தமிழர்களும் பண்பாடும்

156சமீபத்தில் படித்த புத்தகமொன்றில் சொல்லப்பட்டிருந்த சம்பவம் ஒன்று மிகவும் பாதித்தது.பண்பாட்டிற்கு இலக்கணமாகக் கொடுக்கப்பட்டிருந்தது அந்தச் சம்பவம்.சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் தென்தமிழகத்தின் ஒரு பகுதியில் நடந்த சம்பவம் அது. இளைஞர் ஒருவர் விபத்தொன்றில் மரணிக்கிறார்.வயது இருபத்தெட்டு.மனைவிக்கு வயது இருபத்து மூன்று.மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை அவர்களுக்கு.துக்க வீட்டில் அழுகுரல்கள் எங்கெங்கும்.மேளச்சத்தமும் அதனுடன்.ஒரு சமயத்தில் மேளச்சத்தம் நிறுத்தப்படுகின்றது.துக்க வீட்டினுள் இருந்து மூதாட்டி ஒருவர் வெளியில் வருகிறார் ஒரு தண்ணீர் நிரம்பிய செம்புடன்.அந்த இடம் அமைதியாகிறது.அனைவரும் மூதாட்டியை நோக்கியவண்ணம் உள்ளனர்.மூதாட்டி செம்புடன் கொஞ்சம் பிச்சிப்பூக்களை வலக்கையில் மடக்கி வைத்திருக்கிறார்.

தண்ணீர்ச் செம்பை கூட்டத்தின் நடுவில் வைக்கிறார்.பின்பு கையில் தான் வைத்திருந்த பிச்சிப்பூக்களில்
ஒன்றை எடுத்து செம்பில் நிறைந்த நீரின் மீது வைக்கிறார்.கூட்டத்தில் இருப்பவர்களுக்கு மிகுந்த வேதனை.மூதாட்டி இன்னுமொரு பிச்சிப் பூவை செம்பில் நிறைந்த நீரின் மீது வைக்கிறார்.அங்கிருந்தவர்களுக்கு சோகம் இன்னும் அதிகரிக்கிறது.மூன்றாவது முறையும் மூதாட்டி ஒரு பிச்சிப் பூவை வைக்கிறார்.கூட்டத்தில் அனைவருக்கும் சோகம் இன்னும் அதிகமாகி இருந்தது.பின்பு அந்த மூதாட்டி நீரிலிட்ட மூன்று பூக்களையும் கையில் எடுத்துக் கொண்டு செம்பு நீரைத் தரையில் கொட்டி விட்டு மீண்டும் துக்க வீட்டினுள் நுழைகிறார்.

இந்தச் சடங்கு எதற்காகச் செய்யப்பட்டது என்பதை அறிந்தபொழுது மிகவும் வியப்பாகவும் பண்பாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெளிவானது.விபரம் இதுவே.இறந்த வாலிபரின் மனைவி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதால் அதுவரை அந்தச் செய்தி ஊரார் அறிந்திராத செய்தியாக இருந்ததால் மூன்று பிச்சிப்பூக்களை இப்படிச் செம்பில் இருந்த நீரின் மீது வைத்து அப்பெண் அப்பொழுது மூன்று மாதக் கர்ப்பிணி என்று அனைவருக்கும் தெரியப்படுத்துகிறார் மூதாட்டி. குழந்தை பிறந்த பின் அது யாருக்குப் பிறந்த குழந்தை என்ற இழிவுப் பேச்சும் அப்பெண்ணைத் தரக்குறைவாகவும் ஊரார் பேசிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்தச் சடங்கு முறையை அம்மக்கள் பின்பற்றி வருவதாகவும் நூலில் குறிப்பிட்டிருந்தார் ஆசிரியர்.

எப்படிப்பட்ட பண்பாடுடைய நாட்டில் பிறந்திருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் வேறு சில நிகழ்வுகள் நம்மை வருத்தப்பட வைக்கிறது.பெரு நகரங்களில் போக்குவரத்துச் சிக்னல்களில் நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம்.”காதலர் தினம்” திரைப்படத்தில் கூட மும்பையில் இச்சம்பவத்தை வேதனை தரும் விதமாக படமாக்கி இருப்பார் இயக்குனர் கதிர் அவர்கள்.ஆம் , குழந்தைகளை வைத்துப் பிட்ச்சை எடுப்பது.ஒரு கட்டத்தில் குழந்தை மரணிப்பதையும் காட்டி இருப்பார்.கண்ணீரை நிச்சயம் வரவைக்கும் காட்சியது.இவர்களை எல்லாம் வைத்து ஒரு பெரிய ரௌடி சாம்ராஜ்யமே பிழைப்பு நடத்தி வருகிறது பெருநகரங்களில்.

