கல்வி என்பது பணத் தேவைக்கா அல்லது நற்குணங்களுக்கா ?

28நண்பர் ஒருவர் உறவினர் வீட்டிற்குச் சென்றபொழுது எங்கே வேலை செய்கிறார் என்பதை விசாரித்திருக்கிறார் உறவினர். இவரும் தான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியராக பணிபுரிவதாகக் கூறியிருக்கிறார்.”என்னப்பா நீ எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் அல்லவா படித்தாய் , பிறகெப்படி இந்த வேலையில் சேர்ந்தாய்” என்பதே அவரின் அடுத்த கேள்வியாக இருந்தது.இவரும் ஏதோ சொல்லிச் சமாளித்து விட்டார்.

இந்த நண்பரைப்போன்றவர்கள் இங்கே நிறையப்பேர் உள்ளார்கள்.படித்த படிப்பொன்று , பார்க்கும் வேலையொன்று. படித்த அந்த நான்கு வருட படிப்பு எதற்கும் பயனற்றதாகிறது.எந்தத் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் நேசிக்கப்படுவது பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியர் ஆக வேண்டும் என்பதே.இதில் தவறொன்றும் இல்லை.இங்கே நல்ல சம்பளம், வெளிநாட்டுப் பிரயாணங்கள் என்று சகல வசதிகளும் கிடைக்கிறது.இதை தேர்ந்தெடுப்பதற்கு இன்னுமொரு காரணம் மற்ற பொறியியல் துறைகளில் அவ்வளவாக இவர்கள் வாங்குவதைப் போல் உடனடியாக பெரிய தொகையை எல்லாம் பார்க்க முடியாது.ஆனால் ஒரு மூன்று வருடங்கள் கொஞ்சம் சமாளித்து விட்டால் அவர்கள் எல்லாம் என்றும் பயமில்லாமல் நிச்சயம் இருக்கலாம் நல்ல சம்பளத்துடன் .IT துறையில் அப்படி எல்லாம் இல்லை.எப்பொழுதும் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையிலேயே பெரும்பாலானோர் இந்தத் துறையில் பணிபுரிந்துகொண்டுள்ளனர்.

மற்ற துறைகளில் எல்லாம் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் கல்லூரிகளிலும் கூட அவ்வளவாக செய்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.அடிப்படைக் கல்வி என்பது வெறும் பாடம் நடத்துவதை கவனித்தலில் மட்டும் இல்லை.செய்முறைக் கல்வி மிக அவசியம்.சிலர் புரிந்து கொண்டு படிக்கின்றனர் , பலர் மனப்பாடம் செய்து ஏதோ தேர்ச்சி பெற வேண்டுமே என்று படிக்கின்றனர்.ஒரு எலக்ட்ரிகல் இஞ்சினீரிங்க் படித்த மாணவனிடம் அத்துறை சார்ந்த சந்தேகம் ஏதாவது கேட்டுப்பாருங்கள் , கிட்டத்தட்ட பாடப்புத்தகத்தில் என்ன இருக்கின்றதோ அதே கோணத்தில்தான் அவனிடம் இருந்து பதில் வரும்.இதுவே செய்முறைக் கல்வியை சிறப்பாகப் பெற்றிருந்தவனாக இருந்தால் அவன் பதில் எடுத்துக்காட்டுடன் இருக்கும்.இதுதான் வித்யாசம்.

இங்கே கல்வி முறையைக் குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை.கல்வி முறை மாற வேண்டுமானால் அது ஒன்னாம் வகுப்பில் இருந்தே மாற்றியமைக்கப் பட வேண்டும்.இன்று மாணவர்களை மதிப்பெண்களை நோக்கிப் பயணிக்க வைக்கின்ற பள்ளிகள் தான் நிறைய இருக்கின்றனவே தவிர செய்முறை அது இது என்று கல்வி கற்ப்பிக்கும் பள்ளிகளைத் தேடத்தான் வேண்டும்.பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களைப் பார்த்தால் நமக்கெல்லாம் பாவமாகத்தான் இருக்கிறது.என்ன செய்ய , அப்படியே படித்தாக வேண்டிய கல்வி அமைப்பே இன்றுவரை உள்ளது.

எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஒருவன் கற்ற கல்வி என்பது வெறும் பணம் சம்பாதிக்கும் கருவியாக மட்டும் இல்லாமல் நல்ல பண்புகளையும் அவனுக்கு கற்றுத்தந்திருக்க வேண்டும்.பண்பில்லா மனிதனிடம் எவ்வளவு சொத்துக்கள் இருப்பினும் அவன் பெற்ற கல்வியினால் எப்பயனையும் அவன் பெறவில்லை என்பதே நிதர்சனம்.

——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

 

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s