நானும் என் கொலஸ்ட்ராலும்

18ஓசீல ஒரு பொருள் கொடுக்கிறார்கள் என்றால் கொஞ்சம் கூட யோசிக்காம போய் முதல் வரிசையில் நிர்ப்பவர்களில் அடியேனும் ஒருவன்.சும்மாதானே வருது , இதுல போயி என்னத்த யோசிக்க வேண்டிருக்குன்னு மசுக்குள்ள ஒரு லொள்ளுப் பேச்சு வேற.ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை இலவசமா உடல் பரிசோதனை செய்து கொள்ள ஆப்பீசுல மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொடுத்துள்ளார்கள்.விடுவோமா நாம.பெங்களூர்-ல போர்டிஸ்(Fortis) மருத்துவமனைக்கு ஒரு போனைப் போட்டு ஒரு அழகான குரலிடம் இருந்து அப்பாயிண்டுமெண்டை வாங்கி விட்டேன்.தேதி குறித்தாகி விட்டது.அது ஒரு சனிக்கிழமை.அன்றைக்குத்தான் நாம் கால விட்டத்துல தூக்கி வச்சுக்கிட்டு ஒரு காசு பிரயோஜனம் இல்லாதவற்றை யோசித்துக்கொண்டிருப்போமே.அன்றாவது , ஒரு நல்ல விசயத்துக்கு பயன்படுத்திக்கொள்வோமே என்றெண்ணி மருத்துவமனை சென்றாகி விட்டது.மருத்துவமனை வரவேற்பறையில் சில அழகு தேவதைகள் நம்மை வரவேற்றார்கள் [ ஆண்டவா , எங்கம்மணி இந்தப் பதிவை மட்டும் படிக்கவே கூடாதப்பா ].

அனைத்துப் பற்களையும் வெளியில் காட்டிவிட்டு , எங்கே செல்ல வேண்டுமென்ற தகவலைப் பெற்றுக்கொண்டேன்.அனைத்து டெஸ்ட்டுகளையும் எடுத்தாகி விட்டது.இப்பொழுது டாக்டரைப் பார்த்தாக வேண்டும்.காத்திருந்தேன். காத்திருந்த நேரத்தில் அக்கம்பக்கத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன்.ஏதாவது விஷயம் கிடைக்குமா என்று.என்னுடைய நேரம் வந்தவுடன் டாக்டரிடம் என்னை அனுப்பினார்கள்.பெண் டாக்டர்.எங்கப்பாரய்யன் மேல் சத்தியமாகச் சொல்லமுடியும் அவர் தமிழ்க்காரராகத்தான் இருப்பார் என்று.என் நினைப்பும் சரியானது.தமிழிலேயே உரையாடல் தொடர்ந்தது.

என்ன பண்றீங்க கதிர்வேல் ? – மேடம் சாப்ட்வேருங் மேடம்.
ஓ , அப்படியா.தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்கிறீர்களா? – நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்தேன் மேடம்.ஆனால் , கடந்த மூன்று மாத காலமா அதற்கு விடுமுறை அளித்துவிட்டேன் மேடம்.
ஏன் , எதனால் ? – மூணு மாசம் துபாய் சென்றுவிட்டதால் அங்கே தொடர முடியவில்லை மேடம்.அதனால் என்ன , அங்கே ஜிம் சென்றிருக்கலாமே.
இந்த நொடிதான் என்மேல் பேர் அன்டு லவ்லி கிரீமை அள்ளிப் பூசினார் டாக்டர் அம்மா.பின்ன என்னங்க , ஜிம்முக்கும் நமக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மை.அந்தப் பக்கம் தலை வைத்துக்கூடப் படுத்ததில்லை.பிறகு , அங்கே எப்படி போவது . டாக்டர் அம்மா ஏன் இதெல்லாம் கேட்குறீங்க , ஏதாவது உடம்புல பெரிய பிரச்சனையா என்றேன்.உங்களுக்கு கொலஸ்டரால் இருக்குங்க கதிர்வேல்.எல்லோருக்கும் இருக்குமல்லவா , இதில் என்ன ஆச்சர்யம் என்று நினைத்தாலும் கேட்கவில்லை.உங்களுக்கு சற்று அதிகமாக கெட்ட கொலஸ்டரால் இருக்கிறது என்றார்.

