குடும்பம் ஒரு கோவில்

23நான்கு மாதங்களுக்குப் பிறகு பேரனைப் பார்க்கப்போவதால் அம்மா , அப்பாவிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி ,மூன்று மாதத்திற்கு பிறகு தன் தம்பியைப் பார்க்கப் போவதால் முதல் ஜூனியர் ஜெய்வந்த்-திற்கும் , அக்கா மகள் யுவ ஸ்ரீ-க்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.ஊருக்குப் போவதே கடைசி நேரத்தில்தான் முடிவானது.கடந்த வியாழன் இரவு ரயில் பயணம்.பயங்கர மழை வேறு அன்றிரவு , ஆட்டோக்காரன் ஓசூர் போலாம்னா வருவான் போல , மெஜெஸ்டிக் வாப்பான்னா மூஞ்சிய திருப்பிட்டு போறானுவ.எப்படியோ ஒரு மவராசன் கிடைத்து ரயில் நிலையம் அடைந்து விட்டோம்.இரண்டாவது ஜூனியர் தன்வந்த்-திற்கு அதுவே முதல் ரயில் பயணம்.எனக்கும் மனைவிக்கும் ஒரு வித பயம் இருந்தது.மகனைப் பற்றி அல்ல , எங்களுடன் பயணித்த சக பயணிகளை நினைத்து 🙂 .காலை நாலரை மணிக்குத்தான் கொடுமுடியில் இறங்க வேண்டும்.அய்யா மூணு மணிக்கே எழுந்து உட்கார்ந்து கொண்டார்.விளையாட ஆள்தேடிக் கொண்டிருந்தவேளையில் அவனுக்கு தன் அம்மாவும் , அம்மாச்சியும் சிக்கிக் கொண்டார்கள்.ஒரே குஷி , ஆட்டம் தான்.ஒரு வழியாக கொடுமுடி வந்து சேர்ந்தோம்.வரும் வழியில் ஒரு பதாகையைப் பார்க்க நேர்ந்தது.ஒரு பள்ளியின் கராத்தே விழாவிற்கு வருகை தரும் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்களை வரவேற்ற பதாகை அது.அவரும் அனைத்துப் பற்களும் தெரிய பதாகையில் சிரித்துக் கொண்டிருந்தார் 🙂  [இதைப் பற்றி எழுதினால் அதுவே ஒரு பெரிய கட்டுரை ஆகிவிடும் , மற்றொரு நாளில் வைத்துக் கொள்வோம் ]

கொடுமுடி ரயில் நிலையத்திற்கு அப்பா வந்திருந்தார் எங்களை அழைத்துச் செல்ல.பேரனைப் பார்த்த உடன் , ஐந்து ஹார்லிக்ஸ்-ஐ ஒன்றாய்க் குடித்ததைப் போல் மனிதர் தெம்பாகிவிட்டார்.இருக்குமல்லவா , தன் ரத்தமாயிற்றே.அன்று அவரின் வேகம் சற்றே அதிகமாக தென்பட்டது.அக்கா மகளுக்கு பள்ளிக்கூடம் இருந்ததால் , அம்மாவால் அன்று ஊருக்கு வரமுடியவில்லை.அவர்கள் இருவரும் ஈரோட்டில் இருந்து அடுத்த நாள் ஊருக்கு வந்தார்கள்.தன் தம்பியைப் பார்த்தவுடன் ஜெய்வந்த் ஓடி வந்து முத்தமிட்டு இருக்க அனைத்து எடுத்துக் கொண்டான்(முதல் மகன் என் அம்மா , அப்பாவிடம்தான் தற்பொழுது இருக்கிறான்).தானே தன்வந்த்-ஐ எடுத்துக் கொள்ளவேண்டும் என்று அடம்.நாங்களும் விட்டு விட்டோம்.இரண்டு மூன்று முறை கீழே போட்ட கதை எல்லாம் உண்டு.நான் ஊருக்குப் போகும் பொழுதெல்லாம் என்னுடன் தூங்க ஆசைப் படுபவன் , இப்பொழுது தன் தம்பியுடன்தான் தூங்கவேண்டும் என்று கூறிவிட்டான்.அதுவே நடந்தது.இரவில் தூங்கிய பிறகு மனைவி என்னை அழைத்தார்.தம்பி அண்ணன் மேல் காலைப் போட்டு தூங்கிக் கொண்டிருந்ததை பார்க்க.இரண்டு நிமிடம் நாங்கள் இருவரும் அக்காட்சியைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தோம்.இதற்கு ஈடாக எனக்கு ஒரு பத்து லட்சம் ரூபாய் இனாமாகக் கொடுத்திருந்தால் கூட அதை வேண்டாம் என்றிருப்பேன்.இப்படிக் குழந்தைகளைப் பார்க்கும்பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியை விட வேறென்ன வேண்டும் நமக்கு.

