தலைக்கவசம் உங்கள் உயிர்க் கவசம்

18ஈஜிபுராவில் இருந்து டொம்லூர் வரை வெறும் இரண்டரைக் கிலோமீட்டர் தான்.இதுவரை இப்படி ஒரு டிராப்பிக் ஜாம் ஆகிப் பார்த்ததில்லை இந்த வழியில்.இன்று இதே தூரத்தை கடக்க அரை மணி நேரம் பயணம் செய்ய நேர்ந்தது.பொறுமையின் உச்சக்கட்டத்தை அடைந்த நாள்.இது போன்ற சமயங்களில்தான் நாம்  வெறுமனே இருக்கமாட்டோமே.ஊர்ந்து கொண்டே செல்லும் வாகனங்களுக்குப் பின்னால் என் வாகனமும் ஊர்ந்தது.ஊர்ந்து சென்றுகொண்டிருக்கும்பொழுது  , அக்கம் பக்கம் நோட்டமிடுகையில் ஒருவர் கிடைத்து விட்டார் நமக்கு.இன்றைய என் அடிமையும் அவரே.எழுத வஸ்து ஒன்றைக் கொடுத்துவிட்டாரல்லவா , அதான் அப்படிக் குறிப்பிட்டேன் 🙂

பைக்-ல் சென்ற அந்த நபர் திருமணமானவராகத்தான் இருக்க முடியும்(என் கணிப்பு).முன்னால் , நான்கு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றும் உட்கார்ந்து இருந்தது.கூலிங் கிளாஸ் கண்ணாடியுடன் அழகின் அடையாளத்துடன்  உட்கார்ந்திருந்தது அக்குழந்தை.அவர்கள் சென்ற பைக்-ஐ நான் பின் தொடர்ந்தேன்.காரணமாகத்தான்.குழந்தையின் தந்தை தலைக்கவசம்(Helmet) அணிந்திருந்தார்.பெங்களூரில் கட்டாயம் என்பதால் அனைவரும் அணிய வேண்டும் , இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லையே என்று அங்கே என் பாசக்காரப் பயபுள்ள எவனோ கேட்பது இங்கே விழுகிறது :-).மேட்டர் , தலைக்கவசம் அணிந்திருந்ததைப் பற்றியதல்ல , அதை அவர் எப்படி அணிந்திருந்தார் என்பதைப் பற்றியது.தலைக்கவசத்தின் இரண்டு புறமும் , அதை லாக் செய்ய பயன்படுத்தும் பெல்ட் தொங்கிக்கொண்டு இருந்தது(இரண்டு புறமும் இருக்கும் பட்டனைப் போட்டால் லாக் ஆகி விடும் , பிறகு நீங்கள் கீழே விழுந்தாலும் அது விழாது).தலைக்கவசத்தை அவர் பேருக்காக மட்டுமே மாட்டி இருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.ஆக , அதை அவர் லாக் செய்யவில்லை.பிறகெதற்கு , இந்த கவச குண்டலம் என்று நீங்கள் கேட்கலாம்.இங்கே பல பேர் அதை  போக்குவரத்துக் காவல்துறையின் அபராதத்திற்கு பயந்து அணியும் ஒரு விளையாட்டுப் பொருளாகவே பார்க்கிறார்கள்.இந்த நபர் அதற்கு உதாரணம்.

குழந்தையுடன் செல்பவர் இவ்வளவு அஜாக்ரதையாகவா செல்வார்.அட , குழந்தை இல்லாவிட்டாலும் இப்படியா செல்வது.பல நேரங்களில்  , பலரைக் காப்பாற்றி இருக்கிறது இந்தத் தலைக் கவசம்.எம லோகம் செல்லக் காத்திருந்தவர்களை எல்லாம் பல நேரங்களில் காப்பாற்றி இருக்கிறது இந்தக் கவசம்.அப்படி இருக்க , பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் நன்கு படித்தவர்கள் நிறையப் பேர்  இன்னும் அதை உணரவில்லை.பெயரளவில் தலைக் கவசத்தை அணிந்தாலும் , அதை லாக் செய்வதில்லை.அப்படியே வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் பொழுது ஏதேனும் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து விட்டால்  தலையில் நிச்சயம் அடிபடும் வாய்ப்புகள் அதிகம்.அப்படி நடந்துவிட்டால் அது உயிரை எடுக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதில் சந்தேகமே இல்லை.நான் இன்றைக்குப் பார்த்த அந்த நபர் என்னதான்  ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருந்தாலும் எனக்கு அவர்  பொறுப்பற்றவராய்த்தான் தெரிந்தார்.

அப்படியே அவருடைய பைக்-இன் பின் பகுதியைப் பார்த்தேன்.நம்பர் போர்டும் இல்லை.ஆனால் ,  இந்த வாசகம் மட்டும் இருந்தது —> “Don’t try to touch me ” . அய்யா அம்பானி , உன்னை யாருய்யா வந்து சீண்டப்போகிறார்கள் , முதலில் தலைக்கவசம் எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்று யாரையாவது சீண்டித் தெரிந்துகொண்டு வா , பெறவு நாம பேசுவோம்.பாவம் அந்தப் பிஞ்சுக் குழந்தை.தலைக்கவசத்தின்  முக்கியத்துவத்தை எனக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் உணர்த்திய என்  நெருங்கிய நண்பன் Gurumoorthy Ponnusamy தான் எனக்கு இப்பொழுது நினைவில் வருகிறான்.நன்றிடா என் நட்புச் செல்லமே.உன்னால்தான் , அதன் முக்கியத்துவத்தை நான் நன்கு உணர்ந்தேன்.

சிறு நகரங்களில் இன்னும் தலைக்கவசம் அவ்வளவாக கட்டாயம் ஆக்கப்படவில்லை. கட்டாயமாக்கினால் வரவேற்போம்.பெரு நகரங்களில் வாழும் நண்பர்களே , நீங்கள் வாகனத்தில் செல்லும் பொழுது தயவுசெய்து தலைக் கவசத்தை அணிந்து செல்லுங்கள்.முறையாக அணிந்து செல்லுங்கள்.இங்கே குறிப்பிட்ட , என் கதையின் நாயகனைப் போல் அல்ல.தக்க சமயத்தில் அது உங்களைக் காக்கும்.விளையாட வேறு இடம் உண்டு.போக்குவரத்துச் சாலைகள் அல்ல.தலைக்கவசம் உங்கள் உயிர்க் கவசம்.மறவாதீர்.

———– அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s