முகநூல் குழப்பங்கள்

 

26“Myntra – Live For Likes” என்று இருந்தது அந்தத் துணிக்கடையின் விளம்பரப் பதாகையில்.வாகனத்தில் செல்லும் பொழுது கண்ணில்பட்டது.இவர்களிடம் உடை வாங்கி உடுத்திக்கொண்டால் அனைவருக்கும் பிடிக்கும் என்பதை சூசகமாக விளம்பரத்தில் சொல்கிறார்கள்.வியாபார யுக்தி 🙂

இந்த ” Live For Likes ” வார்த்தைகளைப் பார்த்தவுடன் எனக்கு Facebook ஞாபகம் தான் வந்தது.இங்கேதான் லைக்(Like) என்னும் வார்த்தைக்கு அவ்வளவு மதிப்பு இருக்கிறது.ஆனால் சில நாட்களாக எதற்க்கெல்லாம் Like போடுவது, எதற்க்கெல்லாம் கமெண்ட்(Comment) போடுவது எவற்றை எல்லாம் ஷேர்(Share) செய்வது என்று தெரியாமல் சற்று தடுமாறுகிறேன்.ஏனென்றால் , நண்பரின் நண்பர் ஒருவர் தான் ஆசையாய் வளர்த்த நாய் காணவில்லை என்று ஒரு பதிவைப் போடுகிறார் வருத்தத்துடன் , அதற்க்கு நூறு லைக்குகள் விழுகின்றது.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவனே நாயைக் காணவில்லை என்று வருத்தத்துடன் இருக்கிறான் , அவனின் வருத்தத்தைக் கூட நாம் Like செய்யவேண்டிய கட்டாயம் :-).அட இது கூட பரவாய் இல்லீங்க , இன்னொரு நண்பரின் நண்பர் இப்படி போட்டிருந்தார் தன் status-ல் ” என் அப்புச்சி நேற்று இறந்து விட்டார் , அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்ளுங்கள்” என்று.அட அதற்க்கும் இருநூறு லைக்குகள்.ஏன்டா , அவன் அப்புச்சி செத்ததைக் கூடவா நீங்கள் விரும்புகிறீர்கள்.இதில் கொடுமை என்னவென்றால் அந்த பதிவைப் போட்டவனே அதை லைக் செய்திருப்பது.அப்படின்னா அப்புச்சி சாகனும்னு அவ்ளோநாளா காத்திருந்திருப்பானோ.ஒரு சிலர் “Rest In Peace” என்று Comment-ல் எழுதி இருந்தது மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.அதுதான் தேவையும் கூட.

ஒன்னுமே புரியல போங்கப்பு 😦

பின் குறிப்பு : என் Friends List -ல் இருக்கும் யாரையும் தாக்கி இதை எழுதவில்லீங்கோ 🙂

-அன்புடன் கதிர்@ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s