அம்மாவால் ஒருநாள் கழித்து வர நேர்ந்ததால் , அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தொலைபேசியில் அழைப்பு வந்த வண்ணம் இருந்தது.சின்னவன் என்ன செய்றான் , பெரியவன் என்ன செய்றான் , இதையே அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கேட்டுக் கொண்டிருந்தார் அம்மா ஈரோட்டில் இருந்து.எப்படி அந்த ஒரு நாளைக் கழிப்பது என்ற ஏக்கம்.ஊருக்கு வந்த பிறகு இரண்டாவது பேரனைப் பார்த்தவுடன் கிட்டத்தட்ட ஆனந்தக் கண்ணீர்க் கதைதான்.சற்று ஒல்லியாக இருக்கும் அம்மா அன்றைக்கு மட்டும் கொஞ்சம் சந்தோசத்தில் எடை கொஞ்சம் அதிகரித்ததைப் போல் காணப்பட்டார் என்றே சொல்லவேண்டும் :-).என்னைக் கவனிக்கவே இல்லை , இரண்டு பேரன்களையும் சுற்றிக் கொண்டே இருந்தார்.அப்பாவும்தான். அருமையான தருணங்கள் அவை.வேறெதுவும் இந்தத் தருணங்களுக்கு ஈடாகாதவை.ஜெய்வந்த் அவ்வப்பொழுது என்னையும் , தன் அம்மாவையும் விளையாடக் கூப்பிட்டான்.அவன் நோக்கம் தான் ஜெய்க்க வேண்டுமென்று.அதற்காகவே நாங்கள் வேண்டுமென்றே அனைத்து விளையாட்டுக்களிலும் தோர்த்தோம்.நாம் தோர்த்து குழந்தைகள் ஜெய்த்துவிட்ட மகிழ்ச்சியை அவர்களுக்கு கொடுக்கும் பொழுது ஏற்ப்படும் மகிழ்ச்சியே தனி சுகம்தான்.அதுவும் கிடைக்கப்பெற்றோம்.

