நானா இது ?

12“திருடர்கள் ஜாக்கிரதை ” என்பதைப் போல் இருக்கிறது மாமா என்று சொல்லிவிட்டாள் அக்கா மகள் நேற்று.அந்த அட்டையில் இருந்த என்னுடைய போட்டோவைப் பார்த்து.அது நூற்றுக்கு நூறு உண்மை.ஒப்புக்கொண்டேன்.ஆனால் அது என் தவறல்ல.இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள்.அன்று ஒரு துக்க விசாரிப்பிற்காக கோபி சென்று விட்டு நானும் மனைவியும் எங்கள் ஊருக்கு வந்துகொண்டிருக்கிறோம்.அன்றிரவே பெங்களூர் பயணம்.கோபியில் இருந்து வந்துகொண்டிருக்கும் பொழுதே அம்மாவிடம் இருந்து பல போன் கால்கள்.இதோ வந்துவிட்டோம் , இதோ வந்துவிட்டோம் என்னும் பதிலையே மனைவி என் அம்மாவிடம் கொடுத்துக்கொண்டிருந்தார்.ஒரு வழியாக மாலை நான்கு மணிக்கு வீட்டிற்கு வந்துவிட்டோம்.சீக்கிரமா கிளம்புங்க ரெண்டு பேரும் . இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருக்கு.பஞ்சாயத்து ஆப்பீசுல ஏற்கனவே கூட்டம் அதிகமா இருக்கும்.கெளம்புங்க போலாம் என்று அம்மா விரைவு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார்.வீட்டில் இருந்து கிளம்பி பஞ்சாயத்து அலுவலகம் சென்றாகிவிட்டது. நீண்ட வரிசை.நிச்சயம் மீதமிருக்கும் நேரத்தில் நாம் போட்டோ எடுக்க முடியாது போலாம் வாம்மா என்றுதான் அம்மாவிடம் கூறினேன்.அடுத்த முறை போட்டோ எடுத்துக்கலாம் என்றேன்.நம்மளப் பெத்தவங்க எல்லாம் கில்லாடிங்க இல்லையா.யார்கிட்டயோ போய் பேசி நானும் மனைவியும் எளிதில் உள்ளே சென்று போட்டோ எடுக்க உதவிவிட்டார் அம்மா.அப்பாவும் அம்மாவும் அடுத்த முறை எடுத்துக்கொள்ளலாம் என்று திட்டம்.நாங்கள் அன்றிரவே கிளம்ப வேண்டுமென்பதால் சிபாரிசு பிடித்து இருவரையும் உள்ளே அனுப்பி விட்டார்.

கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்தாகிவிட்டது.போட்டோ எடுப்பவர் சொன்ன பொசிஷனுக்கு தகுந்தாற்போல் முகத்தை மாற்றிக்கொண்டே இருந்துவிட்டு கடைசியில் போட்டோவும் எடுத்தாகிவிட்டது.”சார் எப்பங்க சார் இந்த அட்டை எங்களுக்கு கிடைக்கும்” என்றோம். “உங்களுக்கு சீக்கிரம் தபாலில் வந்துவிடும்” என்றார்.இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.எங்களுக்குப் பிறகு போட்டோ எடுத்த அப்பா அம்மாவிற்கு ஆறு மாதங்களு முன்பே அட்டை வந்துவிட்டது.எங்களுக்கு சென்ற வாரம்தான் கிடைத்தது.நேற்று ஊருக்கு சென்றபொழுது அப்பா என்னிடம் என்னுடைய அட்டையையும் , மனைவியின் அட்டையையும் கொடுத்தார்.பக்கத்தில் அக்கா மகள் அமர்ந்திருந்தாள்.அந்த அட்டையைப் பார்த்த பிறகுதான் இந்தப் பதிவின் முதல் இரண்டு வார்த்தைகளை உடனே என்னிடம் கூறிவிட்டாள்.

அவ்வளவு வேகமாக கோபியில் இருந்து வந்து , அம்மாவின் சிபாரிசில் உள்ளே நுழைந்து இந்த அட்டையால் பெரிய பயன் இருக்கிறது , இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடக்கூடாது என்றெல்லாம் நினைத்து எடுத்த போட்டோ அது.அரசாங்கம் அவ்வளவு வேகத்தைக் காட்டியது அப்பொழுது.நேற்றைக்கு அந்த அட்டையைப் பார்த்தவுடன் இவ்வாறு அப்பாவிடம் கூறினேன் – “சத்தியமாக இந்த அட்டையைக் காட்டினால் நம்மள யாருமே அதில் இருப்பது நாமதான் என்று நினைக்கமாட்டார்கள் , நீங்கள் பீரோவில் பத்திரமாக வைத்திருங்கள் இப்போதைக்கு எனக்கு வேண்டாம் , இதை நிச்சயம் எங்கேயும் எதற்கும் அடையாள அட்டையாகப் பயன் படுத்தப்போவதில்லை , நீங்களும் அம்மாவும் கூட பயன்படுத்தவேண்டாம்” என்று கூறிவிட்டு அப்பாவிடமே கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.ஒருவரின் முகமும் கூட அது நாங்கள்தான் என்று எங்களால் கூட அடையாளம் காட்டமுடியாத அளவிற்கு அவசர கதியில் , முகம் மேலே எங்கேயோ பார்த்தவாறு படம் பிடிக்கப்பட்டு அட்டையிலும் ஒட்டப்பட்டுவிட்டது.இதை ரயிலில் பயணம் செய்யும் பொழுதும் அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள் , நான் இதைக் காட்டினால் அபராதம் கட்டுவது நிச்சயம்.

ஏற்கனவே 80 கோடி மக்களுக்கு இந்த அட்டையை வழங்கிவிட்டதாக கடந்த கால ஆட்சியில் தகவல் வந்தது(மத்தியில்).அனைத்தும் அவசரகதியில் நடந்திருக்கும் என்பதே என் கருத்து.இப்பொழுது புதிய அரசு வந்துவிட்டது.இந்த அட்டையை எவ்வாறு அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வார்கள் என்று தெரியவில்லை.இருப்பினும் இந்த அட்டை எனக்கு எந்த வகையிலும் இப்போதைக்கு பயன்படப் போவதில்லை என்பது உண்மை.மக்களுக்காக தொடங்கப்படும் பெரும்பாலான நல்ல திட்டங்கள் அரசியில் காழ்ப்புணர்ச்சியால் முழுமை அடைவதில்லை என்பதிலும் , ஓட்டை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு இப்படி அவரச வேலைகள் செய்தால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை என்பது இந்த அட்டை விசயத்தில் நான் தெரிந்துகொண்டேன்.உங்களின் அனுபவம் எப்படி என்று தெரியவில்லை.ம்ம்ஹூம்…என் வாயால் அது என்ன அட்டை என்று சொல்லமாட்டேன்.நீங்கள் விஷயம் தெரிந்தவர்கள் , நான் சொல்லவேண்டுமா என்ன ?

———– அன்புடன் கதிர்  @ https://www.facebook.com/kathir.bangalore.3/

 

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s