சரி , என்ன செய்யலாம் மேடம் என்றேன்.முட்டை சாப்பிடுவீர்களா என்றார் , ஆம் என்றேன்.கூடாது கூடாது , நிறுத்திவிடுங்கள்.இல்லையேல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெள்ளை முட்டயை மட்டும் சாப்பிட்டுக்கொள்ளுங்கள் என்றார்.தூக்கிவாரிப்போட்டது.சரீங்க மேடம் என்றேன்.அடுத்த கேள்வி.அசைவம் சாப்பிடுவீர்களா என்றார்.யாரப்பாத்து என்ன கேள்வி கேட்டீங்கன்னு நெனச்சுக்கிட்டு ஆமாம் மேடம் என்றேன் அனைத்துப் பற்களையும் இளித்துக்கொண்டு [ஆடு மற்றும் கோழிக்கறி ].உடனே அவர் , நோ நோ கதிர்வேல் , நீங்க இனிமேல் அதை நிறுத்திவிடுங்கள்.இல்லையேல் , இன்னும் கெட்ட கொலஸ்டரால் அதிகமாயிடும் என்றார்.நான் உட்கார்ந்திருந்த சேரில் இருந்து பின்னாடி மயக்கம் வந்து விழுவதைப் போன்றதொரு உணர்வு ஏற்பட்டது.உலகமே இருண்டுவிட்டதாக எண்ணம் .அய்யா , கருப்பணசாமி என்னக் காப்பாத்துப்பான்னு கத்தலாம்னா அங்கே முடியுமா ? முடியாது.பிறகென்னங்க , முட்டையும் வேண்டாம் , அசைவமும் வேண்டாம்னா என்ன செய்றது.நம்மள அப்படியா வளத்திருக்காங்க.இல்லையே.அப்புறம் இன்னுமொரு கேள்வியைக் கேட்டார் டாக்டர் அம்மா.போன்டா பச்சி சாப்பிடுவீர்களா ? இது மூணாவது கேள்வி.ஆம் என்பதே என் பதில்.கூடாது , மாதத்தில் இரண்டு முறை வீட்டில் செய்து சாப்பிட்டுக்கொள்ளுங்கள் என்றார்.அங்கேயும் விழுந்தது இடி.

மீன் சாப்பிடுவீர்களா ? ஆம் , ஆம் என்று அதுவரை பதில் கொடுத்துக்கொண்டிருந்த நான் , இப்பொழுது இல்லை என்ற பதிலை அவருக்குக் கொடுக்க நேர்ந்தது.நமக்குத்தான் நல்ல கருமாந்திரம் ஒண்ணுமே ஒத்து வராதே.இது வரை மீன் குழம்பு சாப்பிட்டதே இல்லை.சிறு வயதில் இருந்தே ஒதுக்கி விட்டேன்.இன்றும் கூட அம்மாவை அதற்காக வஞ்சிப்பதுண்டு.என்னை எப்படியாவது கஷ்டப்பட்டு சாப்பிட வைத்திருக்கலாமே என்று.ஒடம்புக்கு நல்லது ஒரு எழவும் நமக்கு ஒத்துவராதே.டாக்டர் அம்மா , நல்லதை விட்டுவிட்டு தேவையற்றதை சாப்பிடுறீங்களே கதிர்வேல் என்றார்.அப்பொழுது கூட முட்டையையும் அசைவத்தையும் நிறுத்திக்கொள்ளலாம் என்று டக்குன்னு யோசிக்கத் தோணவில்லை.படத்துல வர்ற மாதிரி , எல்லாத்தையும் இதோட நிறுத்திக்கோங்க கதிர்வேல் என்ற தோணியில் டாக்டர் அம்மா அறிவுறித்தினார்.அவர் தொழில் அப்படி.நம் நலத்திற்குத்தானே அப்படிச் சொல்கிறார்.அக்கறையுடன் சொல்கிறார்.கேட்டுக்கொண்டேன்.

இப்பொழுது கொலஸ்டரால்-ஐ எப்படிக் குறைப்பதுன்னு சொல்லுங்க மேடம் என்றேன்.நீங்கள் உடனே ஜிம்முக்குச் செல்ல வேண்டும் என்றார்.நடைப்பயிற்சி சென்ற உங்களுக்கு இது மிகவும் சுலபம் என்று அவராகவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.காரணம் , அப்படி ஒரு பில்ட் அப்புடன் நான் அவர் முன்னால் அமர்ந்திருந்தது. என்னைத் தவறாக சித்தரித்து விட்டார் போல் தோணியது.முந்தைய பதிவில் கூறியதைப் போல் நம்மள இந்த உலகம் நல்லவனாகவே பார்த்துக் கொண்டிருக்கட்டுமே என்ற ஒரு நப்பாசை.சரீங் மேடம் , இன்றே போய் ஜிம்மைத் தேடி உடனே சேர்ந்துவிடுகிறேன் என்றேன் மறுப்புத் தெரிவிக்காமல்.

