தண்டிக்கப்பட வேண்டியவர்களா நாங்கள் ?

123“வானம் ஏறி நீ வைகுந்தம் காட்டுவது இருக்கட்டும், முதலில் கூரையேறி குருவிபிடித்து காட்டு” என்பார்கள் ஊரில். இதைப்போன்றதுதான் நான் சமுதாயத்தை திருத்துகிறேன் , புரட்சி செய்கிறேன் , என்னுடன் வாருங்கள் , என் பேச்சைக் கேளுங்கள் என்று சொல்வது.இன்றைக்கு யாரும் யாருக்கும் அறிவுரை சொல்லத் தேவை இல்லை.அப்படியே சொன்னாலும் கேட்பவர்கள் இங்கே இல்லை.அதையும் மீறி இல்லை நான் உங்களைத் திருத்தியே தீருவேன் என்று நீங்கள் சென்றால் “முட்டாள்” என்ற பட்டத்துடன்தான் திரும்பி வர நேரிடும்.அப்படிப்பட்ட சமுதாயத்தில்தான் இப்பொழுது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.அது சரி , மற்றவர்களைத் திருத்த நாம் யார் ? சம்பந்தமே இல்லாமல் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும் ? தேவையற்றதுதானே ? ஆம் என்பதே பதில். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடத் தேவை இல்லை.அவர்கள் செய்யும் காரியங்களும் அவர்களுடைய பழக்க வழக்கங்களும் மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்காத வரை.அவர்களால் பொதுமக்களுக்கு தொந்தரவோ , ஆபத்தோ வரும்பொழுதுதான் நம் மூக்கை நுழைக்க வேண்டியிருக்கிறது.இதற்கு யாருடைய அனுமதியும் தேவையற்றது.

சமீப காலமாக நிறைய விபத்துகளைப் பார்த்தும் , நிறைய விபத்து சம்பத்தப்பட்ட செய்திகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.அதிலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச் சென்று விபத்து ஏற்பட்டு உயிரிழந்த செய்திகள் ஏராளம்.இதிலும் கூட , மது அருந்தியவன் உயிரிழப்பதுடன் சம்பந்தமே இல்லாமல் சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் பலியான செய்திகள் நிறைய உள்ளன.இதுதான் நாம் வருத்தப்பட வேண்டிய விஷயம்.தனி மனித சுதந்திரம் என்பது மது அருந்துவதிலும் கூட இருக்கிறது , இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் , ஒருவன் மது அருந்துவதால் அவனுக்கு சம்பந்தமே இல்லாத அப்பாவிகள் பாதிக்கப்ப்படும்பொழுது இந்த தனி மனித சுதந்திரம் கேள்விக்குள்ளாகிறது.மது அருந்துவது அவரவர் சுதந்திரம் என்றால் அதை அவரவர் இடத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.எவன் செத்தாலும் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை.அது அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் உள்ள பிரச்சனை.ஆனால் குடித்துவிட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு நடு ரோட்டில் கண்ணை மூடிக்கொண்டு வந்து ரோட்டில் செல்லும் ஒரு அப்பாவிமீது மோதும்பொளுதுதான் அவனை அங்கேயே வைத்து அடித்து மிதிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

