விவசாயி மகன்

12இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஊருக்குச் சென்று வரவில்லை என்றால் மனம் அமைதி கொள்வதில்லை.இன்று காலையில்தான் ஈரோட்டில் இருந்து பெங்களூர் வந்து சேர்ந்தேன்.சொந்த பந்தங்களைப் பார்த்துவிட்டு இரண்டு நாள் இருந்துவிட்டு வந்தால்தான் அடுத்த இரண்டு வாரங்கள் இங்கே பிழைப்பு ஓடும்.அப்படி ஆகிவிட்டது.ஒரு விவசாயிக்குப் பிறந்து கிராமப் பின்னணியில் வளர்ந்ததனால் இந்தப் பிணைப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதில் பெருமைதான். சிறு வயதில் கிராமத்தில் அனுபவித்த சந்தோஷங்கள் நகர வாழ்க்கையில் இன்னும் கிடைக்கவில்லை.அதற்காகவே அவ்வப்பொழுது ஊருக்குச் சென்று வரத்தோன்றுகிறது.இன்றைய விவசாயத்தின் நிலைமை மாறிவிட்டது.மாதம் மும்மாரி மழை பெய்த காலம் எல்லாம் போய்விட்டது.மூன்று மாதத்திற்கு ஒரு மழை பெய்தாலே பெரிய விஷயம் இப்பொழுது.அப்புறம் எங்கே விவசாயம் செய்வது,செழிப்பது. அப்பாவுக்கு விவசாயம் செய்வதில் இன்னும் ஆர்வம் இருக்கிறது.ஆனால் முடிவதில்லை.

ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த எவருக்கும் அதன் கஷ்ட நஷ்டம் என்னவென்று நன்கு தெரியும்.சிறு வயது முதல் கண்கூடாகப் பார்த்தவன் நான்.மோடி அரசு பதவி ஏற்றவுடன் விவசாயத்திற்கு பல சலுகைகள் , திட்டங்கள் என்று அறிவிப்புகளை வெளியிட்டார்.அதை எப்படி நடத்திக்காட்டுவார் என்று தெரியவில்லை.என்னைப்போல் என் நண்பர்கள் நிறையப் பேர் விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான்.நல்ல நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்.சிலர் வெளிநாட்டில்.அப்பா செய்த அதே விவசாயம்தான் இன்று எங்களுக்கு வாழ்வு கொடுத்திருக்கிறது.

இதே பின்னணியில் இருந்து வந்த நண்பன் Selva Kumar இன்னுமொரு படி மேலே சென்றுள்ளான். சில வருடங்களுக்கு முன் சொந்தமாக ஒரு ஐ.டி கம்பெனியே ஆரம்பித்து விட்டான்[Greeno Tech Solutions]. இரண்டு தினங்களுக்கு முன் CNBC TV18 தொலைக்காட்சியில் நண்பன் பேசியதைப் பார்த்தேன்.மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். “Microsoft Code for Honor” என்ற ஒரு விருதிற்காக நண்பனின் நிறுவனமும் பங்குபெற்று அவர்களின் தற்போதைய படைப்பான “Rainbow” வை சமர்ப்பித்திருந்தார்கள். அப்பொழுது CNBC TV18 தொலைக்காட்சியால் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுதான் அது[அந்த வீடியோவிற்கான இணைப்பை(link) கீழே கொடுத்துள்ளேன்]. “Code for Honor is Microsoft’s award for solution excellence ” – இதுவே அந்த விருதிற்கான விளக்கம்.”Rainbow” -> நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து விவசாயம் சார்ந்த தகவல் பரிமாற்றம் ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு தளமாக இதை தயார் செய்து வருகிறார்கள்.”Rainbow” இந்தப் போட்டியில் கடைசி சுற்று வரை தேர்வாகி இரண்டாவது இடத்தைப் பிடித்து விருதையும் பெற்றிருக்கிறார்கள். ஒரு ஐ.டி நிறுவனத்தை ஆரம்பித்து விவசாயிகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருவதே இந்தக்காலத்தில் பெரிய விஷயம்.அதை நண்பன் செய்து காட்டிவிட்டான்.சென்ற வாரம் கூட கோயம்புத்தூரில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சியில் கலந்து கொண்டு “Rainbow” வை விவசாயிகளிடம் அறிமுகப் படுத்தியும் 4040 விவசாயிகளை “ரெயின்போ” வில் பதிவும் செய்துவிட்டார்கள் .கூடிய விரைவில் “Rainbow” பிரதம அலுவலகம் சென்றடையும் என்பதில் ஐயமில்லை.இந்த நேரத்தில் நண்பனுக்கும் , நண்பனுடன் தோள்சேர்த்து நிற்கும் அவரின் அலுவலகப் படைக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளத்தோன்றுகிறது.

