கடவுளைத் தேடி மற்றுமொரு பயணம்

12கடந்த சில வருடங்களாக இருந்த விநாயகர் சதுர்த்தி உற்சாகம் இந்த வருடம் பெங்களூரில் அவ்வளவாக இல்லை என்றே தோன்றுகிறது.மற்ற நகரங்களில் எப்படி என்று தெரியவில்லை.ஒரு வீதியை எடுத்துக்கொண்டால் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ நிச்சயம் வீதியின் ஒரு இடத்திலாவது விநாயகர் சிலை வைத்து எத்துனை நாட்கள் பூஜை செய்யத் திட்டமிட்டார்களோ அத்துனை நாட்கள் பூஜை செய்துவிட்டு பிறகு ஊர்வலம் சென்று கடைசியில் விநாயகரைக் கரைத்துவிடுவதுண்டு. விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கி வாரக்கணக்கில் கூட விசேஷங்கள் நடக்கும்.பிறகு கரைத்துவிடுவார்கள்.தினமும் ஏதாவது ஒரு வீதியில் ஆட்டம்பாட்டத்துடன் ஊர்வலம் வருவார் விநாயகர்.இந்த முறை அதுவும் கூட குறைவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த முறை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகள் கூட அதிக அளவில் இல்லை என்றே தோன்றுகிறது.காரணம் என்னவென்று தெரியவில்லை.விநாயகர் சதுர்த்தியன்று காலை நான்கு மணிக்கு மாரத்தஹள்ளியில் போக்குவரத்து நெரிசல் என்று கேள்விப்பட்டேன்.அந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் பெரும்பாலான மக்கள் சுற்றுலாவிற்கும் சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சென்றதே.மூன்று நாட்கள் தொடர் விடுமுறை , அதுவும்கூட காரணமாக இருக்கலாம்.இதை வைத்து மக்களிடம் பக்தி குறைந்து , பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகரித்துவிட்டதா என்று யூகிக்கமுடியவில்லை என்றாலும் கடந்த சில வருடங்களை விட இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி சற்று டல்லாகவே காணப்பட்டது.இனி வரும் காலங்கள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

விநாயகர் சதுர்த்தி நாட்களில் இன்னொரு விசயமும் நடக்கும்.விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டாலே பெங்களூர் போன்ற நகரங்களில் வசூல் நடவடிக்கை ஆரம்பமாகி விடும். கொல்கத்தாவில் சில வருடங்கள் வசித்த நண்பர் ஒருவர் அங்கும் கூட ஒரு சில கும்பல் துர்கா பூஜை சமயத்தில் கட்டாய பண வசூல் செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.தினம் ஒரு கும்பல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட பண வசூல் செய்ய வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.நீங்கள் இல்லை என்று சொன்னாலும் விடுவதில்லை.குறைந்தபட்சம் ஐம்பது அல்லது நூறு கொடுத்தாக வேண்டும்.இப்படி எல்லாம் வசூல் செய்து தனக்கு விழா எடுக்க வேண்டும் என்று விநாயகர் இவர்களைப் பணிக்கிறாரா என்றுகூட வினவத்தோன்றும்.இந்த வருடம் இதுவும் கூட குறைவே.அவ்வளவாக தொந்தரவுகள் இல்லை.இதை நான் ஏன் தொந்தரவு என்கிறேன் என்றால் , உங்களுக்கு தெய்வத்தை வழிபட வேண்டும் என்றால் உங்கள் இஷ்டப்படி அந்த வழிபாடு இருத்தல் வேண்டும்.ஒரு நூறு ரூபாய் கட்டாயமாக இந்தக் கும்பல்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் இடத்திற்குச் சென்று வழிபட வேண்டும் என்றெல்லாம் இல்லை.ஓரிரு குரூப் என்றால் பரவாய் இல்லை , கடவுளுக்குத்தானே கொடுக்கிறோம் என்று கொடுத்துவிடலாம்.தினம் ஒரு கும்பல் வசூல் செய்ய வந்தால் அதை பக்தி என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சதுர்த்தி அன்று விநாயகர் சிலை வாங்கவோ அதை வைத்து சில நாட்கள் பூஜிக்கவோ வேண்டுமானால் அவரவர் சொந்தச் செலவில் அதைச் செய்யலாம்.வீடு வீடாகச் சென்று கட்டாயப்படுத்தி வசூல் செய்து விழா நடத்துவதை ஆன்மீகத்தின் பக்கங்களில் வழிபாடு என்று நிச்சயம் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
வீதிக்கு வீதி வெவ்வேறு குரூப்புகளால் அமைக்கப்பட்டிருக்கும் விநாயகர் ஊர்வலத்தின்போது அசம்பாவிதங்களும் நடந்திருக்கின்றது.கோவில்களுக்குச் சென்று விநாயகரை வழிபடுதலே திருப்தி அளிக்கின்றது.சரி , அப்படித்தான் கோவில்களுக்குச் செல்வோம் என்று சென்றால் அங்கும் கூட நமக்கு சில நேரங்களில் ஏமாற்றம்தான்.

