நாங்கள் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் அல்ல

12கடந்த சில மாதங்களாகவே ஒரு விசயத்தைக் கவனித்து வருகிறேன்.நாட்டில் எங்காவது ஒரு துயர சம்பவமோ , கற்பழிப்பு சம்பவங்களோ நடந்துவிட்டால் எடுத்த எடுப்பிலேயே அங்கே பிரதானப்படுத்தப்படுவது தகவல் தொழில்நுட்பத்(IT) துறைதான்.காரணம் , இங்கே பணி புரிபவர்களால்தான் கலாச்சாரச் சீர்கேடுகள் நடைபெறுகிறதாம்.இவர்கள்தான் விவசாயத்தை மறந்துவிட்டார்களாம் , இவர்களால் நாளைய விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது என்றெல்லாம் பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.கலாச்சாரச் சீரழிவுகள் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே வேலையில் , அதற்கு IT துறையில் வேலை செய்பவர்கள்தான் முக்கியக் காரணம் என்று யார் ஆராய்ச்சி செய்து இவர்களிடம் கொடுத்தார்கள் என்றுதெரியவில்லை.இவர்கள் சொல்வதுபோல் இல்லை என்று நான் சொல்லவில்லை  , ஆனால் அது மிகவும் குறைவான சதவீகிதத்தில் தான் இருக்குமே தவிரே முழுக்க முழுக்க ITதுறையையே குற்றம் சொல்வதை என்னைப் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்னுடைய முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்ததைப் போல் பெங்களூரில் எல்லாம் இப்பொழுது எந்த ஒரு பூங்காவிற்கும் குடும்பத்துடன் செல்ல பயமாகவே உள்ளது.காரணம் ,அங்கே நடக்கும் சல்லாபங்களும் , காதல் என்ற பெயரில் நடக்கும் இச்சைகளும்தான்.பெரும்பாலும் கல்லூரி செல்பவர்களையே அங்கே பார்க்கலாம்.அவர்களுக்கு நாங்களா பாடம் எடுத்து அனுப்பி வைத்தோம் ? பெங்களூரில் VIBGYOR என்றொரு பள்ளியில் சில வாரங்களுக்கு முன் ஒரு சின்னப் பிஞ்சுக்குழந்தையை ஒரு கயவன் சீரழித்தானே அவனுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் ? இந்தச் சம்பவம் நடந்த அதே நாளில் கிருஷ்ணகிரி அருகில் ஒரு கல்லூரி மாணவனும் , ஒரு மாணவியும்(இவர்கள் காதலர்களாம்) தனியாக ஒரு மலைக்குச் சென்றிருக்கிறார்கள் ,தனிமையான இடம்.ஆனால் அவர்களை விதி விட்டு வைக்கவில்லை.நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் பையனை கட்டி வைத்துவிட்டு அந்தப் பெண்ணை சின்னாபின்னமாக்கி விட்டார்கள்என்று செய்தி வருகிறது.உண்மைக் காதலர்களுக்கு அங்கே என்னய்யா வேலை?இவர்களுக்கும் நாங்கள்தான் கற்றுக்கொடுத்தோமா என்ன ? இன்றைக்கு யாரும் யாருக்கும் இவற்றை எல்லாம் கற்றுக்கொடுக்கத் தேவை இல்லை.தொலைக்காட்சியைப் பார்த்தாலே போதும்.Ph.D பட்டமே வாங்கி விடலாம் இது போன்ற விசயங்களில். IT-யிலும் நடக்கிறது , இல்லை என்று சொல்லவில்லை.அங்கே மட்டுமே அதிக அளவில் நடக்கிறது என்றால் கொஞ்சம் உறுத்துகிறது.IT துறையில் பணி புரியும் பெண்கள் எல்லாம் தண்ணி அடிக்கிறார்கள் , புகை பிடிக்கிறார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் வருகிறது.அதையும் ஒப்புக்கொள்கிறேன்.அந்த வகைப் பெண்களும் குறைவான சதவீகிதத்தில்தான் இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட நம்ம ஊருப் பொண்ணுங்களை இதுவரை நான் பார்த்ததில்லை.வேற்று மாநிலத்தவர்கள்தான் அதிக அளவில் இப்படி உலாவிக்கொண்டிருக்கிறார்கள்.

