வாழ்க்கைப் பாதை

24நரசிம்மன் அலுவலகத்தில் இருந்து அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்திருந்தார்.வந்தவுடன் ஒரு கப் காப்பியைக் குடித்து விட்டு தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பதற்காக சற்று அமர்ந்தார்.மனைவி ஏதோ கணவனிடம் ஆர்வத்துடன் கூற அவரும் கணவரருகில் அமர்ந்தார்.நரசிம்மனுக்கு ஏற்கனவே வங்கியில் வாங்கிய வீட்டுக்கடனை எப்படி சீக்கிரம் அடைப்பது என்ற கவலை எந்நேரமும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி.அதற்காக தனது சம்பாத்தியத்தை உயர்த்திக்கொள்ள என்னென்ன வழிகள் உள்ளனவென்று ஆராய்ந்துகொண்டிருப்பவர்.விஷயம் இப்படி இருக்க மனைவி இன்று ஏதோ புதியதாய் ஒரு கனவுடன் வந்தமர்ந்திருக்கிறார் என்பதை மட்டும் நரசிம்மனால் புரிந்துகொள்ள முடிந்தது.”ஏங்க,பக்கத்து வீட்ல இன்னைக்கு ஐந்து லட்சத்துக்கு புதுசா ஒரு கார் வாங்கிருக்காங்க.நம்மளும் கார் வைத்திருந்தால்தானே நமக்கும் சமுதாயத்தில் மரியாதை” என்று நரசிம்மன் நினைத்தது போலவே தன் ஆசையைக் கூறிவிட்டார் கணவனிடம்.”ஏற்கனவே நமக்கு நிறைய வீட்டுக் கடன் இருக்கிறது , அதை முதலில் அடைத்து விடுவோம் , பிறகு நிச்சயம் கார் வாங்கிவிடலாம்” என்பதே நரசிம்மனின் பதிலாக இருந்தது.இருப்பினும் மனைவி சமாதானம் அடையவில்லை , பிறகென்ன விவாதங்களும் விதண்டாவாதங்களும் தான் வீட்டில்.

இங்கே குறிப்பிட்ட நரசிம்மனைப் போன்றவர்கள் நம்மில் பலர் உள்ளனர்.இங்கே குறிப்பிட்ட கார் வெறும் உதாரணம்தான்.தயவுசெய்து நான் பெண்களைத் தவறாக சித்தரிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம்.ப்ராக்டிகலாக நாம் யோசித்துப் பார்த்தால் அவர்களின் ஆசையில் நியாயம் இருப்பதாகவே தோன்றும்.ஆனால் இங்கே அடிப்படை பிரச்சனை என்னெவென்று கூர்ந்து கவனித்தால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரியும்.அதுதான் “ஒப்பிடுதல்”.அவர் அப்படி இருக்கிறார் நாமும் அப்படியே ஆக வேண்டும் என்பது.ஒருவர் சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்த்தில் இருக்கிறார் என்றால் அதே நிலைமையை நாமும் நிச்சயம் பெற முடியும்.ஆனால் அவர் அப்படி இருக்கிறாரே நாம் மட்டும் இதே நிலைமையில் இருக்கிறோமே என்ற ஒப்பீடு செய்யும்பொழுது நீங்கள் உங்கள் சுயமரியாதையை இழக்கிறீர்கள்.உங்களுக்கான அடையாளத்தை இழக்கிறீர்கள்.எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்றாலும் கூட எல்லாவற்றையும் அடைவதற்கு ஒவ்வொரு படியாகத்தான் நாம் அடி எடுத்து வைக்க வேண்டுமே தவிர மற்றவர்களுடன் எப்பொழுதும் உங்களை ஒப்பிடாதீர்கள்.அவர்களின் வாழ்க்கைப் பாதை வேறு , உங்களின் வாழ்க்கைப் பாதை வேறு.

எவற்றை எல்லாம் அடைய வேண்டும் என்ற இலக்கை வைத்துக்கொள்ளுங்கள்.அதை அடைவதற்கு ஒவ்வொரு படியாக நிதானமாக அடி எடுத்து வையுங்கள்.நிச்சயம் அனைத்தும் உங்கள் கைவசமாகும்.மற்றவர்களைப் பார்த்து அவர்களைப் போல் முன்னேற வேண்டும் என்ற வெறியுடன் முன்னேற்றப் பாதையில் பயணியுங்கள்.வெற்றி நிச்சயம் உங்களுக்கே.

பில் கேட்ஸ்-இன் இந்த வரிகள் உங்களுக்காக —— “Don’t compare yourself with anyone in this world…if you do so, you are insulting yourself.”

——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s