என் திருமணம்

1234இரண்டாவது மனைவி இன்று குடி புகுந்துவிட்டாள்.இன்று நல்ல நாள் என்பதால் பெங்களூரிலேயே நண்பர்களுக்கு மத்தியில் திருமணம்.முதல் மனைவியை திருமணம் செய்யும்போது போட்ட கண்டிசன்கள் ஏராளம்.நிறைய முறை நேரில் சென்று பார்த்தும் பேசியும் எங்களுக்குள் அனைத்து விசயங்களும் ஒத்துப்போனதால் சுபயோக சுபதினம் ஒன்றில் திருமணம் நடந்தது.கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஓடிவிட்டது.இது வரை முதல் மனைவி என்னை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டாள்.அவளது கவனிப்பில் பெரிய குற்றம் ஏதும் இல்லை.இன்னும் தொடர்ந்து என்னை நன்றாகக் கவனித்துக் கொள்வதாக அவள் உறுதி அளித்தாலும் என்னால் அந்த பழைய நம்பிக்கையை அவள் மேல் வைக்க முடியவில்லை.ஒரே நாளில் எடுத்த முடிவல்ல இது.பல நாட்கள் யோசித்து , பல வாய்ப்புகளை அவளுக்குக் கொடுத்து , அனைத்திலும் அவள் தோற்றுப்போனதாலேயே இப்படி ஒரு திடீர் முடிவு.மனதிற்கு மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது.இருப்பினும் வேறு வழி இல்லை.என்னையே நான் சமாதானம் செய்து கொண்டு இப்படி ஒரு முடிவெடுத்தேன்.

நண்பர்களிடமும் , சில சொந்தங்களிடமும் என்னுடைய இந்த முடிவை கூறியவுடன் அவர்களுக்கும் ஷாக்குதான்.என்னப்பா, நீங்க ரெண்டு பேரும் தினமும் அவ்வளவு அழகாக ஒன்றாய் ஆப்பீஸ் செல்வீர்களே , கண்ணுபடும் அளவிற்கு இருக்குமே உங்கள் இருவரையும் பார்க்கும்பொழுது , உன்னையும் நல்ல முறையில்தானே பார்த்துக்கொண்டாள் அவள் , பிறகெதற்கு இப்படி ஒரு முடிவு என்றார்கள்.நான் என்னுடைய நிலைப்பாட்டை எடுத்துக் கூறினேன்.என்ன காரணத்திற்காக இன்னொரு மனைவியைத் தேடுகிறேன் என்று அவர்களிடம் கூறினேன்.அவர்கள் சமாதானம் அடையவில்லை , இருப்பினும் மறு கேள்வி எழுப்பவில்லை.நீங்களே பார்த்து ஒரு நல்ல பொண்ணாப் பாத்துச் சொல்லுங்கப்பா என்று அவர்களிடமே சொல்லிவிட்டேன்.அப்படி அவர்களிடத்தில் சொல்லிவிட்டாலும் முதல் மனைவியை என்னால் வெறுக்க முடியவில்லை.என்னருகிலேயே வைத்துக்கொள்ளாவிட்டாலும் ஊருக்கு அனுப்பி விடலாம் என்று திட்டம்.இருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் வருமல்லவா , அதுதான் முதல் இடத்தில் இருப்பவளை ஊருக்கு அனுப்பி விட திட்டம்.அவளும் உங்கள் விருப்பம் அதுவென்றால் அப்படியே செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாள்.ஏழு வருடமாக தினமும் கூடவே என்னுடன் இருந்தவளை பிரிவதென்பது சற்று கஷ்டமான விசயம்தான்.பட் , வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

அவளை நான் ஒரேயடியாக பிரியவில்லையே. ஊருக்குத்தானே போகிறாள் . இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஊருக்குச் சென்று பார்த்துவிட்டு வந்துவிட வேண்டியதுதான் என்று மனதை சமாதானம் செய்து கொண்டேன்.நண்பர்களும், சில சொந்தங்களும் நான் பார்க்கச் சொன்னதால் சீக்கிரம் பார்த்துவிட்டார்கள்.அன்றொரு நாள் போன் வந்தது நண்பர் ஒருவரிடம் இருந்து.அவர் எங்களுக்குச் சொந்தக்காரரும் கூட.குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு நல்ல பெண் இருப்பதாகக் கூறினார்.அழகான பெண் என்று கூறினார்.அட போப்பா , நமக்கு ஐஸ்வர்யா ராயெல்லாம் வேண்டாம்.சுமாரா இருந்தா போதும் , என்னை நல்ல முறையில் கவனித்துக் கொண்டால் போதும் என்றேன்.அதுபோக , அவளுடைய குணாதிசயங்களைப் பற்றிக் கேட்டுக்கொண்டேன்.அருமையான குணம் என்று அக்கம் பக்கத்தார் சொல்வாதாகக் கூறினார். நல்ல குணம்தான் முதல் அழகு என்று அவரிடமே ஒரு பிட்டைப் போட்டு விட்டேன்.ஏனென்றால் நமக்காக பெண் பார்ப்பவர் , நான் அந்தப் பெண்ணை எப்படி வைத்துக் காப்பாற்றுவேனோ என்று நினைக்கக்கூடதில்லையா , அதற்குத்தான் அப்படி ஒரு பில்ட் அப்பைக் கொடுத்து நான் ரொம்ப நல்லவன்தானப்பா என்பதை மறைமுகமாக அவருக்கு உணர்த்தினேன்.

நண்பர் கூறிய அனைத்தையும் நம்பி அப்பா அம்மாவைக் கூட என்னுடன் அழைத்துச் செல்லாமல் நான் மட்டும் அன்றொரு நாள் பெண் பார்க்கச் சென்றேன். எனக்கும் அவளைப் பிடித்துவிட்டது.நண்பர் சொன்னதைப் போல் அவள் அழகும் கூட.பிரகென்ன , வெத்தலை பாக்கு மாற்றிக்கொண்டோம்.மணமகன் வீட்டு சார்பாக நண்பரும் , மணமகள் வீட்டு சார்பாக அவளுடைய அப்பாவும் தட்டு மாற்றிக்கொண்டார்கள். இன்று நல்ல நாள் என்பதால் திருமணமும் பெங்களூரிலேயே ஆயிரக்கணக்கான நண்பர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.மாலை ரிசப்ஷன்.உங்களுக்கும் நேரமிருந்தால் வரலாம்.அப்பா அம்மா இல்லாமல் நடைபெறும் இந்தத் திருமணத்தில் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.இன்னொரு சிறப்பு என்னவென்றால் என் முதல் மனைவியும் இந்த இரண்டாவது மனைவியும் சில நாட்கள் இங்கே ஒன்றாகத்தான் குடித்தனம் செய்யப் போகிறார்கள் . சில நாட்களுக்குப் பிறகுதான் முதல் மனைவி ஊருக்குப் போகிறார். இரண்டாமவள் என்னை எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் பக்கத்துணை இருந்து பாதுகாக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொண்டு உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன் , நன்றி வணக்கம்.

பின் குறிப்பு :

முதல் மனைவி                 -> ஸ்ப்லெண்டர் பிளஸ்(Splendor Plus)
இரண்டாவது மனைவி  -> ஹோண்டா ஆக்டிவா(Honda Activa)

அருவா கத்தியோட நீங்க அங்கிருந்து புறப்படும் சத்தம் பெங்களூரில் இருக்கும் எனக்கு நல்லாவே கேக்குதுங்க சாமியோவ் , நா எஸ்கேப்.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.31234

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s