எங்களை நம்பித்தான் நீங்களும் இருக்கிறீர்கள் , மறந்துவிடாதீர்கள்

13இன்றைக்கு வேறு ஒரு விசயத்தைப் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் , அடுத்த வாரம் வர இருக்கும் சுதந்திர தினம் அதை மாற்றிவிட்டது.இந்த வாரம் ஊருக்குப் போவதால்(நான் மட்டும்) , அடுத்த வாரம் ஊரிலிருந்து சொந்தங்களை பெங்களூர் வரச் சொல்லலாம் என்றுதான் நினைத்திருந்தேன் நேற்றுவரை .ஊட்டுக்காரம்மா திடீர்னு நேத்து அடுத்த வாரம் ஊருக்குப் போலாமான்னு கேட்டாங்க.ஏன்னு கேட்டேன்.அடுத்த வாரம் மூணு நாள் தொடர்ந்து விடுமுறை.அதற்குப்பின் நான் இன்னும் ஒரு மூணு நாள் சேர்த்து லீவ் எடுத்துக் கொள்கிறேன்.ஏனென்றால் மீதம் இருக்கும் இந்த மூன்று நாட்களையும் மேனேஜர் ஆகஸ்ட் முடிவதற்குள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார் என்றார்.நல்ல விசயம்தான்.ஊருக்கு போவதே ஒரு குஷிதானே .

இப்படி திடீர்னு சொன்னா எப்படிம்மா என்று கேட்டேன்.அதற்கு என் மேனேஜர் இன்னைக்குத்தாங்க  சொன்னார்.நான் என்ன செய்ய என்றார்.அப்பொழுதே ஆரம்பித்தது என் மனக்குழப்பம்.வராதா பின்ன , கடைசி நேரத்தில போய் ஊருக்கு போலாம்னா எவங் கூட்டிட்டு போவான்.நாங்கள் இருவர் என்றால் பரவாய் இல்லை , சேலம் போய்க்கூட எப்படியோ சென்று விடலாம் .ஒன்பது மாதக் குழந்தை இருக்கிறதே , பத்திரமாகத்தானே சென்றாக வேண்டும் .  காரும் ஊரில் உள்ளது(இங்கே இருந்தாலும் அதை நான் பெங்களூரில் ஓட்ட என்றைக்கும் விரும்பியதில்லை , அப்படி ஒரு போக்குவரத்து நெரிசல்). அடுத்த வாரம் வியாழக்கிழமைக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. ரயிலில்  டிக்கெட் கிடைக்காது என்பதை ஜோசியம் பார்க்காமலேயே சொல்லிவிடுவேன் நான்.அவ்வளவு அனுபவம்.சரி , தனியார் டிராவல்ஸ்-ல செக் பண்ணிப் பார்க்கலாம் என்று கணினியின் முன் உட்கார்ந்தால் , தலை சுத்தோ சுத்துன்னு சுத்தி எங்கூர்ல இருக்குற நாட்ராயங் கோயில்ல போய் விழுந்துரும் போலிருக்குங்க.

“GOIBIBO” என்றொரு வெப்சைட்.“GOIBIBO” என்று தட்டிய உடனே , “Book Cheap Bus Tickets” என்ற வார்த்தைகளை நீங்கள் பார்க்கலாம்(சீப் எல்லாம் ஒன்றும் இல்லீங்க , மாறாக ஆப்புத்தான்).நானும் இதற்கு முன்பு சில முறை இதில் டிக்கெட் புக் செய்திருக்கிறேன்.கண்டிப்பாக ஒரு சில சீட்டுகள்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டுதான் இந்த வெப்சைட்டிற்குள்  சென்றேன்.”பார்த்தாலே பரவசம்” என்று சொல்வார்களே அப்படி இல்லாமல் , எனக்கு “பார்த்தாலே கலவரம்” என்பது போல் ஆகிவிட்டது.பிறகென்னங்க , நானூறு/ஐநூறு ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் , ஆயிரத்து நூறு , ஆயிரத்து இருநூறு என்று கொடுத்திருந்தால் வேறென்ன வரும்.இதில் உச்சக்கட்ட கோபம் வந்தது எனக்கு எப்பொழுது என்றால் ஒரு ட்ராவல்ஸ் -ல் பெங்களூரில் இருந்து ஈரோடு செல்ல 1750 ரூபாய் என்று கொடுத்திருந்ததைப் பார்த்துத்தான்.இன்னும் கொடுமை என்னவென்றால் , அதிலும் வெறும் இரண்டு சீட்டுகள்தான் மீதி இருந்தது.அதையும் நம் மக்கள் விடவில்லை.மற்ற நாட்களில் எல்லாம் இவர்கள் இப்படி டிக்கெட் விலையை இவ்வளவு அதிகம் உயர்த்துவதில்லை.இது போன்று நீண்ட விடுமுறை நாட்களோ , பண்டிகை நாட்களோ வந்துவிட்டால் இவர்கள் அட்டகாசம் தாங்க முடிவதில்லை.வெறும் 250 கிலோமீட்டர் தூரம் உள்ள ஈரோட்டிற்கு இவ்வளவு தொகை ரொம்ப ரொம்ப அதிகம்.

