தகவல் தொழில் நுட்பக் கோளாறு

20இந்த சாப்ட்வேர் வேலை மட்டும் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் படித்த பல பேர் நிச்சயம் ஸ்தம்பித்துப் போய் இருப்பார்கள். ஏதோ கடவுள் புண்ணியத்தில் நமக்கெல்லாம் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கே என்ன நடக்கிறது என்று எங்களுக்கு மட்டும் தான் தெரியும் , அத விடுங்க 

இங்கே வேலை செய்யும் சில நண்பர்களை பார்த்தால் சில நேரங்களில் எனக்கோர் கேள்வி எழுந்துகொண்டே இருக்கும்.மேட்டர் என்னன்னா இந்த மக்கள் கம்பெனி-ல அவர்களுடைய ID -கார்டை தொங்கவிட்டுக்கொண்டால் பரவாய் இல்லை.அட வாகனத்தில் செல்லும் போது தொங்கவிட்டுக்கொண்டு சென்றால் கூட பரவாய் இல்லை[ நான் அந்த ரகம் தான் , சொல்லிவிடுகிறேன் , இல்லை என்றால் என் அருமை நண்பன் எவனாவது விவாதத்திற்கு வந்து விடுவான் ].என்ன கொடுமைன்னா தனியார் ட்ராவல்ஸ்-ல போறப்ப கூடவா கம்பெனி ID- கார்டை போட்டுக்கொண்டு போவது.சமீபத்தில் பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்கு KPN ட்ராவல்ஸ்-ல பயணம் செய்தேன்.பேருந்திற்காக காத்திருந்த பொழுதுதான் அங்கே இக்காட்சியை பார்க்க முடிந்தது.மணி இரவு 11.ஒரு நாலஞ்சு பேர் இருக்கும் , அப்பொழுது கூட அவங்க கம்பெனியின்பால் கொண்ட பற்றினால் ID-கார்டை கழட்டவே இல்லை பேருந்தில் ஏறும் வரை.அதற்குப்பின் கலட்டினார்களா என்றெல்லாம் எனக்குத் தெரிய வில்லை.தெரிந்து கொள்ளவும் விரும்ப இல்லை , அது என் வேலையும் இல்லை.

இதை நம்ம ஆங்கிலத்தில் “Too Much” என்று சொல்லுவோம். கழுத்தில் தொங்குவதைக் கூடவா அவர்கள் மறந்து விடுவார்கள். கம்பெனியின்பால் கொண்ட பற்றா இல்லை நம்மை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்றா என்று தெரியவில்லை. பல முறை நான் பேருந்தில் பயணம் செய்யும் போது பார்த்த நிகழ்வுதான் இது.சரி , எவன் எக்கேடு கேட்டால் நமக்கென்ன , இதெல்லாம் அவனவன் பிரச்னை கதிர்வேல் , நீங்க ஏன் வருத்தப்படுறீங்க என்று கூட நீங்கள் கேட்கக்கூடும்.தெரியலீங்க ஏதோ ஒரு உறுத்தல் , அவ்ளோதான்.சாப்ட்வேர் வேலை இன்று நம்மை உச்சத்தில் வைத்திருக்கும் , நாளை அமெரிக்காவில் ஒரு பிரச்சனை என்றால் இங்கு நம் வேலைக்கும் பிரச்னைதான்.அதனால் சற்றே அடக்கி வாசிப்போமே என்ற எண்ணத்தில் தான் சொல்கிறேன்.வேறொன்றுமில்லை. யாரையும் புண்படுத்தும் நோக்கிலும் இதை எழுதவில்லை.

——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s