மனிதனாக இருப்போம் , நம்மில் மனிதம் வளர்ப்போம்

16ஓர் உண்மைச் சம்பவம்.

இந்தச் சம்பவம் நடந்தது சென்ற வருடம் ஜூன் மாதம்(2013) என்று நினைக்கிறேன்.அன்றைய தினம் பெங்களூரில் பந்த் என்பதால் அன்று விடுமுறை.சந்தோசத்தில்(பந்த் நடத்தியவன் என்னை அடிக்காமல் இருந்தால் சரி) அதிக நேரம் தூங்கியவன் எட்டு மணிக்கு மேல்தான் எழுந்தேன்.ஆனால் நடைப்பயிற்சியை மறக்கவில்லை.வழக்கமாக அன்றைய தினமும் நடைப்பயிற்சி சென்றேன் அன்றாடம் செல்லும் பூங்காவிற்க்கே. பூங்காவின் நுளைவுவாயிலைக்கூட அடையவில்லை நான். நுழைவுவாயில் அடைவதற்குள் ஒரு பெரிய கூட்டத்தைப்பார்த்தேன்.ஏதோ பிரச்சனை என்ற எண்ணத்தில் கூட்டத்தை அடைந்தவுடன் ஒருவரிடம் கேட்டேன் என்னவென்று(நான் தினமும் சந்திக்கும் நண்பர்தான் இவரும்). அவரின் பதில் சற்றே என்னை அதிரவைத்தது.

நடந்தது இதுதான். அங்கே தினமும் நடைப்பயிற்சி வரும் கிட்டத்தட்ட ஐம்பது வயதுக்காரர் ஒருவர் நடைப்பயிற்சி சென்று கொண்டிருக்கும்போதே மாரடைப்பு(Heart Attack) ஏற்பட அங்கே உள்ள ஓரிடத்தில் அமர்திருக்கிறார்.ஆனால் எமன் அவரை விடவில்லை.ஆம் , அவர் அந்த இடத்திலேயே மரணித்துவிட்டார். அவரின் மனைவி மக்களுக்கு தகவல் சொல்லி அவர்களும் வந்து விட்டனர்.அவர் வீடு பூங்காவில் இருந்து சுமார் முன்னூறு மீட்டர் இருக்கும்.பிறகுதான் தெரிந்தது அவர் என் வீட்டருகில்தான் வசித்திருக்கிறார் என்று. அவர்களால் ஒரு ஆம்புலன்ஸ் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை.அவர்களிடமும் வாகனம் இல்லை. ஆதலால் சடலத்தை அங்கிருந்து அவர் வீட்டிற்கு கொண்டு செல்ல முடிய வில்லை.

அங்கிருந்தோர்கள் வெறும் வெட்டிப்பேச்சு மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்களே தவிர உருப்படியான வேலைகள் / உதவிகள் எதுவும் செய்யவில்லை அதுவரை. இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய இன்னுமொரு செய்தி , நான் ‘அங்கிருந்தோர்கள்’ என்று குறிப்பிட்டது மதிப்பிற்குரிய நம் காவல்துறை நண்பரையும் சேர்த்துத்தான்.என்ன கொடுமை.

இன்னும் சிலர் அவனுக்கு போன் போடு இவனுக்கு போன் போடு என்று மட்டும் சொல்கிறார்களே தவிர எவனும் செயலில் இறங்கவில்லை.அந்த ஒட்டு மொத்த குடும்பமும் கதறிக்கோண்டிருக்கிறது.நாமும் அறிவு ஜீவிகள் தானே.நமக்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்வோம் என்று நினைத்துப்பார்க்க வேண்டும். முப்பது நிமிடத்திற்கு மேல் ஆகிவிட்டது.எதுவும் நடக்க வில்லை.பிணமாக அந்த மனிதர் அங்கேயே கிடக்கிறார்.மற்றவர்கள் வெட்டிப் பேச்சை தொடர்ந்துகொண்டே இருந்தனர்.

நானும் சிறிது நேரம் காத்திருந்து விட்டு பிறகு என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.என்னருகில் இருந்த சில நல்லுள்ளங்களிடம் “நாமே தூக்கிக்கொண்டு போகலாமா” என்று கேட்டேன்.மனிதாபிமானம் உள்ளவர்கள் சிலர் இன்னும் இவ்வுலகில் உள்ளனர் என்பதற்கு அவர்களே சான்று.ஒரு ஐந்து ஆறு பேர் அவரை கையாலேயே தூக்கிக்கொண்டு சென்று அவர் வீட்டில் சடலத்தை வைத்து விட்டு சிறிது நேரம் இருந்து விட்டு பிறகு வீடு வந்தேன். அன்றைய என் நடைப்பயிற்சியும் ரத்து. இதில் நான் ஒன்றும் சாதனை செய்ய வில்லை.மாறாக பெருமைப்பட்டுக்கொள்ளவுமில்லை.உங்களிடம் இதை பகிர்வதால் என்னை நான் சிறந்தவன் என்றும் வெளிப்படுத்திக்கொள்ள வில்லை.அப்படி ஒரு அடையாளமும் எனக்குத் தேவை இல்லை.

இந்த சம்பவத்தை இவ்வளவு விரிவாக கூறக்காரணம் கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற ஒரு சமூகத்தில் தான் நாம் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.மற்றவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் முடிந்தவரை நம்மால் இயன்றதைச் செய்ய பெரும்பாலும் யாரும் முற்ப்படுவதில்லை.இது போன்ற துயரம் நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் யாராவது ஒருவர்க்கோ நடந்திருந்தால் எப்படி தும்பப்படுவோம்.அது போன்றதொரு எண்ணம் நமக்கு வர வேண்டும். வந்தால் நாம் பிறர்க்கு உதவி செய்ய நிச்சயம் தயாராவோம். மக்களிடம் வேண்டுவதும் அதுதான்.

பிறர்க்கு உதவி செய்யும் போது ஏற்ப்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவுங்கள் மற்றவர்களுக்கு , அதுவே உங்களை காக்கும் தக்க சமயத்தில்.மனிதனாக இருப்போம் , நம்மில் மனிதம் வளர்ப்போம் எப்பொழுதும். நன்றி.

——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s