அக்காவும் ஊருக்கு வந்திருந்தார்.ஒரு பெரிய பட்டாளமே இருந்ததால் எப்பொழுதும் போல் அப்பா ஓடிக்கொண்டே இருந்தார்.மனுஷன் பாவம் , எங்களுக்காக அவர் இன்னும் தன் ரிடயர்மெண்டை(ஓய்வை) அறிவிக்கவில்லை.முக்கால்வாசி வெளி வேலைகள் அப்பாவிடமே ஒப்படைக்கப்பட்டது.நான் எப்பொழுதும் போல் , வெட்டி ஆப்பீசர் வேலையைத்தான் ஊரில் இந்த முறையும் பார்க்க நேர்ந்தது 🙂 .ஒரு பிரேக்கின் நடுவில் அப்பா இவ்வாறு கூறினார் – “கட்டியும் தண்டுவன் , கடன்பட்டும் பட்டினி” என்று.அவர் ஓய்வில்லாமல் அளைவதைக் குறிக்கும் சொலவடையாகத்தான் இருக்க முடியும் இது.இதற்கான சிறு விளக்கத்தையும் அப்பா கொடுத்தார்.கடந்த மூன்று நாட்களும் , மூன்று கோவில்களுக்கும் சென்று வந்துவிட்டோம்.நேற்று எங்கள் குலதெய்வக் கோவிலில் குடும்பத்துடன் சென்று அடசல்(உங்களில் நிறையப் பேர்க்கு , தெரிந்திருக்க வாய்ப்பில்லை , அசைவம் சம்பந்தப்பட்டது) போட்டு வந்தோம்.இந்தத் தருணங்கள் எல்லாம் இங்கே பெங்களூரில் கடந்த பதினொரு வருடங்களில் எங்களுக்குக் கிடைத்ததில்லை.மனைவியும் , தன்வந்த்-ம் இன்னும் ஊரில்தான் இருக்கிறார்கள்.நான் இன்று காலையில் பெங்களூர் வந்துவிட்டேன்.அவர்கள் புதன்கிழமை வருகிறார்கள்.மூன்று நாட்களும் நான் சொர்க்கத்தில் இருந்து விட்டு வந்ததைப் போன்றுதான் இருந்தது.கிளம்பும்பொழுது குழந்தைகளுக்கு நிறைய முத்தமழை பொழிந்துவிட்டு வந்துவிட்டேன்.கண்களில் நீருடன்.ஈரோட்டில் பேருந்தில் ஏறியவுடன் வீட்டிற்கு போன் செய்தேன்.குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றேன்.தன் அம்மாவுடன் ஜெய்வந்த்-ம் , தன்வந்த்-ம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் அம்மா.சின்னவன் அதே போல் தன் அண்ணன் மேல் காலைப் போட்டபடி.பேருந்தில் இருந்த படியே அம்மாவிடம் கூறினேன் , “அம்மா எனக்கு பெங்களூர் செல்ல மனமே இல்லை , எனக்கு பொக்குன்னு இருக்குமே” என்றேன்.எப்பொழுதும் போல் என் தெய்வம் என்னை சமாதானப் படுத்தியது 😦

இதோ , இப்பொழுது இந்தக் கட்டுரையை எழுத கணினியை ஆன் செய்த பொழுது , என் குழந்தைச் செல்வங்களின் சட்டையும் , டிராயரும் என் கண்ணில் பட்டது , இரண்டையும் எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டு அதற்கும் ஒரு முத்தம் கொடுத்து விட்டுத்தான் இந்தக் கட்டுரையே எழுத ஆரம்பித்தேன்.எனக்கு காசு பணமெல்லாம் இரண்டாவதுதான் ,என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும்.இறைவன் எங்களுக்கு இப்படிப்பட்ட தருணங்களைக் கொடுத்து எங்களை அருள் செய்தாலே அதுவே நான் கருதும் முதல் சொத்து.பணம் என்னைப் பொறுத்த வரையில் பிறகுதான். குடும்பம் ஒரு கோவில்.அதுவே நிதர்சனம்.

—– அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

6 Responses to குடும்பம் ஒரு கோவில்

 1. maragatham says:

  ulagathaiye suruti eduthu vandhu madiyila potalum peran pethikalai thooki konjura unarvukku inaiyaguma?

  Liked by 1 person

 2. N Venkataramani says:

  கண்களில் வழிந்தோடும்
  கண்ணீரின் காவியத்தை
  எண்ணங்கள் சொல்லுவதால்
  இதயவலி குறையுதப்பா…

  இரண்டு பேரன்களும் மகளுடன் சிங்கப்புரில்
  நாங்கள் இருவரும் இங்கு சென்னையில்…

  ஒரு மனிதனின் மிகப்பெரிய வரம்
  அவரது பேரன் பேத்திகள்…..

  நாங்கள் வரம் பெற்றவர்கள்..

  அழகுப்பதிவு கதிர்

  Liked by 1 person

  • ஆம் , நீங்கள் வரம் பெற்றவர்களுங்க அய்யா.குழந்தைச் செல்வத்தை விட பெரிதான செல்வம் ஏதும் இல்லை.கட்டுரையை வாசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க அய்யா.

   Like

 3. natarajan kalyanasundaram says:

  அருமை , அருமை கதிர் தம்பி , படிக்க படிக்க ஏனோ தெரியவில்லை கண்ணில் நீர்வந்தது , வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் நீ . அதன் சுவை மேலும் கூட அன்பாய் , ஒரு அண்ணனாய் வாழ்த்துகிறேன் .. அப்பா அம்மா அக்கா மற்றும் அனைத்து சொந்தங்களையும் நலம் விசாரித்ததாக சொல்லவும் .

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s