போன்ற எண்ணம்தான் எனக்கும் என்னுடன் வந்திருந்த உறவினர்களுக்கும் ஏற்பட்டது .அவ்வளவு குறியாய் இருக்கிறார்கள் காசு விசயத்தில்.இதில் இரண்டு பூசாரிகள் வெட்டு குத்து ரேஞ்சுக்கு அடித்துக்கொண்டார்கள் கோவிலுக்குள்ளே.பார்க்கவே சங்கோஜமாக இருந்தது.இதை எல்லாம் செய்துவிட்டுத்தான் நீ என்னைப் பார்க்க வர வேண்டும் என்றா கடவுள் எழுதிவைத்திருக்கிறார் என்றெல்லாம் யோசிக்கத்தோன்றுகிறது.

இதை எல்லாம் பார்க்கும் பொழுது கோவிலுக்குச் சென்றுதான் கடவுளைப் பார்க்க வேண்டுமா , தட்சணை கொடுத்துத்தான் நம் குறையை அவரிடம் சொல்லவேண்டுமா ,கடவுள் என்பது நம்பிக்கைதானே , அந்த நம்பிக்கையை வீட்டில் கடவுளை வழிபட்டுக்கூட ஏற்படுத்திக்கொள்ளலாமே என்றெல்லாம் யோசிக்கத் தோன்றினாலும் அதைச் செய்ய மனம் இடம்கொடுப்பதில்லை. ஒரு சில நல்ல கோவில்கள் இருந்தாலும்கூட பெரும்பாலும் கடவுள் இன்று கமெர்சியல் வடிவத்திலேயே மக்களுக்குக் காட்சியளிக்கிறார் என்றே தோன்றுகிறது.என்ன செய்ய , அது அவர் பிழை அல்ல.இந்த நொடி வரை அதே பழைய நம்பிக்கையுடன்தான் இருக்கிறேன். காலம்தான் பதில் சொல்லும்.பார்ப்போம்.


——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s