சமூக வலைதளங்களும் அதில் நாமும்

13முகநூலில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை , நிறைய கற்றுக்கொண்டதைப் போன்றதொரு மனநிறைவைக் கொடுத்திருக்கிறது இந்தத் தளம்.மனைவியின் பல வருட கட்டாயத்தால் கடைசியில் சென்ற வருடம் இங்கே வந்து சேர்ந்தேன்.ஏன் அத்துனை நாட்கள் வரவில்லை என்றால் , என்னைப் பொருத்தவரையில் முகநூல் என்றால் “டைம் பாஸ்” என்ற வடிவத்திலேயே என் மனதில் வைத்திருந்தேன் இங்கே வரும் வரை.இன்று வருத்தப்படுகின்றேன் , இத்துனை நாட்கள் வீணடித்துவிட்டோமே என்று.நான் அப்பொழுது முகநூலை வேறொரு கோணத்தில் பார்த்திருக்கிறேன் என்று இப்பொழுது உணருகிறேன்.இங்கே நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.நாம் எதைத் தேடித் போகிறோம் என்பதே முக்கியம்.நீங்கள் நல்ல விசயங்களையும் இங்கே தேடலாம் , கெட்ட விசயங்களையும் இங்கே தேடலாம்.தேடலைப் பொறுத்திருக்கிறது.வெறுமனே முகநூல் என்றால் வெட்டி நாயம் பேசுவதற்கு என்று சொல்பவர்கள் உங்கள் நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள்.அப்படியும் இல்லையேல் , நீங்கள் இங்கே அதே வெட்டி வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் , நல்லவைகளை இதுவரை பார்க்கவில்லை என்றே அர்த்தம்.

ஒருவர் ஒரு படம் பார்த்துவிட்டு வருகிறார் , அது அவருக்குப் பிடித்திருக்கிறது.அதற்காக , நீங்களும் அதைப் பார்க்க வேண்டும் என்று அர்த்தமில்லை.அவருக்குப் பிடித்த படம் உங்களுக்குப் பிடிக்காமல் கூட போகலாம்.முகநூலும் அப்படித்தான்.ஒருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம் , மற்றவருக்குப் பிடித்திருக்கலாம்.அவரவர் ரசனையைப் பொருத்தது.உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்.இன்றைக்கெல்லாம் முக்கிய நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் பேப்பர் படிக்க வேண்டியதில்லை , அதை விட வேகமாக சமூக வலைதளத்தில் செய்திகள் பறந்துகொண்டு வந்துவிடுகிறது.அது முகநூலாக இருந்தாலும் சரி ட்விட்டராக இருந்தாலும் சரி , சமூக வலைதளங்கள் இன்றைக்கு தினசரி வாழ்வில் நமக்கு ஒரு முக்கிய அங்கமாகி வருகின்றன.

முகநூலில் ஒரு பையனும் பெண்ணும் சந்திக்கிறார்கள்.அவர்கள் சாட்டிங் தொடர்கிறது.அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள்.அவரவர் தொலைபேசி எண்களைப் பரிமாரிக்கொள்கிறார்கள்.அதற்கு அடுத்த கட்டத்தில் உரையாடுகிறார்கள்.பின்பு சந்திக்கிறார்கள்.தங்களுக்குள் ஒப்பான விசயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் , கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.இவர்களின் உறவு வெறும் நட்பு என்னும் வட்டத்துக்குள் இவ்வாறு சென்று கொண்டிருந்தால் நான் இங்கே குறிப்பிட்டிருந்ததைப் போல் அது ஒரு நல்ல விசயம்தான்.முகநூல் கண்ணுக்குத் தெரியாத பல நட்புகளை இணைக்கிறது , பல சிறந்த மனிதர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.அதே , இங்கே குறிப்பிட்ட அந்தப் பையனும் , பெண்ணும் தங்கள் நட்பை வேறு சில தவறான வழிகளில் எடுத்துச் செல்கிறார்கள் என்று வரும்பொழுதுதான் இந்தத் தளத்தை நாம் வஞ்சிக்கிறோம்.இதுவே நல்ல நோக்கத்திற்கும் , கெட்ட நோக்கத்திற்கும் உள்ள வித்தியாசம்.

என்னடா அப்பீசுல கூட முகநூலா என்று பலரை அவர்கள் நண்பர்கள் கிண்டலடித்திருப்பார்கள்.என்னைப் பொறுத்தவரையில் நல்லவிசயங்களை எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் தேடிக்கொள்ளலாம்.அது வீடாக இருந்தாலும் சரி , பேருந்தில் பயணம் செய்யும் போதாக இருந்தாலும் சரி அல்லது அது அலுவலகமாக இருந்தாலும் சரி.அலுவலகத்தில் சற்று ஓய்வு நேரம் கிடைக்குபொழுது அதை ஏன் முகநூலில் நல்ல எழுத்துக்களை வாசிக்கப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்றே கூறுவேன்.ஆக , மற்றவர்களின் கருத்துக்களுக்கு நீங்கள் செவி சாய்க்கத் தேவையில்லை.

உங்களுக்குத் தேவையானவைகள் சமூக வலைதளங்களில் கிடைக்கிறது என்றால் முகநூல் போன்ற தளங்களை நல்ல நோக்கத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.நிச்சயம் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.காரணம் , இங்கேதான் நிறைய எழுத்தாளர்கள் அவர்களின் சிறந்த படைப்புகளை நமக்கு இலவசமாகத் தருகிறார்கள்.நான் அவர்களிடம் இருந்து நிறைய விசயங்களைக் களவாடி விட்டேன் 

தவறாகவோ , யாரையேனும் சுட்டிக்காட்டியோ இங்கே நான் எழுதியிருப்பதாக நீங்கள் நினைத்தால் இப்பொழுதே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.அது என் நோக்கமல்ல.

———- அன்புடன் கதிர்  @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to சமூக வலைதளங்களும் அதில் நாமும்

  1. maragatham says:

    kathir petra inbam peruga ivvaiyagam.. vaiyagathil nanum..

    Liked by 1 person

    • இவ்வைய்யகத்தில் உங்களைப் போன்றவர்கள் இருப்பதால்தான் எங்களைப் போன்றவர்களுக்கு ஊக்கமாக இருக்கிறதுங்க அம்மா

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s