சில தினங்களுக்கு முன் , காவிரிக்கரையினருகில் குடிகொண்டிருக்கும் விநாயகரைத் தரிசிக்கச் சென்றிருந்தோம். பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை வாங்கிப் போட்டாகிவிட்டது.பிள்ளையாரைச் சுற்றி இரண்டாவது சுற்று வரும்பொழுதே அந்தக் காட்சியைப் பார்க்க நேர்ந்தது.பிள்ளையாருக்குப் போடப்பட்ட அருகம்புல் மாலை எங்களின் இரண்டாவது சுற்றிலேயே கழற்றப்பட்டு வேறொரு கடைக்காரரால் தண்ணீரில் சுத்தமாகக் கழுவப்படுகின்றது.பிறகு மீண்டும் அதே அருகம்புல் மாலை அவரின் கடைக்குச் செல்கிறது.அங்கே மீண்டும் விற்பனைக்குத் தயாரான நிலையில் தொங்கவிடப்படுகிறது. அந்த மாலை அதற்கும் முன் எத்துனை முறை விற்பனையைப் பார்த்தது என்று தெரியவில்லை.ஒரு வித கோபம் வந்தாலும் அவர்களிடத்தில் எல்லாம் குடும்பத்துடன் சென்றிருக்கும் பொழுது ஏன் சண்டையிட வேண்டும் என்று வாயை மூடிக்கொண்டு வந்துவிட்டேன்.இப்படியும் பிழைப்பு நடத்த வேண்டும் என்றால் அப்படி ஒரு பிழைப்புத் தேவையா?.இப்படிப்பட்டவர்களால்தான் ஆன்மீகத்தின் மேல் அவ்வப்பொழுது கேள்விக் கணைகளும் இழிவுப் பேச்சுக்களும் அரங்கேறி வருகின்றது.நம்மைப் போன்றவர்களுக்கும் கூட நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடுமோ என்ற பயமும் சந்தேகமின்றி எழுகிறது.

—————- அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

3 Responses to கடவுளைத் தேடி மற்றுமொரு பயணம்

 1. Prasad Babu says:

  உங்கள் சமீபத்திய எழுத்தர் மீது முதலில் வாழ்த்துக்கள்.
  I thought my comments would inject a Pro-Hindutva subjectivism so I have withdrawn my comments on the article.
  Please continue and would look forward to more scibbles.
  pB

  Liked by 1 person

  • கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது அண்ணா.உங்கள் கருத்தை நீங்கள் தாராளமாக பதியலாம்.பதிவுகளைப் படித்தமைக்கு நன்றி

   Like

 2. விநாயகரைப் பற்றிப் பேசினால் அவர் தமிழர்களுக்கு அறிமுகமான காலத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.விநாயகர் தமிழர்கள் ஆதி காலத்தில் வழிபட்ட கடவுள் இல்லை என்றும், தமிழர்களுக்கு விநாயகர் ஆறாம் நூற்றாண்டு வரை அறியப்படாத கடவுள் என்றும் வரலாறு கூறுகிறது(பெரும்பாலான நூல்கள் ஆறாம் நூற்றாண்டு என்றே குறிப்பிடுகின்றது).விநாயகர் வழிபாடு பூனா நகரில் தோன்றியது என்றும் பின்னர் வாதாபி நகரத்தில் இருந்து பல்லவ மன்னன் நரசிம்மவர்மனின் தளபதியாக இருந்த பரஞ்சோதி மூலம் தமிழகத்திற்கு விநாயகரைக் கொண்டுவந்து வழிபட்டதாகவும் வரலாறு கூறுகின்றது.இது ஒரு புறமிருக்க பிள்ளையார்பட்டியின் வரலாறுகூட இங்குள்ள பிள்ளையாரைக் காலத்தால் முந்திய பிள்ளையார் என்றே உணர்த்துகின்றது.யானையின் சாயலே அதிகமாகக் காட்சியளிக்கும் இப்பிள்ளையாரின் காலத்தை ஆறாம் நூற்றாண்டு என கணித்துள்ளனர்.ஆக , அறிஞர்களின் கணிப்புப்படி விநாயகர் தமிழகத்திற்கு ஆறாம் நூற்றாண்டிலிருந்துதான் அறிமுகம் என்கிறது வரலாறு.

  பிள்ளையார்பட்டியில் குடிகொண்டிருக்கும் விநாயகர் ஆரம்ப காலங்களில் “தேசி விநாயகர்” என்றே அழைக்கப்பட்டுள்ளார்.இப்பொழுது “கற்பக விநாயகர்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.அதற்குக் காரணம் உண்டு.”தேசி” என்ற சொல் பல தேசங்கள் கடந்து தொழில் புரியும் வணிகர்களைக் குறிப்பதாகவும் , அவர்கள் மூலமாகவே வேறு நாட்டிலிருந்து(குறிப்பாக வடநாட்டில் இருந்து) தமிழ்நாட்டிற்கு விநாயகர் வந்திருக்கலாம் என்றும் குறிப்புகள் உணர்த்துகின்றன.அதிலும் பிள்ளையார்பட்டியில் இருக்கும் கற்பக விநாயகர் அங்கே நகரத்தார் என்றழைக்கப்பட்ட நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுக்கே உரியது என்றும் , வணிகத்தில் பழமை வாய்ந்தவர்களான இம்மக்களால் கூட விநாயகர் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்திருக்க வேண்டும் என்றும் குறிப்புகள் உணர்த்துகின்றன.இந்தச் செய்திக் குறிப்புகள் எல்லாம் ஆறாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து ஏழாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திற்குள் விநாயகரைப் பற்றிய வரலாற்றை நமக்களிக்கிறது.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s