சிறகடித்துப் பறக்கும் வயசு

25அது 1998-ஆம் வருடம்.பள்ளிப்படிப்பை முடித்தாகிவிட்டது.பொறியியல் படிப்பிற்கும் விண்ணப்பம் அனுப்பிவிட்டோம்.நண்பன் ஒருவன் கோயம்புத்தூர் P.S.G கல்லூரியில் M.Sc.சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஐந்து வருட கோர்ஸ் ஆரம்பிக்கப்போவதாக தகவல் கூறினான்.பிறகென்ன , பள்ளி , அதை விட்டால் வீடு என்று அடிபட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு கொஞ்சம் சிறகடித்துப் பறக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது :-).நண்பர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து கோயம்புத்தூர் சென்று P.S.G கல்லூரியில் இந்த படிப்பிற்கான விண்ணப்பம் வாங்கி வரலாம் என்று முடிவெடுத்தோம்.

அன்று வரை வெளியுலகம் அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை எங்கள் கூட்டத்தில் இருந்த பெரும்பாலான நண்பர்களுக்கு.வீட்டில் பெற்றோர்களிடம் அனுமதி வாங்கிவிட்டு ஈரோட்டில் இருந்து பேருந்தில் கோயம்புத்தூருக்கு பயணித்தோம்.கல்லூரிக்கும் சென்று விண்ணப்பத்தையும் வாங்கிவிட்டோம்.விண்ணப்பத்தை வாங்கிவிட்டு நான் கூறியதைப் போல் பல இடங்களில் சிறகடித்துப் பறந்துவிட்டு கடைசியில் ஒரு பேருந்தில் கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம்.இங்கிருந்துதான் மீண்டும் ஈரோடு செல்ல வேண்டும்.அனைவரின் விண்ணப்பத்தையும் ஒரே பையில் போட்டுவிட்டு ஒவ்வொருவரும் பையை சிறிது நேரம் மாறி மாறி வைத்திருந்தோம் கோயம்புத்தூர் பேருந்து நிலையம் வரும் வரை.

பேருந்து நிலையமும் வந்தாகிவிட்டது , அனைவரும் இறங்கிவிட்டோம்.அடுத்து ஈரோட்டிற்கு செல்ல பேருந்தைத் தேட வேண்டும் என்ற நோக்கில் நடந்து செல்லும்போது நண்பன் ஒருவனிடம் விண்ணப்பப் பை எங்கே என்று கேட்கும்பொழுதுதான் தெரிந்தது அதை நாங்கள் வந்த பேருந்திலேயே எங்கள் அஜாக்ரதையால் தவற விட்டுவிட்டோம் என்று. ஒருவனைக் கேட்டால் இன்னொருவனிடம் கொடுத்தேன் என்கிறான், அவனைக் கேட்டால் இன்னொருவனிடம் கொடுத்தேன் என்கிறான். எப்படியோ தொலைந்து விட்டது. பேருந்து இன்னும் நின்றுகொண்டிருக்கிறதா என்று காண முற்ப்பட்டபொழுது எங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.திரும்பவும் கல்லூரி சென்று அனைவருக்கும் விண்ணப்பம் வாங்க பணம் இல்லை.மிகுந்த வேதனையுடன் வீடு திரும்பினோம்.

இது எங்களின் கவனக்குறைவினால் ஏற்பட்டதென்றுமட்டும் எங்கள் மண்டைக்குத் தோன்றினாலும் திரும்பி வருவதைத் தவிர வேறு வழி இல்லை.எதற்காக சென்றோமோ அந்த வேலை முடியவில்லை.திரும்பி வந்துவிட்டோம்.பெற்றோர்களிடம் விண்ணப்பத்தை கல்லூரியிலேயே பூர்த்தி செய்து கொடுத்துவிட்டோம் என்று பொய் சொல்லிவிட்டோம் அனைவரும்.உறுத்தலாகத்தான் இருந்தது.ஆனால் பெற்றோர்களிடம் உண்மையைச் சொல்லி பிற பக்க விளைவுகளை சந்திக்க எங்களுக்குத் தைரியம் இல்லை அப்பொழுது 🙂 [இப்பொழுதும்தான் , என்ன ஒரு வித்தியாசமென்றால் இப்பொழுது பெற்றோர்களுடன் இன்னொரு பிரஜையும் சேர்ந்துவிட்டார் மனைவி என்னும் அந்தஸ்த்துடன் 🙂 ]

இந்த சம்பவத்தை இங்கே விளக்கக்காரணம் , என்ஜாய்மென்ட் என்பது வாழ்க்கைக்கு முக்கியம்தான்.ஆனால் இது போன்ற தருணங்களில் அல்ல.எவ்வளவு பெரிய தவறு செய்தோம் என்பதை அன்று உணர்ந்தோம் நாங்கள்.இங்கே இதை ஒத்த இன்னொரு முக்கிய விசயத்தையும் சொல்லியாக வேண்டும். தவறு நடந்துவிட்டால் அந்தத் தவறை உணருங்கள் , இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்து இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நிச்சயம் நகர வேண்டிய கட்டாயம் உள்ளது.அதை விட்டுவிட்டு பழைய நிகழ்வுகளையே நினைத்துக்கொண்டு அடுத்தகட்டத்தைப் பற்றி சிந்திக்காவிடில் எந்தவொரு பலனும் இல்லை.ஆண்டவன் எதைச் செய்தாலும் வேறு ஏதோ ஒரு காரணத்திற்க்காகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கிப் பயணியுங்கள். எப்பொழுதும் நடந்ததையே நினைத்து வாழ்க்கையை வீணாக்குவது எந்த வகையிலும் பயன் அளிக்காது.

இந்த பகவத் கீதை பொன்மொழிகளை அவ்வப்போது நினைத்துக்கொள்ளுங்கள் – “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்”.

——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s