தட்டிக் கேட்கும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

14சில மாதங்களுக்கு முன் நானும் என் உறவினரும் ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு பேருந்தில் பயணித்தோம்.இரவு 10:30 மணி.பேருந்து புறப்பட ஐந்து நிமிடங்களுக்கு முன் பேருந்தில் இருந்த சக பயணி ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் இருந்தார்.சிறிது நேரத்திற்கு பின் பிரச்சனை என்னவென்று தெரிய வந்தது.நடத்துனர் பேருந்தில் உள்ள அனைத்து இருக்கைக்குக் கீழும் இரண்டு/மூன்று பெரிய பெட்டிகளை வைத்திருந்தார்.அதற்கும் டிக்கெட் கொடுத்திருந்தே ஆக வேண்டும்.ஏனென்றால் அரசுக்கு இதுவும் வருமானமே.ஆனால் பயணிகள் கால் வைத்து அமர சிரமப்படுவார்கள் என்பதை சிறிதளவும் யோசிக்கவில்லை.

சண்டையிட்டுக்கொண்டிருந்த பயணி குழந்தையுடன் வேறு வந்திருந்தார். அவரின் கோபம் மிகவும் நியாயமானதே.ஆனால் பேருந்தில் இருந்த வேறு எவரும் நடத்துனரை கேள்வி கேட்கவே இல்லை.பிரச்சனை சற்று தீவிரமடையவே நானும் சரி கேட்டுப்பார்ப்போம் என்று நடத்துனரை கேட்டேன்.என்ன சார் அவர் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டேன் நடத்துனரிடம்.அவர் எங்கேயோ மழை பெய்வதை போல வெறுமனே ஒரு பதிலை சொல்லிவிட்டு நகர்ந்தார்.தம்பி என்னை ஒன்றும் கேட்காதீர்கள்.என் மேலதிகாரிதான் வைக்கச்சொன்னார் அதனால் வைத்தேன் , வேண்டுமானால் நீங்கள் அவரிடம் கேட்டுக்கொள்ளுங்க என்றார்.

அவர் இந்த பதிலை என்னிடம் சொல்லும்பொழுது பேருந்து கிளம்பி 5 நிமிடம் ஆகி இருந்தது.என்ன ஒரு காமெடி ஆன பதில்.எனக்கு சற்று கோபம் வரவே அவரிடம் கேட்டேன் , “சார் இதை நீங்கள் பேருந்து நிலையித்திலேயே சொல்லி இருந்தால் உங்கள் மேலதிகாரியை பார்த்திருப்போம்.இப்ப சொல்றீங்களே இது உங்களுக்கு வேடிக்கையாக இல்லையா என்றேன்”.பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் வேறு யாரும் இந்த காட்சிகளை திரும்பிக்கூட பார்க்கவில்லை அது வரை.இன்னும் எனக்கும் அவருக்குமான விவாதம் தீவிரமடைய ,கடைசியில் அவர் சொன்னார்.”தம்பி என்னால ஒன்னும் செய்ய முடியாது,நீங்க வேணும்னா சீஎம்(CM) அம்மாவுக்கு ஒரு பேக்ஸ்(fax) அனுப்பி விடுங்க ,என்ன ஏன் தம்பி தொந்தரவு பண்றீங்க ,நான் ஆபிசர் சொன்னதை செய்தேன் ,அவ்வளவுதான்” என்றார் மிகவும் சீறியசாக.

என் மனதுக்குள் கோபம் இன்னும் குறைய வில்லை என்றாலும் அந்த நேரத்திலும் சற்று நகைச்சுவை உணர்வுடன் அவரிடம் சொன்னேன் எங்களுக்கே உரித்தான கொங்குத் தமிழில் – “ஏனுங் சார் சீஎம் -க்கு பேக்ஸ் அனுப்பி ஒடனே நடவடிக்கை எடுக்க வைக்கிற அளவுக்கு நா பெரியாளா இருந்தா நா எதுக்குங் இங்க அதுவும் கடைசி சீட்ல உக்காந்து இருக்கப்போற…ஏனுங் நீங்க வேற..ச்சும்மா எதாவ்து சொல்லோணும்னு சொல்றீங்கலாங் கண்டக்டர் சார்” என்று அந்த கோபமான தருணத்திலும் சிறு நகைப்புடன் அவருக்கு பதில் தந்தேன்.

ஏனென்றால் எனக்கு தெரியும் நானும் அந்த நண்பரும் இந்த நடத்துனரிடம் பேசி எந்த பயனும் இல்லை என்று… இந்த சீஎம் பேக்ஸ் மேட்டருக்கு நான் கொடுத்த பதிலை கேட்டு அதுவரை காது கேளாதோர் போல் அமர்ந்திருந்த என் சக பயணிகளும் எங்களை திரும்பிப் பார்த்து குபீர் குபீர் என்று சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.ஏனென்றால் அவர்கள் இந்த கிட்டத்தட்ட பதினைந்து நிமிட சண்டை காட்சியில் கவனித்தது இந்த காமெடி சீனை மட்டும் தான்.இவர்கள் நமக்கும் சேர்த்துதானே சண்டையிடுகிறார்கள் என்ற எண்ணம் ஒருவர்க்கும் வரவில்லை.எங்கள் போராட்டம் தோல்வியில் முடிந்திருந்தாலும் தட்டிக் கேட்கும் தைரியம் எனக்கும் வந்தது சற்று மகிழ்ச்சியே.

இது ஒரு சின்ன சம்பவம் தான்.இவ்வளவு விரிவாக சொல்லக்காரணம் நம்மில் பல பேர் கேளிக்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சமூக பிரச்னைகளுக்கு சிறிதளவும் கொடுப்பதில்லை.இந்த சம்பவத்தில் கூட முதலில் தட்டிக் கேட்ட அந்த நண்பருக்கு ஒருவர் கூட உடனடியாக ஆதரவாக நிற்கவில்லை.இது போன்ற சிறிய பிரச்னையிலும் கூட.எப்பொழுது நாம் அனைவரும் சமூக/பொதுப் பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து போராடுகிறோமோ அப்பொழுதுதான் நாம் நினைத்த இந்தியாவைக் காண முடியும்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் வேலையில் புரட்சியாளர் ‘சே குவேரா’ அவர்களின் இந்த வரிகள் நினைவில் வருகின்றன – “உலகத்தில் அநீதி கண்டு கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி எழுவாயானால் நாம் இருவரும் தோழர்களே” – எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள் இவை.திருந்துவோம் , திருத்துவோம்.

——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s