தான்தான் அறிவாளி மற்றவனெல்லாம் கோமாளி

14இந்த ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்கப்பட்டதுதான்.மறுக்கவில்லை.நீங்கள் யாரைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம் , எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்.இங்கே யாரும் தடுப்பணை கட்டப்போவதில்லை.ஆனால் , நாம் சொல்லும் சொல்லே மந்திரம் என்றோ , அதை மற்றவர்களிடத்தில் திணிக்க முற்படும் போதோதான் பிரச்சனைகள் எழுகிறது.”அவனவன் பாடு அவனுக்கு” என்பார்கள்.அவனவன் பிரச்சினையே தலைக்கும் மேலிருக்க நாம் ஏன் அவர்களை கேலி செய்வது , ஏளனமாகப் பேசுவது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.அதுகூட தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதைப் போன்றதுதான்.

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் திண்டல் மலைக் கோவிலருகில் முடிதிருத்தும்(சலூன்) நிலையம் சென்றிருந்தேன்.கிட்டத்தட்ட நான் ஒரு மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.சலூன் கடைக்காரர் நமக்கு அறிமுகமானவர் என்பதால் செல்லும்பொழுது அக்கம்பக்கத்து விசயங்களை எல்லாம் பேசிக்கொண்டிருப்போம்(நமக்குத்தான் எங்கு சென்றாலும் வாயை மூடிக்கொள்ளத் தெரியாதே).அன்றும் நாங்கள் இரண்டு அறிவாளிகளும் எப்படி ஈரோட்டை மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக முன்னேறச் செய்வது என்பதை விவாதித்துக்கொண்டிருந்தோம்(சரி சரி , கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மக்களே).அத்தருணத்தில் சலூனில் நுழைந்தார் அறிவில் சிறந்த ஒரு மாமனிதர்.அவரும் முடிவெட்டுவதற்குத்தான் வந்திருந்தார்.ஒரே புகை மண்டலம்.ஆமாங்க , அறிவாளி வரும்பொழுதே புகையை ஊதித்தள்ளிக்கொண்டு வந்தார்.நீங்கள் இங்கே ஒன்றைக் கவனிக்கவும்.அவர் ஏன் புகைக்கிறார் என்று நான் வினவவில்லை.அங்கே வந்து ஏன் புகைக்கிறார் என்பதுதான் என் எரிச்சல்.புகைப்பது என்பது கூட தனி மனித சுதந்திரம் தானே.அப்படி இருக்க அவரைக் கேள்வி கேட்க எனக்கு உரிமை இல்லை.அங்கே வந்து புகைக்கும் பொழுதுதான் என் கேள்வி அவரை நோக்கிச் செல்கிறது.

இருப்பினும் , அந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை.சலூன் கடை நடத்துபவரே கேட்டுவிட்டார்.பொது இடமல்லவா , மற்றவர்களையும் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.”மூஞ்சீல வந்து ஊதுற மாதிரி வந்தா எவன்தான் சும்மா இருப்பான்” அப்படின்னு நான் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே சலூன் முதலாளி கேட்டு விட்டார்.நம்ம சிறந்த அறிவாளியும் அணைத்துவிட்டார்.இப்பொழுது இந்தப் பிரச்சனை முடிந்து விட்டது.அறிவாளி அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்.அவருக்கு நிறைய சமாச்சாரங்கள் தெரியும் என்பதை எங்களிடம் சொல்கிறாராம் பாருங்கள்.”ஏன்டா சம்முவா(சண்முகம் என்பது சலூன் கடைக்காரரின் பெயர்) , இன்னிக்கு என்ன கறி கிறி எல்லாம் ஊட்டுல இல்லையா” என்றார்.அதற்கு சலூன் கடைக்காரர் “இல்லீங் , இன்னிக்கு பௌர்ணமீங் ,கோயிலுக்கு போவோணுமுங், அதனால ஊட்டுக்காரி அடுத்த வாரம் எடுத்துக்கலாம்னு சொல்லிட்டாளுங் , நல்ல விஷயம்னு நானும் சரீன்னு சொல்லிட்டேனுங்” என்றார்.

இங்கே நம் அறிவுச் செம்மல் மீண்டும் மூக்கை நுழைக்கிறார்.”அட போடா பைத்தியக்காரா.ஏன்டா சாமியா உங்கள கறி திங்க வேண்டாம்னு சொல்லுச்சு இன்னிக்கு , அப்படி திங்காம கோயிலுக்கு போனீங்ன்னா ஏதாவது தனியா உங்களுக்கு வரம் தரப் போவுதா சாமி , ஏன்டா இப்படி திரியிறீங்க” என்றார்.அதற்கு சலூன் கடைக்காரர் , “உங்க கிட்ட நிறைய காசு இருக்குதுங் , அதனால நீங்க எப்படி வேணும்னாலும் பேசலாம் ,சாமி கூட உங்களைப் பாத்து பயப்படலாம் , எங்கள மாதிரி வசதி இல்லாதவங்க சாமிய கும்புடுறதால கொஞ்சம் மனசுக்கு நிறைவா இருக்கு , பொழப்பும் நல்லாப் போவுது” என்றார்.நம்ம அறிவாளிக்கு கொஞ்சம் சுர்ருன்னு பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.’முடி’-யும் வெட்டவில்லை, பதிலும் சொல்லவில்லை , சென்றுவிட்டார்.நான் பார்வையாளனாகவே இருந்தேன்.வசதி வாய்ப்பில் எப்படி வேண்டுமானாலும் நாம் இருக்கலாம் , மற்றவர்களின் நம்பிக்கையில்/கருத்தில் தலையிட நமக்கு கொஞ்சம் கூட உரிமையில்லை.தேவை இல்லாமல் தலையிட்டால் இப்படித்தான் நடக்கும் , இதுவே பெரிய பிரச்சனையாக மாறி கலவரமாகக் கூட மாறலாம் சில நேரங்களில்.ஆக , நம் வேலை என்னவோ அதைப் பார்ப்போமே , மற்றவர்களின் சுதந்திரத்தில் வீண் தலையீடு வேண்டாம்.அவரவர் நம்பிக்கை அவரவர் சுதந்திரம்.எல்லை மீறினால் “ஆடிய பல் விழுந்தே தீரும்”.மீண்டும் சந்திப்போம்.

———– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

4 Responses to தான்தான் அறிவாளி மற்றவனெல்லாம் கோமாளி

 1. maragatham says:

  nalla padhivu.sevai thodaratum..valzhthukkal..

  Liked by 1 person

 2. Sasi kumar says:

  பிறரை கோமாளி என்று நினைப்பவர்கள் விரைவில் கோமாளியாகிவிடுகிறார்கள்.. எவ்வளவோ ஆபாச விஷம பிரச்சாரங்கள் செய்தும், பாரம்பரிய வழக்கங்களை கைவிடச் செய்ய இயலாமை மட்டுமின்றி தற்போது பொதுமக்கள் மனதில் ஏலியன் ஆனவர்களை நினைத்துப் பார்கிறேன்..

  Liked by 1 person

  • //பிறரை கோமாளி என்று நினைப்பவர்கள் விரைவில் கோமாளியாகிவிடுகிறார்கள்// –> என் வாதமும் அதுவே சசி.இந்தப் பதிவில் வரும் கதாநாயகன் கடைசியில் கோமாளியாகவே ஆகிவிட்டார்.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s