அவர்கள் அலுவலகம் சென்று இது போன்ற நாட்களுக்கு டிக்கெட் கேட்டால் கூட தக்க பதில் கிடைக்காது.ஏனென்றால் , அவர்களுக்குத்தான் போதும் போதும் என்ற அளவிற்கு கஸ்டமர்கள் இருக்கிறார்கள்(வேறு யாருங்க , IT  மக்கள் தான்).இவர்கள் என்னதான் மோசமாக சேவை செய்தாலும் இவர்களை விட்டால் IT மக்களுக்கு வேறு வழி இல்லை.அதையே டிராவல்ஸ் அதிபர்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.ஏன் , இவ்வளவு அதிகமாக பணம் வசூலிக்கிறீர்கள் என்று கேட்டால் “இதுதான் டிக்கெட் ரேட் , கொடுத்தா கொடுங்க இல்லீன்னா போங்க சார்” என்றுதான் பதில் வரும்(அனுபவம் உண்டு).என்னைப் போன்ற சாமானியனெல்லாம் ஒரு பெரிய கூட்டத்தையா கூட்ட முடியும் இவர்களிடம் சண்டை போட.முடியாது.கேட்டதை கொடுத்து விட்டு வர வேண்டியதுதான்.நானும் அதைத்தான் செய்தேன் இன்றைக்கு.1100 ரூபாய் டிக்கெட்-ல் ஊட்டுக்காரம்மாவுக்கு(குழந்தைக்கும் தான்) மட்டும் ஒரு டிராவல்ஸ்-ல் டிக்கெட் போட்டு விட்டேன்.ஏறும் பொழுது ஓட்டுனரிடம் கெஞ்சிக்கூத்தாடி வீட்டின் அருகில் விட்டுவிடும்படி கேட்க வேண்டும்(இதற்கும் ஒரு ஐம்பது ரூபாய் செலவாகும்தான் , என்ன செய்வது வேறு வழி இல்லை).நான் எப்படியோ கஷ்டப்பட்டு ஊருக்குச் சென்று விடுவேன்.

தனியார் டிராவல்ஸ்-ல் சௌகரியம் கொஞ்சம் அதிகம்தான் , ஆனால் அதற்காக பகல் கொள்ளையா அடிப்பது? இவர்கள் கேட்பதைக் கொடுப்பவர்கள்தான் அதிகமே தவிர தட்டிக்கேட்பவர்கள் மிக குறைவுதான்.இது போன்ற விசயங்களில் மக்கள் என்ன செய்ய முடியும் , அரசாங்கம்தான் ஒரு வழிவகை செய்ய வேண்டும்.கடைசியில் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். டிராவல்ஸ் தெய்வங்களே , இந்த IT துறை மட்டும் இந்தியாவை விட்டுச் சென்று விட்டால் , நீங்கள் ஒருவரும் ஒரு வண்டியைக் கூட ஓட்ட முடியாது.ஒருமுறை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். நா வாரேன்.

———- அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

4 Responses to எங்களை நம்பித்தான் நீங்களும் இருக்கிறீர்கள் , மறந்துவிடாதீர்கள்

 1. அருமைங்க மாமா !!! டிராவல்ஸ் மட்டும் இல்லைங்க அனைத்து சேவை வரிசையில் இருக்கும் தொழிலிலும் இப்படியான பண முதலைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதுங்க …!!!!

  Liked by 1 person

 2. சரிதான் மாப்பிள்ளை.இவர்களுக்கெல்லாம் பாடம் கற்பிக்க நம்மால் முடியாது மாப்ள.அரசாங்கம்தான் ஏதாவது செய்யணும்.நான் மக்களுக்கு வேணும்னா ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் , அவ்வளவுதான்.

  Like

 3. மாமா நீங்கள் சொல்லும் அரசு , அதிகாரிகள் , தலைவர்கள் எல்லாம் காமராசர் காலத்தோடு போய்விட்டார்கள்ங்க. இப்போ அரசையும் தலைவர்களையும் அதிகாரிகளையும் முடிவு செய்வதே இவ்வாறான பெரும் பண முதலைகள் தான் . இந்நிலை தொடருமாயின் சாமானியன் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவிடும் என்பது தான் உண்மைங்க!!!

  Liked by 1 person

  • மறுக்க முடியாத உண்மைதான் மாப்பிள்ளை.மாறுவது கஷ்டம்தான்.கொஞ்சம் நம்பிக்கையுடன் இருப்போம்.நல்லது நடக்கும் என்று.இல்லை என்றால் ஆண்டவனாலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.பார்ப்போம்.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s