மருத்துவமனையை விட்டு வெளியில் வரும்பொழுது “விடுகதையா இந்த வாழ்க்கை” ன்னு முத்து பட சாங்கை ஓட விட்டுக்கொண்டு ஒன்றுமே சாப்பிடக்கூடாதுன்னு டாக்டரம்மா சொல்லிட்டாங்களே என்று நினைத்துக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு வீடு வந்துவிட்டேன்.வீட்ல அம்மணிக்கு ரிசல்ட்டை தெரிந்து கொள்ள ரொம்ப ஆர்வம்.ரிசல்ட்டை ஒப்புவித்தேன்.இப்போ நீங்க சிரிக்கிற மாதிரியே அவரும் அவர் கடமையைச் செவ்வனச் செய்தார். கஷ்டப்பட்டு அவரை சமாதானப் படுத்தி , “இதோ பாரும்மா , டாக்டர் அம்மா தெளிவாச் சொல்லிட்டாங்க ஜிம் போவோணும்னு , ஸோ நானும் போறதா முடிவுபண்ணிட்டேன்” என்றேன்.ஏன்னா , ஒரு தடவ முடிவு பண்ணிட்டா எம்பேச்ச நானே கேக்க மாட்டேனே [ சத்தியமா எனக்கும் சினிமாவுக்கும் எந்த சம்பந்தமும்  இல்லீங்கோ ].அவரும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

பின்பு , அன்று சனிக்கிழமை வேறு சில வேலைகள் இருந்ததால் , ஜிம் தேடும் படலம் அடுத்த நாள்தான் நடந்தது.மத்தியானம் ரெண்டு மணிக்கு போனா எவன் ஜிம் ஓபன்-ல வச்சுருப்பான் ஞாயிற்றுக்கிழமையன்று.பதாகையில் இருந்த தொடர்பு என்னைக் குறித்துக்கொண்டு வீடு வந்துவிட்டேன்.அடுத்த நாள் திங்கட்கிழமை ஜிம் சென்று விசாரிப்பு நடைபெற்றது.அங்கேதான் சேருவது என்று முடிவான பிறகு இந்த விசாரிப்பெல்லாம் வெறும் சம்பிரதாயம்தான்.என்ன பர்பஸ்-க்காக ஜிம் சேருகிறீர்கள் என்றார் மாஸ்டர்.நான் கொலஸ்டரால் குறைக்க வேண்டும் என்றேன் , அதோடு சேர்த்து கொஞ்சம் உடல் பிட்டாக வேண்டும் என்றேன்.அவரும் மனதிற்குள்ளேயே சிரித்துக் கொண்டு அதை வெளியில் காட்டவில்லை.காட்டினால் ஒரு கஸ்ட்டமரை இழக்க நேரிடுமல்லவா , அதான். முன்பணம் கட்டியாகிவிட்டது.அடுத்தநாள் என் ஜிம் வாழ்க்கையில் முதல் நாள்.

வீட்டில் வந்து அம்மணியிடமும் , ஊருக்குப் போனப் போட்டு அம்மா , அப்பாவிடமும் இந்த அற்புத நிகழ்வை அரங்கேற்றிவிட்டேன்.ஜிம் போகும்பொழுது என்னென்ன ஜூஸ் குடிக்க வேண்டும் என்பதை அம்மணியிடம் தெளிவுபட கூறிவிட்டேன்.பாவம் எனக்காக நேரத்திலேயே எழுந்து நான் கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தார்(சும்மாவா , ஊட்டுலயும் அப்படி ஒரு பில்ட் அப் ஜிம் போறதால).ஜிம் செல்வதற்கு முன் ஒரு ஜூஸ் , திரும்பி வந்த பின் ஒரு ஜூஸ்.இதுவே எனக்கும் எங்கம்மணிக்கும் உண்டான டீல்.முதல் நாள் ஜிம்.உள்ளே செல்கிறேன்.மாஸ்டர் த்ரெட் மில்-ல் நடக்கச் சொல்கிறார்.அப்படிச் சொன்னவர் , ஸ்பீடு பட்டனை ஜீரோ-வில் இருந்து அதிகப்படுத்தச் சொல்லவில்லை.நா அப்பத்தான் அதில் முதன்முதலில் ஏறுகிறேன்.எனக்கும் தெரிந்திருக்கவில்லை.த்ரெட் மில் நகராமலேயே நான் மட்டும் நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தவர் ஓடி வந்து, சார் என்ன பண்றீங்கன்னார்.நடக்குறேன் என்றேன்.சார் , ஸ்பீடே இல்லாம என்ன சார் நடக்குறீங்க என்றார்.அங்கே விழுந்தது முதல் அடி. பின்பு கற்றுக்கொண்டேன்.

