இங்கே நேர்மையாளர்களுக்கு மதிப்பில்லை

12காமராஜர் அய்யா இன்று உயிரோடு இருந்திருந்தால் அவருடைய அரசியல் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று சில தினங்களுக்கு முன் ஒருவர் முகநூலில் கேள்வி எழுப்பியிருந்தார்.பல விதமான பதில்கள் வந்திருந்தன.அதில் எனக்கு சற்றே யோசிக்க வைத்த பதில் என்னவென்றால் – “அவர் உயிரோடிருந்திருந்தால் இன்று அவரால் அரசியலில் ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட ஆக வாய்ப்பில்லை” என்று ஒருவர் கருத்துக் கூறியிருந்தார்.இதை நீங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் அவர் ஏதோ காமராஜரை இழிவாகப் பேசுகிறார் என்று நினைக்கத்தோன்றும்.ஆனால் , அவர் தற்கால அரசியல் சூழ்நிலைகளையும் , அரசியலை அரசியலாகவே நடத்தும் முறையையும் மனதில் வைத்துக் கூறியிருந்தார்.என்னைப் பொறுத்த வரையில் அந்தக் கருத்தை ஏற்கிறேன்.அரசியல் என்பது மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் நலப் பணிகளைச் செய்வதேயாகும்.மக்கள் நலப் பணிகளைச் செவ்வனச் செய்தாலே மற்ற துறைகளில் முன்னேற்றம் தானாக வந்துவிடும்.ஆனால் இன்றைக்கு அப்படியா நடக்கிறது ? இல்லை . நான் வெறும் தமிழகத்தை மட்டும் மனதில் வைத்து இதைக் கூறவில்லை. இந்தியாவின் அரசியல் சாசனம் எப்பொழுதே கரை படிந்து முற்றிலும் மாற்றி எழுதப்பட்டுவிட்டது.ஆங்காங்கே ஒரு சில தன்னலமற்ற அரசியல் தலைவர்களைப் பார்க்கலாம் , அவ்வளவுதான்.

“If you are in power , do it for the poor” என்று சொன்னவர் திரு.சகாயம் IAS அவர்கள்.அதன்படியே அவருடைய வாழ்க்கையும் இன்றுவரை தொடர்கிறது.”நீங்கள் ஒரு உயர்ந்த பதவியில் இருந்தால் ஏழைகளுக்கு நல்லது செய்யுங்கள்” என்ற வழியில் தன் வாழ்க்கையையும் தன் உத்தியோகத்தையும் அமைத்துக்கொண்டவர்.எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் அவர் பதவி வகித்த துறைகளில் நிறைவேற்றி இருக்கின்றார். அப்படிப்பட்ட , அப்பழுக்கற்ற IAS அதிகாரி அவர். இவர்மேல் வைத்த பற்றின் காரணமாக இவரே தங்கள் மாவட்டத்தின் ஆட்சியராக தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்த மக்கள் ஏராளம்.ஆனால் , இப்படிப்பட்ட நல்லவர்களை நேர்மையான வழியில் வேலை செய்ய விடுவதில்லையே நம் நாடும் நம் அரசியல் சூழ்ச்சியும்.இருபத்து மூன்று வருடத்தில் , இருபத்து நான்கு முறை பணி இட மாற்றம்.நினைத்துப்பாருங்கள்.இப்படி மாறிக்கொண்டே இருந்தால் நிலையான ஒரு மாற்றத்தை இவர்களால் எப்படிக் கொடுக்க முடியும்.இருந்தாலும் இவர் மனமுடைந்து போவதில்லை.”நீங்கள் என்னைத்தானே இட மாற்றம் செய்தீர்கள் , என் நேர்மையை அல்லவே” என்று சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்.இருப்பினும் , இன்றுவரை இத்துனை இட மாற்றங்களைக் கண்டவர் ஒருபோதும் தன் நேர்மையை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை.

