நல்ல மனிதன் -> நீயா , நானா ?

1நண்பர் ஒருவர் குடியிருக்கும் அபார்ட்மென்ட் -ல் அடிக்கடி இரு வீட்டாருக்கு இடையே சண்டை நடைபெறும் என்றும் , காரணம் என்னவென்று அவர்கள் இதுவரை தெரிந்து கொள்ள விரும்பியதில்லை என்றும் ஒருமுறை கூறினார்.இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.நகரத்து வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.பக்கத்து வீட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன , இதுவே நகர வாழ்க்கையின் அடையாளம்.யாரையும் குற்றம் சொல்ல இயலாது.அவனவன் பிரச்சனையே அவனுக்கு அதிகமாக இருக்கிறது .இதில் மற்றவர்கள் விசயத்தில் தலையிட்டு ஏன் மாட்டிக்கொள்ளவேண்டும் என்ற மனப்பான்மை.கிராமத்தில் நிலைமை வேறு.மூலக்காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் நாம் மற்றவர்களிடத்தில் எப்படிப்பட்ட பழக்க வழக்கங்களை வைத்துக் கொள்கிறோம் , மற்றவர்களிடம் உரையாடும் போது எந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகப் படுத்துகிறோம் என்று பல காரணங்களைக் கூறலாம்.பொதுவாக பழகும் முறையும் , பேசும் பேச்சும் நல்லவிதமாக இருந்தாலே இது போன்ற பிரச்சனைகள் ஓரளவு குறைந்துவிடும்.

ஒரு திருமணத்துக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.அங்கே நீங்கள் பார்க்கலாம் , ஆங்காங்கே ஒரு கூட்டம் இருக்கும் , ஒவ்வொரு கூட்டத்தையும் ஒருவர் வலைத்துப்போட்டிருப்பார்.காரணம் , அவர் அனைவரிடமும் பழகும் முறையும் , பேசும்பொழுது அவர் மற்றவர்களிடம் அவர்களுக்கு ஏற்றவாறு தம் பேச்சை வடிவமைத்துக் கொள்வதும்தான்.அதனாலேயே அவர்கள் எங்கே சென்றாலும் அவர்கள் பேச்சைக் கேட்க ஒரு கூட்டம் அமர்ந்துவிடும்.அது காமெடியான கலந்துரையாடலாக இருந்தாலும் , சமூகம் சார்ந்த கலந்துரையாடலாக இருந்தாலும் இவர்களுக்கு என்றும் ஒரு கூட்டம் இருக்கும்.நாமும் கூட இவர்களைப் போன்றவர்களிடம் இருந்து அவ்வப்பொழுது கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

பத்து வருடம் கூட நண்பர்கள் ஒரு தொலை பேசி உரையாடலோ , மின்னஞ்சல் தொடர்போ இல்லாமல் இருக்கலாம்.இருப்பினும் , அவர்கள் நண்பர்களாகப் பழகிய காலத்தில் அவர்களுக்கிடையில் இருந்த பழக்க வழக்கங்கள் , பல மறக்க முடியாத நிகழ்வுகள் அவர்கள் காலம் முழுவதும் அவர்களை மனதளவில் பிரிப்பதில்லை.என்றும் கடந்தகால நினைவில் இருப்பர் , எந்த ஒரு தொடர்பிலும் இல்லாமல் இருந்தாலும்கூட.அதுதான் முக்கியம்.தொடர்பே இல்லாவிட்டாலும் நம்மை ஒருவர் மறவாமல் இருக்கிறார் என்றால் ஏதோ நாம் ஓரளவு மற்றவர்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம் என்று திருப்தியடையலாம்.இருப்பதோ கொஞ்ச காலம் , அதற்குள் ஏன் வீண் வம்பு , விதண்டாவாதம் , சண்டியத்தனம் எல்லாம்? பழக்க வழக்கத்தையும் , வார்த்தை பிரயோகத்தையும் நல்ல முறையில் பயன்படுத்துங்கள்.எப்படிப்பட்ட செல்வந்தராக வாழ்ந்தாலும் பழக்க வழக்கமும் , பேசும் பேச்சும் சரி இல்லையெனில் அவருக்குத் தரும்
மரியாதை வெறும் செயற்கையானதாகவே இருக்கும்.

இன்னுமொரு சந்தேகமும் கூட என்னுள் இருந்தது.ஒருவர் கெட்டவன் என்று நினைக்கும் ஒரு நபரை இன்னொருவர் நல்லவர் என்கிறாரே , அதெப்படி.இப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் – “இனம் இனத்துடன் தானே சேரும்” என்று.பணம் சம்பாதிப்பது முக்கியம்தான் , ஆனால் அதைவிட நல்ல மனிதன் என்று பெயர் வாங்குவது அதைவிட முக்கியம்.நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.பிறகு நல்ல சொந்தங்களும் , பந்தங்களும்,நண்பர்களும் என்றும் உங்களுடனேயே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.வாழ்வது கொஞ்ச நாள் , அதில் எதுக்குங்க தேவையற்ற பிரச்சனைகளும் , நிம்மதியற்ற தருணங்களும் ? மகிழ்ச்சியுடன் இருங்கள் , மற்றவர்களையும் மகிழ வையுங்கள்.வாழ்க வளமுடன்.

———- அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s