அதற்குப்பின் சைக்கிள் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து அங்கு சென்று அதை கொஞ்ச நேரம் ஓட்டலாமே என்று சென்றேன்.நமக்குத்தான் அது கை வந்த கலையாயிற்றே.ஏறி உட்கார்ந்த உடனே செம ஸ்பீடுல சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கையில் பக்கத்து சைக்கிளில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பொட்டப்புள்ள என்னைப் பார்ப்பதை என் ஆறாம் அறிவு உணர்த்திவிட்டது.நானும் திரும்பிப்பார்த்து , இதோ பாரும்மா , எனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மனைவியும் , ஒரு குழந்தையும்(அப்பொழுது தன்வந்த் பிறக்கவில்லை) இருக்கிறார்கள் என்று சொல்லத் தோணியது , ஆனா நாம சொல்லுவோமா , சொல்லவில்லை. பிறகுதான் யோசித்தேன்  இந்தப்புள்ள என்னயப் பாத்து , என்னடா இவன் காட்டான் மாதிரி இப்படி வேகமா  சைக்கிள ஓட்டுறானே அப்டின்னு அது நினைச்சு இருக்கும்னு.இருந்தாலும் விடுவோமா நாம , ஒரு சிறு சுமைல் கொடுத்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தேன்.

ஒரு பெரிய பலூன் இருந்தது , அங்கேயும் அதை எப்படி பயன்படுத்துவதுன்னு தெரியாமல் கீழ மேல விழுந்து கஷ்டப்பட்டு கற்றாகிவிட்டது.அதற்குபின் வெயிட் சம்பந்தமான பயிற்சிகள் தீவிரமாகச் சென்றன(அட , அதாங்க அந்தக் கல்லத் தூக்கி என்னென்னவோ பன்னுவாங்கில்ல , அதான்).இப்படிச் சென்றுகொண்டிருந்த என் ஜிம் வாழ்க்கையில் , ஒரு நாள் எதேச்சையாக  ஜிம் மாஸ்டர் என்னைப் பார்த்து , சார் என்ன சார் , மசுல்(Muscle) எல்லாம் செமையா இருக்குன்னாரு பாருங்க , அப்படியே காலும் கையும் முறுக்கேறி சிக்ஸ் பேக் கணக்கா அவர் முன் நின்று , மாஸ்டர் இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம்னு சொன்னேன். ங்கொய்யால , பிறகுதான் தெரிந்தது அந்தப்பைய என்னையக் கலாய்ச்சிருக்குன்னு. இருந்தாலும் விடாமுயற்சியால் , இரண்டு சல்மான்கானாகவும் , மூன்று சாருக்கானாகவும் ஆன பிறகு இதற்கும் மேல் வேண்டாமென்றும் , பெற்றோர்களின்/அம்மணியின் அறிவுருத்தலாலும் ஜிம் வாழ்க்கை நான்கு மாதங்களில் கிளைமாக்ஸை எட்டியது.காரணம் ,  இப்பொழுது குறைந்த எடையே போதும் என்று அவர்கள் அறிவுரை வழங்கியதாலும் , அந்த எடை குறைப்பிலேயே கொலஸ்டரால் நன்கு குறைந்திருந்ததாலும் நானும் இனி வாக்கிங் மற்றும் வைத்துக்கொள்வோம் என்று எண்ணி ஜிம்முக்கு கும்பிடுபூஜை  போட்டாகிவிட்டது சென்ற வருடம் ஆகஸ்டு மாதம்.

உண்மையிலேயே , அந்த நாட்கள் நான் மிகவும் ரசித்த நாட்கள்.இனிமேல் , அதே ஜிம் வாழ்க்கைக்குத் திரும்புவேனா என்று தெரியவில்லை.அதற்குப்பின் வாக்கிங் தினமும் செல்வதை வழக்கமாக்கி இருந்தேன் [ அங்கேயும் நமக்கு சில பல கேர்ள் பிரண்டுகள் உள்ளார்கள் , சரி சரி நீங்க ரொம்ப வருத்தப்பட வேண்டாம் , நான் குறிப்பிட்ட கேர்ள் பிரண்டெல்லாம் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் , ம்ம் இப்பொழுது திருப்தியா உங்களுக்கு ? ]. கடந்த சில மாதங்களாக தன்வந்த் பிறந்ததில் இருந்து அடிக்கடி ஊருக்குச் செற்று வந்ததால் , வாக்கிங்கும் தொடரமுடியவில்லை.இதோ , இப்பொழுதே அதற்கான தேதி குறித்தாகிவிட்டது.விரைவில் , வாக்கிங் பயணம் ஆரம்பம் , விருப்பமுள்ளவர்கள் , என்னைத் தொடர்பு கொள்ளவும். உங்களுக்கும் நிறைய கேர்ள் பிரெண்ட் கிடைக்க வாய்ப்புண்டு.