விவசாயத்தைப் பற்றி நாளைய தலைமுறை அறிந்துகொள்ள இன்று நிறைய புத்தகங்கள் எழுதி வைக்க வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்.இன்றைய தலைமுறைக்கே அவ்வளவு அக்கறை இல்லை எனும்பொழுது நாளைய தலைமுறையைக் குறை சொல்ல முடியாது. அழிவுப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் விவசாயத்தை நண்பனைப் போன்றவர்கள் இன்னும் கொஞ்சம் இழுத்துப் பிடித்திருக்கின்றனர் என்பதில் மகிழ்ச்சி.அரசாங்கமும் இன்னும் கொஞ்சம் அதிகம் அக்கறை காட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது.”வீடு செழித்தால் நாடு செழிக்கும்” – உண்மைதான். ஆனால் இன்றைக்கு விவசாயம் செழித்தால்தான் நாளைக்கு நாடு செழிக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.வாழ்க வையகம்.

வீடியோ இங்கே உள்ளது :

http://m.moneycontrol.com/video/technology/displayinnovative-ideas-at-microsoft-code-for-honour_1127042.html

அன்புடன் கதிர்  @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to விவசாயி மகன்

  1. sasikumar says:

    இயற்கையை-விவசாயத்தை காக்க நகரத்தில் வேலை செய்து கிராமத்துக்கு அனுப்புகிறேன் என்று சொல்லும் இளைஞர்கள், ஒரு முறை உங்கள் கிராமத்து ஏரி, குளங்களை சென்று பாருங்கள். அதன் நீர்வரத்து வழிகள், வாய்க்கால்கள், இன்றைய ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை தெரிந்துகொள்ளுங்கள். ஊரில் காலி இடங்களில் மழையை ஈர்க்கக்கூடிய (வேம்பு, ஆல், அரசு, இச்சி, அத்தி) பாலுள்ள மரங்களை நட்டு வளருங்கள். உங்கள் ஊரை முதலில் பாருங்கள்; மற்றதை அப்புறம் பார்க்கலாம். “பெத்த தாய் அன்னப்பிச்சை எடுக்கறா; மவன் காசிக்கு போய் கோதானம் பன்னுனானாம்” னு சொல்ற மாதிரி சமூக பணிகள் இருக்க கூடாது. ஆற்றையும் மழையையும் நம்பினா உங்க கனவு கனவாவே போய்டும். நீங்க உங்க கிராமத்து வாழ்க்கைக் கனவுக்காக நகரத்துல வேலை செய்யுறீங்க. ஆனா உங்களோட பணி எதோ ஒரு கிராமத்தை/மலைகளை/வனங்களை அழிச்சிட்டு இருக்குங்கற உண்மைய உணரனும்..

    Liked by 1 person

  2. //உங்கள் ஊரை முதலில் பாருங்கள்; மற்றதை அப்புறம் பார்க்கலாம்” – மறுக்கப்படாத உண்மை.நாம் பொதுவாக நாடு சரி இல்லை , நகரம் சரி இல்லை , மாநிலம் சரி இல்லை என்றுதான் சொல்லுகிறோமே தவிர , நம்மையும் நம்ம ஊரையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் வைத்து எதையும் யோசிப்பதில்லை.அதைச் செய்தாலே விவசாயம் முதற்கொண்டு அனைத்தும் சரியாகிவிடும்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s