நல்லதைக் காட்டுங்கள் , அவலங்களை அல்ல.

15மனைவி தோசை சுட்டுக்கொண்டிருந்தார். சமயலறைக்கும் ஹாலுக்கும் அடிக்கடி ஓடிக்கொண்டே இருந்தார்.ஹாலில்தானே தொலைக்காட்சி இருக்கிறது.சீரியல் பயங்கர சப்தங்களுடன் சீரியசான கதைக்களத்துடன் சென்றுகொண்டிருந்தது .மனைவி தோசையும் சுட்டாகனும் , அதே சமயத்தில் சீரியலையும் பார்த்தாக வேண்டும்.இந்தக் காலத்து மனைவிமார்கள் பெரும்பாலானோர்க்கு இருக்கும் தவிர்க்க முடியாத பிரச்சனையாக இது உருவெடுத்து வருகிறதென்றால் அது மிகையல்ல.அப்படி இவர்களை வளைத்துப் போட்டிருக்கிறார்கள் சீரியல் இயக்குனர்கள்.அட , ஆண்கள் நாம் மட்டும்  பார்ப்பதில்லையா என்ன ? நாமும் சிலர் சீரியல்களுக்கு அடிமைதான்.

ஒரு எட்டு வருடங்களுக்கு முன்பு “கோலங்கள்” என்றொரு சீரியல் அக்கா வீட்டிற்கு சென்ற பொழுது பார்க்க ஆரம்பித்தேன்[வேறு வழி இல்லாமல்தான் , பிறகு அதுவே பழக்கம் ஆகியது 🙂 ].அந்தத் தொடர் முடிந்தவுடன் அதே நேரத்தை இன்னுமொரு சீரியல் ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டது.ஐந்து வருடங்கள் ஆகிறது , இன்னும் முடிந்த பாடில்லை.சரி , இவனே சீரியல் பார்ப்பவன் தானே பிறகு எதற்கு இந்தப் புலம்பல் என்று நிச்சயம் கேட்பீர்கள். இந்த ஒரு சீரியலைத் தவிர வேறு எந்த சீரியலையும் பார்த்ததில்லை.இப்பொழுது இதையும் கூடிய சீக்கிரம் நிருத்திவிடப்போகிறேன். இவர்கள் சமூகத்துக்கு நல்ல கருத்தை சொல்கிறார்களா என்ன?.இல்லை.

ஒருவன் ஒரு பெண்ணை நிச்சயம் செய்கிறான் , பிறகு இன்னொரு பெண்ணைக் காதலிக்கிறான் , அவளையே திருமணமும் செய்து கொள்கிறான் , காரணம் கேட்டால் சந்தர்ப்ப சூழ்நிலை என்கிறான் , முதலில் நிச்சயம் செய்த பெண் பல வில்லத்தனங்களைச் செய்து பின்பு மனநோயாளியாகிறாள்.இதற்கிடையில் மணமுடித்த பெண்ணை மாமியார் கொடுமைப்படுத்துகிறார் , நீண்ட நாட்கள் கழித்து மாமியாரே ஒரு சந்தர்பத்தை பயன்படுத்தி முதலில் நிச்சயம் செய்த பெண்ணிற்கே(மனநோயாளி என்று தெரிந்தும்) தன் மகனை திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டுகிறார்.மற்ற கதாப்பாதிரங்களைச்  சுற்றியும் வில்லன்களையும் , வில்லிகளையுமே காட்டுகிறார்கள்.இந்த ஐந்து வருட காலத்தில் சமூகத்துக்கு தேவையான கருத்துக்கள் ஒன்று கூட இருந்ததாக நான் கருதவில்லை.முழுக்குப் போடப்போகிறேன்.

இந்த சீரியல் மட்டும் இல்லை .எந்த சீரியல் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.அதில் நிச்சயம் கள்ளக்காதல் இருக்கும் , நயவஞ்சகம் இருக்கும் , சூழ்ச்சி இருக்கும் , மாமியாரையும் மருமகளையும் அதே பழைய கோணத்திலேயே காண்பித்திருப்பர் , கற்பழிப்பு சம்பவங்கள் இருக்கும் , இன்ன பிற அயோக்யத்தனங்கள் இருக்கும் .இதுவே இன்றைக்கு தொலைக்காட்சிகள் நம் மக்களுக்கு அதிகமாக காட்டுகின்றன.இவர்கள் காட்டும் நிகழ்வுகள் எல்லாம் வெறும் ஐந்து சதவீகிதம் வேண்டுமானால் நாட்டில் நடப்பவையாக இருக்கலாம்.மீதமுள்ள 95 சதவீகிதம் குடும்பங்களில் நல்ல சம்பவங்கள் நிறைய நடக்கின்றன.அவை எல்லாம் இவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா என்ன ? மாமியாரை எப்பொழுதும் வில்லியாகவே காட்டவேண்டுமா என்ன ? நல்ல பெண்ணாக இருந்தாலும் இது போன்ற சீரியல்களைப் பார்த்தால் தங்கள் மாமியாரிடம் கொஞ்சம் ஜாக்ரதையாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணத் தோன்றும்.ஏன் இவர்கள் நல்ல கருத்துக்களை காட்டுவதில்லை ? காரணம் , நல்லவைகளைக் காட்டினால் மக்கள் அழுவதில்லையே , அதுதான்.

இந்தத் தொழிலை நம்பி நிறையப் பேர் இருக்கிறார்கள் , நான் ஒப்புக்கொள்கிறேன்.ஆனால் அவர்களால் சமூகம் நன்மை பெற்றால் என்னைப் போன்றவர்கள் ஏன் இப்படிப் புலம்புகிறோம்.அனைத்து தொலைக்காட்சியிலும் வரும் சீரியல்களில் இருந்து சமூகத்துக்கு சிறிதளவு கருத்துச் சொல்லும் ஒன்றை தேர்வு செய்யச் சொன்னால் , தேர்வு செய்வது கடினம்.குழந்தைகளுக்கு தேவையான , வாழ்க்கைக்கு முக்கியமான விசயங்களில்/நிகழ்ச்சிகளில்  எல்லாம் இவர்கள் பணம் பார்க்க முடிவதில்லை என்பதால் அதிகமாக ஒளிபரப்பப்படுவதில்லை.

குழந்தைகள் சீரியல்களைப் பார்த்துப் பழகிவிட்டால் இன்னும் ஆபத்துதான். நாளைய தலைமுறையை நினைத்தால் நிஜமாகவே பயம் தொற்றிக்கொள்கிறது.நல்ல கருத்துக்களை விதைக்கப் பாருங்கள்.பிறகு நாங்கள் உங்கள் பின் நிச்சயம் வருவோம்.

———- அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s