இப்பொழுது அவர் ஏன் இட மாற்றம் ஆகி இருக்கிறார் என்பதை விரிவாகச் சொன்னால் அது ஆட்சியாளர்களைக் குறி வைத்து எழுதப்பட்டதாக அமைந்துவிடும்.தவிர்த்து விடுகிறேன்.இருப்பினும் இவரைப் போன்ற அதிகாரிகளை நம் ஆட்சியாளர்கள் மதிக்கத் தவறி விட்டதாகவே கருதுகிறேன்.நேர்மையாக ஒருவன் இருந்தால் இன்றைய சூழ்நிலையில் பிழைக்கத்தெரியாதவன் என்றே சமூகம் பச்சை குத்தி விடுகிறது.என்ன தவறு நடந்தாலும் ஆட்சியாளர்களை அனுசரித்துப் போகத்தெரிந்தவரே ராஜ வாழ்க்கை வாழலாம் நம் நாட்டில்.கண்டும் காணாமலும் சென்றுவிட வேண்டும்.ஆனால் திரு.சகாயம் போன்ற சில நல்லவர்களால் அப்படி முகமூடி அணிந்து வேலை செய்யமுடிவதில்லை.அதன் காரணமாகவே இட மாற்றம் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.சரி , அதை விடுங்கள்.நாளைய இந்தியா இன்றைய இளைஞர்களின் கையில் என்று சொல்கிறோம்.உண்மைதான்.ஆனால் , இன்று நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை மாணவர்களும் , இளைஞர்களும் திரு.சகாயம் போன்றவர்களுக்கு கொடுக்கிறார்களா என்று பார்த்தால் சற்றே ஏமாற்றம்தான்.

கடந்த இரண்டு நாட்களாக முகநூலில் திரு.சகாயம் பற்றிய செய்திகள் நிறைய வந்தவண்ணம் இருக்கின்றன.அதைப் பதிவு செய்பவர்களும் , பகிர்வு செய்பவர்களும் பார்த்தால் முக்கால்வாசி முப்பது/நாற்பது வயதைத் தாண்டியவர்கள்தான்.ஒரு சில இளைஞர்களே ஆர்வம் காட்டினர் இந்த விசயத்தில்.”சரவணன் மீனாட்சி” தொடரில் நடித்த நடிகரும் நடிகையும் திருப்பதியில் ரகசியத் திருமணம் செய்து கொண்டார்கள் என்னும் செய்தி சில மாதங்களுக்கு முன் தீயாய்ப் பறந்தது முகநூலில்.அதை அதிக அளவில் பகிர்வு செய்தவர்கள் நம் இளைஞர்களும் , மாணவர்களும்தான். இன்னும் சிலர் அடுத்த கட்டத்துக்குச் சென்று “அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே , இப்பொழுது எப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டார்” என்றெல்லாம் விவாதித்துக்கொண்டிருந்தனர் முகநூலில்.அவ்வளவு முக்கியமான செய்தியா என்ன அது ? இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விஷயம் , நமக்குத் தேவையற்றதும் கூட.மாணவர்களும் , இளைஞர்களும் இன்றைக்கு தங்கள் எழுச்சியைக் காட்ட வேண்டிய இடங்கள் ஏராளம்.திரு.சகாயத்தைப் பற்றியும் கூட இவர்கள் பெரிதளவில் இதே முகநூலில் மக்களுக்கு எடுத்துரைத்திருக்கலாம்.மற்றவர்கள் ஒரு செயலைச் செய்வதற்கும் மாணவர்கள்/இளைஞர்கள் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன.ஆனால் , “ட்ராப்பிக் ராமசாமி” அய்யா போன்ற எழுபது வயதைத் தாண்டியவர்கள்தான் களத்தில் இறங்கி திரு.சகாயம் போன்றவர்களுக்காக போராடுகிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் சங்கடமாகத்தான் இருக்கிறது.நீங்கள் ரோட்டில் சென்று போராடுங்கள் என்று சொல்லவில்லை ,உங்கள் ஆதரவை இது போன்ற சமயங்களில் சமூக வலைத்தளங்களிலாவது பதிவு செய்யுங்கள். மற்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இது போன்ற பொதுப் பிரச்சனைகளுக்கும் கொடுத்தால் நாளைய இந்தியா நிச்சயம் பிரகாசிக்கும்.

———– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

4 Responses to இங்கே நேர்மையாளர்களுக்கு மதிப்பில்லை

 1. maragatham says:

  aatchiyalargalai vimasikamal adhe samayam avargal seiya vendiyadhai arivuruthi, indraiya soolaluku kamarajarin nilai kurithu aaindhu traffic ramasamy ayyavin muyarchiyaiyum thelivupaduthi, thiru sahayam ias avargalin nermai thondu kurithum adharku nam tharavendiya mukiyathuvathaiyum unarthiya kadhiruku ikkatturaiyin vasakar sarbil nandri kalandha valzhthukal…

  Liked by 1 person

  • நன்றிங்க அம்மா.குறைந்த பட்சம் இதையாவது செய்து அவர்களுக்கு மரியாதை கொடுப்போமே என்ற எண்ணம்தான்.

   Like

 2. D.Sankar says:

  Pray the God Almighty,to bless the Honest gentle man thiru U.Sagayam I.A.S with a Long Life.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s