திருநங்கையர்களும் மனிதர்கள்தானே ?

23TRANSGENDERS – திருநங்கைகளை ஆங்கிலத்தில் இப்படித்தான் குறிப்பிடுவார்கள்.சமூகத்தில் இவர்களுக்கென்று சொல்லக்கூடிய அளவுக்கு அங்கீகாரம் இதுவரை இல்லை.இவர்களை ஏளனமாக பார்க்கக்கூடிய மனநிலையிலேயே இன்று கிட்டத்தட்ட மக்கள் உள்ளனர்.திருநங்கை என்றால் கடைகளிலும் ட்ராபிக் சிக்னல்களிலும் பணம் வசூலிப்பவர்கள் என்றுதான் தென்னிந்தியாவில் நமக்குத் தெரியும்.ஆனால் வட இந்தியாவில் திருமணம் நடந்தால் இவர்களை வரவழைத்து மணமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கச்சொல்வார்கள்.மற்றவர்களின் ஆசீர்வாதத்தை விட இவர்களின் ஆசீர்வாதமே முக்கியம் என்று கருதுபவர்கள் வட இந்தியாவில் அதிகம்.இது என் நண்பர்கள் சிலர் சொல்லக்கேட்டது. நம் தென்னிந்தியாவில் இவர்கள் இன்னும் அவலமான நிலையிலேயே இருக்கிறார்கள் என்றே சொல்லியாக வேண்டும்.

அரசாங்கத்திடம் இவர்கள் வைத்த நிறைய கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் இருந்தாலும் பெரும்பாலானோர் இன்னும் நாம் “ச்சீ” என்று சொல்லக்கூடிய வேலைகளைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்[என்னால் இதற்கும் மேல் கூற இயலாது].இதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை.எனக்கு மற்ற நகரங்களைப்பற்றி தெரியவில்லை.பெங்களூரில் டிராபிக் சிக்னல்களில் இவர்கள் மக்களிடம் பணம் வசூலிப்பதில் கிட்டத்தட்ட அவர்களை தொந்தரவே செய்கிறார்கள்.இங்கே நிறைய சிக்னல்களில் இவர்களை காணலாம்.நான் ஒட்டுமொத்தமாக இவர்கள் வாழ்க்கை தரம் மாறவேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை , அது அவ்வளவு எளிதல்ல.பொதுமக்களிடம் வற்புறுத்தி பணம் வசூலிப்பது மக்களிடம் இன்னும் இவர்கள் மேல் ஆத்திரத்தைத்தான் ஏற்ப்படுத்தும்.சில நேரங்களில் பணம் வசூலிக்கிறார்கள் என்று சொல்வதை விட , பணம் பிடுங்குகிறார்கள் என்றேகூட சொல்லலாம்.

டிராபிக் சிக்னலில் நின்று கொண்டிருக்கும் பொழுது எனக்கெல்லாம் இவர்கள் வந்தால் ஒரு வித பயம் இருக்கும்.சில்லறை இருந்தால் கொடுத்துவிடும் ரகம் தான் நானும்.பாவம் என்ற மனோபாவத்தில்.சில மாதங்களுக்கு முன்பு அலுவகத்தில் இருந்து வீட்டிற்க்கு மாலை நான்கு மணி சுமாருக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தேன்.அலுவலக அடையாள அட்டையை என்னுடைய பேன்ட் பெல்ட்-ல் தொங்கவிட்டுருந்தேன்.சிக்னலில் நின்றுகொண்டிருந்த பொழுது அங்கே உட்கார்ந்திருந்த இரு திருநங்கையர்கள் அழகான(?) என் முகத்தை அடையாள அட்டையில் பார்த்து விட்டு வந்துவிட்டார்கள் என்னிடம் பணம் வசூலிக்க 🙂 .அங்கே நின்று கொண்டிருந்த எவரிடமும் அவர்கள் செல்லவில்லை.அடையாள அட்டையில் உள்ள என் புகைப்படத்தை பார்த்தவுடன் நமக்கு ஒருத்தன் மாட்டி விட்டான் என்று அவர்களுக்கு தோணியிருக்க வேண்டும்.நம்மள பார்த்தாத்தான் இளிச்சவாயன் என்பது தெளிவாக தெரிந்துவிடுமே :-).பிறகென்ன சில்லறை இல்லாத போதும் நூறு ரூபாய் நோட்டை கொடுத்து அவர்களிடமே சில்லறை வாங்கி கொடுத்துவிட்டு வந்தேன்.நம் மொகர லட்சணம் அப்படி.என்ன செய்ய 🙂

எது எப்படியோ இவர்கள் இன்னும் மக்களின் முன்னால் ஏழனப்பார்வையிலேயே உள்ளனர்.இவர்கள் இப்படி ஆவதற்கு யாரும் காரணமில்லை.ஆண்டவன் இவர்களை அப்படிப்படைத்து விட்டான்.இவர்களின் வாழ்க்கை முறை நிச்சயம் ஒரு மாற்றத்தைக் காண வேண்டும்.அது இவர்கள் மட்டும் நினைத்தால் முடியாத காரியம்.அரசாங்கம் இவர்களுக்காக சில கோரிக்கைகளை நிறைவேற்றி இருந்தாலும் கூட இன்றைய அளவில் அவை எல்லாம் போதாது.இவர்கள் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும் திட்டங்களே இவர்களையும் சமுதாயத்தில் சம அந்தஸ்த்தில் வைத்திருக்கும்.நடக்குமா என்றெல்லாம் தெரியவில்லை , நடக்கும் என்று பிரார்த்திப்போம்.

——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s