குழந்தைகள கொஞ்சம் சூதானமாப் பாத்துக்கோங்கப்பா.

22இப்போதெல்லாம் குழந்தைகள் ஊடகங்களைப் பார்த்துக் கெட்டுப்போகிறார்களோ இல்லையோ பொது இடங்களில் நிகழும் சில ஒழுக்கக்கேடுகளைப் பார்த்தால் நல்ல குழந்தை கூட கெட்டுப்போகும் அளவுக்கு இன்று கலாச்சாரச் சீரழிவுகள் நடந்தவண்ணம் உள்ளன. காதல் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று யாரையேனும் பார்த்துக் கேட்கணும் போலிருக்கிறது.காதல் தெய்வீகமானது , புனிதமானது என்றெல்லாம் சொல்லியதொரு காலம்.ஆனால் அதற்க்கின்று பொருள் மாறியிருக்குமோ என்ற சந்தேகம் சந்தேகமில்லாமல் எழுகிறது.குழந்தைகளை வார இறுதி நாட்களில் ஒரு பூங்காவிற்க்குக்கூட அழைத்துச் செல்ல முடிவதில்லை.பயத்துடனே செல்ல வேண்டிய நிலை.

கோடை விடுமுறையில் பையனை அருகில் இருக்கும் ஒரு பூங்காவிற்கு மாலை நேரத்தில் விளையாட அழைத்துச் சென்றேன்.அனுமதி ஒன்றும் இலவசம் இல்லை.நுழைவுக்கட்டணம் கொடுத்துத்தான் செல்லவேண்டும்.நுழைந்தவுடன் பார்த்தால் எங்கும் காதலர்கள்(அப்படித்தான் அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்).உண்மைக் காதலர்கள் என்றால் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.சற்று நாகரீகமாகவே நடந்துகொள்வார்கள்.இங்கே பிரச்சனை அதுவல்ல.இது போன்ற பூங்காக்களில் நுழைவுக்கட்டணம் கொடுத்து வந்து உட்கார்ந்துகொண்டு தங்களை காதலர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவ மாணவிகளே.நிச்சயம் உண்மைக் காதலர்களாக இருக்க வாய்ப்பில்லை.தங்கள் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளவே இது போன்ற பூங்காக்களை தேடி வருகிறார்கள்.

எனது மகன் சிறிது நேரம் ஊஞ்சலில் விளையாட ஆசைப்பட்டதால் நானும் அவனுக்கு சிறிது நேரம் ஊஞ்சலை ஆட்டிக்கொண்டிருந்தேன்.எங்களுக்கு நேரெதிரே இரு காதல் ஜோடிகள்(?).அடடா சாமி , என்னென்ன அட்டகாசங்கள் , என்னால் ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை , நாமே மகனுக்கு இது போன்ற கலாச்சார அவலங்களை குழந்தைப் பருவத்திலேயே காட்டிவிட்டது போன்றதாகி விடுமென்று ஒரு சில நிமிடங்களில் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.மற்ற விளையாட்டுப்பகுதியிலும் இதே அவலங்கள்தான்.காசு கொடுத்துவிட்டு வந்து கருமத்தைப் பார்ப்பதைப் போல் ஆகிவிட்டது.இவர்களைப் போன்றவர்களால் காதல் என்ற வார்த்தைக்கும் , நிஜக் காதலர்களுக்கும் களங்கம்தான்.நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டியதை எல்லாம் பொது இடங்களில் நடத்தி விட்டு அதற்குப் பேர் காதல் என்றால் சற்று அருவருப்பாகத்தான் இருக்கிறது.

இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக கலாச்சாரச் சீரழிவுகள் நடந்து கொண்டிருக்கிறது.அன்றொரு நாள் ஊரிலிருந்து என் அக்கா வந்திருந்த பொழுது , ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்மணி(?) புகைத்துக்கொண்டு சென்றதைப் பார்த்து ஒருகணம் அங்கேயே நின்றுவிட்டார்.அதெல்லாம் அவர்களுக்குப் புதுமையிலும் புதுமை அல்லவா.அதுதான் அவரின் வியப்பிர்க்குக் காரணம்.பெங்களூர் போன்ற நகரங்களில் இங்கே குறிப்பிட்ட கலாச்சார அவலங்கள் சர்வ சாதாரணமாக நாள்தோறும் நம் கண்முன்னே நடந்தவண்ணம் உள்ளன.குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லவே சற்று பயமாக உள்ளது.சமூக சீர்திருத்தம், பொதுவுடைமை அது இதுவென்று பேசுவோர்களுக்கு இது போன்ற கலாச்சாரச் சீரழிவைப் பற்றியெல்லாம் யோசிக்க நேரம் கிடைப்பதில்லை.

இதை எல்லாம் பார்த்தால் , கிராமத்தில் இருந்து விட்டால்கூடப் பரவாய் இல்லை என்றுகூடத் தோன்றுகிறது.இது போன்ற பெருநகரங்களில் குழந்தைகள் வளர வளர ஒருவித பயம் நம்மைத் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது.இன்றைக்கே இப்படியென்றால் நாளைய தலைமுறை என்னவெல்லாம் சந்திக்கக் காத்திருக்கிறதோ என்ற கேள்வி சந்தேகமின்றி எழுகிறது.கொழந்தைகள கொஞ்சம் சூதானமாப் பாத்துக்கோங்கப்பா 😦

——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s