உங்களுக்காக வாழுங்கள் , உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

16இன்னைக்கு காத்தால அப்பா போன் செய்திருந்தார்.போனை எடுத்தவுடன் “சொல்லுங்ப்பா” என்றேன்.”கண்ணு , வண்டி வாகனத்துல போனா பாத்து சூதானமாப்  போப்பா , கெட்ட கெட்ட கெனாவா வருது சாமி” என்றார்.”சரீங்க்ப்பா ” என்று சொல்லிவிட்டு குளித்து சாப்பிட்டு விட்டு வாகனத்தில் கிளம்பினேன்.வரும் வழியில் ஒரு சிக்னலில் நின்று கொண்டிருக்கும் பொழுது ஒரு பதாகையைப்(Board)  பார்த்தேன்.பெங்களூர் காவல்துறையால் வைக்கப்பட்ட பதாகை அது.இப்படி எழுதி இருந்தது “Wear Helmet & Save Your Life” & “Riding in Footpath is punishable including suspension of your driving license” என்று.சோகம் என்னவென்றால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்தப் பதாகை முக்கால்வாசி கிழிக்கப்பட்டு இருந்ததுதான்(இருப்பினும் , எப்படியோ கஷ்டப்பட்டு படித்து விட்டேன்.).பார்த்தாலே தெரிந்துவிடும் அது பிளேடு மூலம் கிழிக்கப்பட்டது என்று.

அதற்குப் பக்கத்தில் இன்னுமொரு பதாகை.சினிமா ஹீரோ ஒருவருடைய பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடிக்கொண்டிருந்தது.மிகவும் பளிச்சென இருந்தது அந்தப் பதாகை.ஒரு பெரிய போட்டோவில் ரசிகர்களை(?) பார்த்து கையை நீட்டி டாட்டா சொல்லிக்கொண்டிருந்தார் அந்த நடிகர்.ஒரு சிறு கீறல் கூட இல்லீங்க.ரெண்டு பதாகைகளும் பக்கத்துக்கு பக்கத்து இடத்தில்.என்ன கொடுமை பாருங்க , நம்ம உசுர காப்பாத்தறதுக்கு காவல்துறை எவ்வளவு அக்கறை எடுத்து ஒரு விழிப்புணர்வு பதாகை வைத்திருக்கிறார்கள்.அதை எல்லாம் மக்கள் விரும்பவில்லை.மாறாக , எவனோ ஒருவனுக்கு வெட்டி பந்தாவுடன் ஒரு விளம்பரப் பதாகை. ஹீரோ அவன் பாட்டுக்குச் சம்பாதித்துக் கொண்டுதான் இருப்பான் , ஆனால் நம்மவர்கள் ஏன் இப்படி அவர்கள் நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று நினைத்தால் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்குங்க.

எனக்குள் இருக்கும் இன்னொருவன் பின்புதான் எனக்குச் சொன்னான்  இப்படி “தம்பி கதிர்வேலா , நீ அடிக்கடி இந்தியாவில் வசிக்கிறாய் என்பதை மறந்து விடுகிறாயடா” என்று.நானும் அதற்கு “சரீங்ண்ணா ” என்று மனதிற்குள்ளேயே பதில் சொல்லி விட்டு கிளம்பி விட்டேன்.பின்புதான் யோசித்தேன் காத்தால அப்பா என்ன சொன்னார்  என்று.”பாத்து சூதானமாப்  போப்பா” ன்னு சொன்னவர் “இந்த மாதிரி கருமத்தை எல்லாம் பார்த்து விட்டுப் போகாதே” ன்னு சொல்லாமல் விட்டுவிட்டாரே என்று.

———- அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to உங்களுக்காக வாழுங்கள் , உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

  1. maragatham says:

    thinam veliya purapadumpodhu periyavanga varthaiya manasila vachutu purapadanum..

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s