பிஞ்சுக் குழந்தைகளை எங்கிருந்தோ திருடி வந்து பிட்ச்சை எடுக்கும் பெண்களிடமோ அல்லது பிட்ச்சை எடுக்கும் சிறு குழந்தைகளிடமோ தன் மகனாகவோ , மகளாகவோ , தம்பியாகவோ , தங்கையாகவோ நடித்து பிட்ச்சை எடுக்கச் செய்து அவர்களின் வேதனையில் இந்த ரத்தக் காட்டேறிகள் வியாபாரம் நடத்துகிறது , பிட்ச்சை வியாபாரம்.
இது ஒரு புறம் இருக்க , குழந்தையைப் பெற்ற தாயே தவறான வழிகளில் சென்று குழந்தையைப் பெற்றெடுத்து பின்பு பிழைக்க வேறு வழியின்றி கடைசியில் பிட்ச்சை எடுக்கவே வந்துவிடுகிறார்.முன்பும் கூட பிட்ச்சை எடுத்தவராகத்தான் இருந்திருப்பார். ஒரு கயவனின் கையில் சிக்கிவிட்டு அவனால் கர்ப்பமும் அடைந்து பிறகு பிள்ளையும் பெற்றுவிட்டு கைவிடப்பட்டு மீண்டும் குழந்தையுடன் அதே பிட்ச்சைத் தொழிலுக்கே வந்துவிடுகிறார்கள்.

பெங்களூரில் எல்லாம் சிக்னல்களில் கைக் குழந்தையுடன் நிறையப் பெண்கள் பிட்ச்சை எடுப்பதை நீங்கள் பார்க்கலாம். பிஞ்சுக் குழந்தையைப் பார்க்கும் பொழுது அப்பெண்ணின் மீது ஒரு வித எரிச்சல் வந்தாலும் கூட இப்படிப்பட்ட பெண்கள் நிறையப் பேர் வயிற்றுப்பிளைப்புக்காகவும் கயவர்களின் ஆசை வார்த்தைகளையும் நம்பி ஏமாந்த பிறகே மீண்டும் பழைய தொழிலுக்கே வந்துவிடுகின்றனர்.குழந்தைக்கு பால் கொடுக்கும் அளவிற்குக் கூட வயிற்றை நிரப்பமுடியாத அபலைப் பெண்கள் நிறையப் பேர் இப்படிப் பிட்ச்சை எடுக்க வந்துவிடுகிறார்கள்.கணவன் இல்லை , காப்பாற்ற ஆளில்லை எனும்பொழுது பிட்ச்சை எடுப்பதே அவர்களுக்குத் தெரிந்த பிழைப்பாகி விடுகிறது.இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு என்னவாக இருக்கும் என்று நம்மால் எளிதாக கூறிவிட முடிவதில்லை.ஆனால் இவை எல்லாம் மாற்றம் காண வேண்டும் என்றுதான் எப்பொழுதும் போல் நாம் நம்பிக்கை வைக்கலாம்.பண்பாடும் , கலாச்சாரமும் பிற்காலத்தில் எந்த வடிவத்தில் தன்னைத் தக்கவைத்திருக்கும் என்று நினைக்கும் பொழுது சற்றே மனம் ஆச்சரியக் குறியை உள்ளிருந்து வெளிப்படுத்துகிறது.

——- அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

5 Responses to தமிழர்களும் பண்பாடும்

  1. maragatham says:

    sasthiramum sambiradhayamum edho oru nalla karanathirkagave pirandhavai..nalla thagavalgal thodarattum kadhir..

    Liked by 1 person

  2. Lakshmamutha Ganesan says:

    பெண்மையின் புனிதத்தை எல்லா காலத்திலையும் யாரோ ஒருவர் புரியவைத்தால் மட்டுமே இகழ்ச்சியிளிருந்து மீள முடிகிறது. இது ஒன்றே பெண்மைக்கு விதிக்கப்பட்ட எக்காலத்தும் தீரா சாபம்…

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s