குழந்தை வளர்ப்பும் பிற்கால அவதிகளும்

13குழந்தை என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவாயா ? என்று கேட்டார் அம்மா கடையில் இருந்து திரும்பி வந்தவுடன் .அவரின் கேள்வியின் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை.குழந்தைகளின் தேவையையும் அவர்களின் ஆசைகளையும் பெற்றோர்கள் தானே நிறைவேற்றிவைக்க வேண்டும் என்பதே என் பதிலாக இருந்தது அம்மாவின் கேள்விக்கு.அம்மாவின் விளக்கத்தைக் கேட்ட பிறகுதான் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது சற்றே புலப்பட்டது.

அம்மா இவ்வாறு கூறினார்.இப்பொழுது குழந்தை என்ன பொருளைக் கேட்டாலும் அது குழந்தைக்கு அந்த வயதிற்கு தேவைப்பட்டதா என்றெல்லாம் யோசித்துத்தான் வாங்கிக்கொடுக்க வேண்டும்.பக்கத்து வீட்டுக் குழந்தை வைத்திருக்கிறது என்றாலும் கூட அது தேவையான பொருளா என்று பார்க்க வேண்டும்.பக்கத்து வீட்டுக்காரர்கள் குழந்தை அடம் பிடித்ததால் கூட வாங்கிக் கொடுத்திருக்கலாம்.மேலும் , குழந்தை என்ன பொருளை கேட்டாலும் அது என்ன விலையாக இருந்தாலும் உடனே வாங்கிக் கொடுத்து விடாதீர்கள்.அது மேலும் குழந்தைக்கு பெற்றோர்கள் என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுத்துவிடுவார்கள் என்ற மனநிலையை உண்டாக்கிவிடும்.சிறு வயதில் பரவாய் இல்லை.குழந்தைகள் வளர வளர இந்த மனநிலையிலேயே ஆசைப்பட்டதை எல்லாம் கேட்பார்கள் அவர்கள் வயதிற்குத் தேவையற்ற பொருளாய் இருந்தாலும் கூட.அடம் பிடிக்கும் குணத்தை குழந்தைகளிடம் வளர விட்டால் நாம் அவர்களை சரியாக வளர்க்கவில்லை என்பதே அர்த்தம்.

அவர்கள் வளர வளர தங்களை தங்கள் நண்பர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.அவனிடம் அந்தப் பொருள் இருக்கிறது , என்னிடம் இல்லை என்ற கோணத்தில் மனநிலை இருக்கும் அப்பொழுது.இதை எல்லாம் குழந்தை வளர்ந்த பிறகு அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இருப்பது கஷ்டம்தான்.எது கேட்டாலும் கிடைத்து விடும் என்ற மனநிலையை நிச்சயம் சிறு வயதிலேயே மாற்றிவிட வேண்டும் அவர்களிடம் .என்னதான் வசதி வாய்ப்பு இருந்தாலும் கூட தேவையற்றதை தவிர்க்க வேண்டும் என்பதை சிறு வயதிலேயே புரிய வைத்து விட்டால் நிச்சயம் அவர்கள் பிற்காலத்தில் எந்த தடுமாற்றமும் இன்றி வாழப் பழகிக்கொள்வார்கள். வசதி வாய்ப்பு என்பது இன்று நம்மிடம் இருக்கலாம் நாளையே குறையலாம்.ஆக , முடிந்தவரை கஷ்டம் என்றால் என்ன என்பதை அனுபவிக்க வைக்காவிட்டாலும் அதை நிச்சயம் அவர்களுக்கு புரியவைக்க வேண்டிய கடமை பெற்றோர்களையே சேரும்.

குழந்தை ஆசையாகக் கேட்டுவிட்டது வாங்கிக்கொடுத்தால் என்ன என்று மேலே குறிப்பிட்டதை எல்லாம் சிறிதும் யோசிக்கவில்லை நான்.அம்மா கூறிய அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பது எனக்கு அப்பொழுதுதான் விளங்கியது. நம்மையும் இதே அம்மாதானே வளர்த்தார்கள் , நாம் இன்று நன்றாகத்தானே இருக்கிறோம் என்று பிறகுதான் யோசித்தேன்.அம்மா கூறிய அனைத்தும் முழுக்க முழுக்க உண்மையே.இப்பொழுது என்னையும் ஒரு சிறந்த அப்பாவாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்னைப் பெற்றவள் 🙂

——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s