சரி , இப்பொழுது விவசாயத்திற்கு வருவோம்.ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் ஒரு விவசாயி தன் மகனையோ , மகளையோ எப்படியாவது கஷ்டப்பட்டு படிக்க வைத்து வேலை வாங்கி விட வேண்டும் என்றுதான் நினைப்பானே தவிர , படித்து விட்டு அவனும் விவசாயம் பார்க்கட்டும் என்றெல்லாம் நினைப்பதில்லை.ஏற்கெனவே கஷ்டப்படும் குடும்பத்தில் மகனோ ,மகளோ படித்து வேலைக்குப் போனால்தான் வீட்டில் மற்றவர்களுக்கு ஒரு வழி பிறக்கும் என்ற நிலையில் இருக்கும் பொழுது , IT துறையில் வேலை கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்ல முடியும்.குடும்பக் கஷ்டத்தைப் போக்க யாராக இருந்தாலும் வேலைக்குத்தான் போவார்களே தவிர , நானும் அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் செய்கிறேன் என்று சொல்ல வாய்ப்பில்லை.தற்பொழுது இருக்கும் விவசாயத்தை எப்படி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று பாருங்கள்.ஏனெனில் , இன்றைக்கும் ஊரில் நிறையப் பேர் விவசாயத்தின் பால் ஈர்ப்புடனேயே இருக்கிறார்கள்.அதை எல்லாம் விட்டுவிட்டு முகநூலில் உட்கார்ந்து கொண்டு IT துறையை வஞ்சிக்காதீர்கள்.

பதினோரு வருடங்களாக பெங்களூரில் நான் சந்தித்த முக்கால்வாசிப் பேர் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டித்தான் இந்தத் துறையில் வேலையை வாங்கி இருக்கிறார்கள்.என்னமோ எங்களுக்கு பெட்டிக்கடையில் மூணு பத்து ரூவாக்கு கிடைக்கும் பொருளைப் போல் இந்த வேலை கிடைத்துவிட்டதாக நினைக்க வேண்டாம்.மகனுக்கு இந்தத் துறையில் வேலை கிடைக்க எத்தனை பெற்றோர்கள் பட்டினி கிடந்தார்கள் என்பதெல்லாம் நிறையப் பேர் அறியப்படாத விஷயம்.அதுதான் நிதர்சனம்.ஊரில் இருந்தால் ஊதாரி என்கிறார்கள் , இங்கே இருந்தால் கலாச்சாரத்தை சீரழிக்கிறோம் என்கிறார்கள்.என்ன ஒரு சித்தாந்தம் என்று புரியவில்லை.கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஒரு வடநாட்டு நரியால் கற்பழிக்கப்பட்ட IT துறையில் வேலை செய்த அந்தப் பெண் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான்.குடும்பம் அவரை நம்பித்தான் இருந்தது.ஆனால் விதி விளையாடிவிட்டது.இறந்து விட்டார்.இவரைப்போல் பலரது கண்ணீர்க் கதைகள் இங்கே உள்ளது.

அப்படி ஒன்றும் மற்றவர்கள் நினைப்பதைப் போல் இது சிரமம் அற்ற வேலை இல்லை.தினமும் ஒரு வித பயத்துடன்தான் அனைவரும் வேலைக்குச் செல்கிறோம்.நாளைக்கே அமெரிக்காவில் ஒரு குண்டைப் போட்டால் அடுத்த நிமிடமே இங்கே பலரது வாழ்வில் வெடி வெடித்து விடும்.ஆக , நிச்சயத்தன்மையற்ற வேலையில்தான் இருக்கிறோமே தவிர மற்றவர்கள் நினைப்பதைப் போல் அல்ல.நேற்றுகூட டாய்லெட்-ல் ஒருவரைப் பார்த்தேன்.தனக்குத்தானே கோடிங்(Coding) பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.அப்படித்தான் இங்கே பலரும்.மன உளைச்சல் ,தூக்கமின்மை , ரத்தக் கொதிப்பு , தலைவலி , முதுகு வலி போன்று பல இன்னல்கள் எங்கள் வாழ்விலும் உள்ளது.வெளித்தோற்றத்துக்கு வேண்டுமானால் நாங்கள் அஜீத் குமாராகவோ ,மாதவனாகவோ தெரியலாம்.உள்ளே வந்து பாருங்கள் எங்கள் பொழப்பை.”நாய் படாத பாடு” ன்னு சொல்வாங்களே, கிட்டத்தட்ட அப்படித்தான்.பல சுமைகளைத் தாங்கிக் கொண்டுதான் இங்கே பல பேர் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் சக்கரத்தை நகர்த்த நீங்கள் உதவவில்லை என்றாலும் பரவாய் இல்லை , தயவு செய்து சக்கரத்தை கீழே தள்ளிவிட்டுவிடாதீர்கள்.ஒரு முறை விழுந்தால் மறு முறை எழுவது எவ்வளவு கஷ்டம் என்பது எங்களுக்குத்தான் தெரியும்.

———- அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to நாங்கள் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் அல்ல

  1. maragatham says:

    anaivarin kannum it thurai mel vilundhu vitadhe adharku karanam..thapichu polaikanum..kanthirusti…

    Liked by 1 person

    • இங்கேயும் சில குறைகள் இருக்கிறது , ஆனால் பல நிறைகளை விட்டுவிட்டு குறைகளை வெளிச்சம்போட்டு காட்டுகிறார்கள்.கவலையாக இருக்கிறது.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s