சென்ற சனிக்கிழமை நானும் குடும்பத்தில் சிலரும் இப்படிப்பட்ட இரண்டு முட்டாள்களால் ஒரு பெரிய விபத்தில் சிக்கி இருப்போம்.யார் செய்த புண்ணியமோ நூலிலையில் தப்பித்து விட்டோம் .ஈரோட்டில் இருந்து ஊருக்குக் காரில் சென்று கொண்டிருக்கிறோம்.முப்பது கிலோமீட்டர் தாண்டி விட்டோம்.பிறகுதான் எமன் எங்கள் எதிரே வந்துகொண்டிருந்தான்.இரண்டு இளைஞர்கள்.கண்ணை மூடிக்கொண்டு வருவதுபோல் இடதுபுறமும் வலதுபுறமும் மாறி மாறி வேகத்துடன் வந்துகொண்டிருந்தார்கள் . ஒரு நூறு மீட்டர் இடைவெளி இருக்கும் பொழுதே நான் பார்த்துவிட்டேன்.காரில் மோதிவிடுவார்கள் , பின்பு அவர்களுக்கு சாவு உறுதி என்று நினைத்தபொழுதே காரை இடது பக்கம் திருப்ப முயற்சித்தால் அங்கே பாலம் இருக்கிறது , தடுப்புச் சுவர் இல்லை.இடது பக்கம் உடனே திருப்பினால் பெரிய இழப்பு எங்களுக்குத்தான் என்பது தெளிவானது.இரண்டு முட்டாள்களும் எதிரில் காரை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள் . நானும் முடிந்தவரை தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டே செல்கிறேன்.ம்ம்ஹூம்..அவர்கள் காதில் விழவில்லை.இதற்கும் மேல் அவர்களைக் காப்பாற்ற நினைத்தால் நான் என் பிள்ளைகளை இழக்க நேரிடும் என்று நினைத்து ஒரு கட்டத்தில் அப்படியே காரை நிறுத்திவிட்டேன்.இருவருக்கும் காரின் அருகில் வந்த பிறகு ஹாரன் சத்தம் கேட்டிருக்கும்போல , காரில் லேசாக மோதிவிட்டு வண்டியை வலது பக்கம் திருப்பிவிட்டார்கள்.காரில் இருந்து இறங்கி அந்த முட்டாள்களை துவைத்து விடவேண்டும் என்று நினைத்தாலும் அதைச் செய்யவில்லை.சுயநினைவில் இல்லாதவர்களை அடிப்பது செத்த பாம்பை அடிப்பதைப் போன்று.சில நிமிடங்கள் கழித்து சென்று விட்டோம்.

இப்பொழுது நினைத்தாலும் பகீர் என்று இருக்கிறது.நான் காரை நிறுத்தவில்லை என்றாலும் , இடது பக்கம் திருப்பி இருந்தாலும் நிச்சயம் பெரிய ஆபத்து எங்களுக்கோ இல்லை அவர்களுக்கோ ஏற்பட்டிருக்கும்.நல்ல வேலை தப்பித்துவிட்டோம்.இரண்டு மணி நேரம் கழித்து அதே வழித்தடத்தில் மாப்பிள்ளை மயில்சாமி பைக்கில் ஊருக்கு வந்திருக்கிறார் .ஈரோட்டில் இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தாண்டிய பிறகு ஒரு இருட்டான பகுதியில் இரண்டு பேர் கீழே விழுந்து கிடந்திருக்கிறார்கள்.தலையில் பலத்த காயங்களுடனும் ரத்தத்துடனும்.எந்த வாகனத்தில் அடி பட்டார்களோ தெரியவில்லை.அடித்த வாகனம் சென்றுவிட்டது.இருவரும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.அந்த இடத்தில் வெளிச்சம் அவ்வளவாக இல்லை என்பதால் , பைக்கில் சென்றுகொண்டிருந்த மாப்பிள்ளைக்கு எதிரில் கீழே கிடக்கும் இவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.கிட்டத்தட்ட அவர்கள் மேல் மோதும் தருவாயில் பார்த்துவிட்டார் .என்ன செய்வதென்றறியாமல் வேகமாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி இவரும் ஆபத்தில் இருந்து தப்பித்துவிட்டார்.பிறகு 108-ற்கு போன் செய்து வண்டியை வரவழைத்து அவர்களை அனுப்பிவிட்டார்.என்னிடம் இதைக் கூறிய பொழுது நான் யோசித்தேன் , கீழே கிடந்த இருவரும் என் காரின் மீது மோதியவர்களாகக் கூட இருக்கக்கூடும் என்று.மாப்பிள்ளை கூறிய அந்த இருவரின் அடையாளங்கள் ஒத்துப்போனதால் அவர்களாக இருக்கக்கூடும் என்று நினைத்தேன்.எப்படியோ நாங்களும் எங்களுக்குப் பின்னர் மாப்பிள்ளையும் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்துவிட்டோம்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குடிமகன்களே – குடியுங்கள் , நீங்கள் எல்லாம் பெரிய அறிவாளிகள்(என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்).உங்களுக்கு யாரும் புத்திமதி சொல்லத் தேவை இல்லை.ஆனால் , உங்கள் குடிப்பழக்கம் மற்றவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்பொழுது நீங்கள் அவர்களுக்கு எமனாகவே தெரிகிறீர்கள்.அப்பாவிகளைத் தண்டிக்க வேண்டாம்.உங்களோடும் உங்கள் குடும்பத்தோடும் தண்டனைகளை வைத்துக்கொள்ளுங்கள் அறிவு ஜீவிகளே.

———– அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s