சரி , உங்களைக் கொஞ்சம் சிரிக்க வைத்த நான் , சிந்திக்கவும் வைக்கவேண்டுமல்லவா , இல்லையேல் இச்சமூகம் என்னை நிச்சயம் வஞ்சிக்கும்.

கொலஸ்டராலைக் கட்டுப்படுத்து எப்படி என்று சில டிப்சுகள் உங்களுக்காக(உங்களுக்கும் தெரிந்ததுதான்) :

  • சீரான உடற்பயிற்சி அல்லது தினமும் நடைப்பயிற்சியுடன் சேர்த்து சில உடற்பயிற்சிகள்(நீங்கள் நடைப்பயிற்சி செல்லும் இடத்திலேயே இதுபோன்ற சிறுசிறு உடற்பயிற்சிகளைச் செய்யலாம்)
  • உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
  • புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது/மது அருந்துவதைத் தவிர்ப்பது [சுத்தமாக நிறுத்த முடியவில்லை என்றால் , தயவுசெய்து குறைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே ]
  • அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
  • அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
  • பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .
  • யோகாசன பயிற்சி செய்வது , தியானப் பயிற்சி செய்வது .

இதில் ஏதேனும் ஒன்றை எக்காலத்திலும் நிறுத்திவிடாமல் தொடர்ந்து செய்துவந்தீர்களானால் , உடலளவில் எப்பொழுதும் நீங்கள் ஆரோக்யத்துடன் இருக்கலாம். உங்களுக்காக சில வீடியோக்களைக் கீழே கொடுத்துள்ளேன்.நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.நேரம் இருந்தால் பார்க்கலாம்.வாழ்க வளமுடன்.


பின் குறிப்பு : இவ்வளவு பெரிய பதிவை பொறுமையாக படித்த என் அன்பு உள்ளங்களுக்கு , ஆயிரம் கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்.

————– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

12 Responses to நானும் என் கொலஸ்ட்ராலும்

  1. Arun says:

    Nice read..

    Liked by 1 person

  2. maragatham says:

    gud health tips.. yaam petra inbam peruga ivvaiyagam.

    Liked by 1 person

  3. Prasad Babu says:

    Ellam OK…..Kathir…
    Antha udar payirchi, thege payirchi, Yoga ellam epo seyamnu sonnagala Dr?
    Athe maruthuva maniyila enaku partha doctor OORGA avoid seyya sonnar..
    Apram manusan etha than thingrathu…??

    Liked by 1 person

    • சரியாகச் சொன்னீர்கள் அண்ணா.மருத்துவர் சொல்லும் அனைத்தையும் சாப்பிடாமல் இருக்க முடியாதுதான்.ஓரளவு முக்கியமான கேடு விளைவிக்கும் பொருள்களை தவிர்த்துக் கொள்வது நல்லதே.ஆனால் இன்றைய சூழ்நிலையில் அது கடினம்.நிச்சயம் முயச்சிக்கணும்.

      Like

  4. maragatham says:

    pogo channalil mr bean ninaivuku varar kathir panra koothula.. ‘uncle podger hangs a picture’ nu english kadhaila picture a suvathula matta neraya komali velai ellam podger pannuvar.. adhellam kooda ninaivuku varudhu..siripai adakave mudiyavillai..3rd time padichiten kadhir..

    Liked by 1 person

    • மிக்க நன்றிங்க அம்மா மூன்றாவது முறை படித்தமைக்கு.இது போல் பல கோமாளித்தன சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு.அதில் இது ஒரு பகுதிதான்.

      Like

  5. Sangeetha Venkatesh says:

    Very funny. I enjoyed a lot.

    Liked by 1 person

  6. Tharani says:

    Anna,

    Nan Ungha periya Visiri.Ungha Post Ellam Super Ah iruku.

    Adding to this points Take Butter Fruit in any form as juice/MilkShake/Smoothy/Mexican Dishes.It increase your Good Cholestral and Good foe health also.

    Take Care!

    Liked by 1 person

Leave a comment