மரம் வளர்ப்போம் , வெறும் பேச்சளவில் மட்டுமல்ல

1234அப்பா, விநாயகருக்கு அடுத்த “ஹேப்பி பர்த் டே” எப்பொழுதும் வரும் என்ற கேள்வியை என்னிடம் சென்ற வாரம் கேட்டான் மூத்த மகன்.அன்று அக்கா ஊரில் விநாயகருக்கு கும்பாபிசேகம்.சுவாமி தரிசனம் செய்துவிட்டு , அன்னதான சாப்பாட்டையும் முடித்துவிட்டு கோவிலில் இருந்து திரும்பும் பொழுதுதான் இந்தக் கேள்வியைக் கேட்டான் மகன்.”இன்னும் பன்னிரெண்டு வருடம் கழித்துத்தான் இந்த “பர்த் டே” விநாயகருக்கு வரும்டா தங்கம்” என்று பதில் சொல்லிவிட்டு நகர்ந்தேன் ஒரு புன்னகையுடன்.ஒரு கும்பாபிசேகத்தைப் பார்ப்பது பன்னிரெண்டு வருடம் தினம் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு சமம் என்று ஓமத்தின் போது குருக்கள் மக்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்.ஓமத்தின் போது வெளிப்படும் புகை நம்மில் பட்டால் நமக்கு பகைவர்களால் எந்த தீங்கும் வராது என்றும் குருக்கள் கூறினார்.இந்தக் கருத்துக்கள் எல்லாம் நாத்திகம் , ஆத்திகம் ஆகிய இரு பிரிவினருக்கு வேறுபட்டிருக்கும்.சிலர் கேலியும் கிண்டலும் கூட செய்வர்.அது அவர்கள் மனநிலை , அவ்வளவுதான். தெய்வ வழிபாடு செய்பவர்கள் அவர்களையும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புகின்றனர்.அவரவர் நம்பிக்கையை கிண்டல் செய்யத் தேவை இல்லை.மாற்றுக் கருத்துச் சொல்பவர்களையும் எதிர்க்கத் தேவை இல்லை.இங்கே அனைவரும் ஒரே மாதிரியான குணத்துடனோ , மன நிலையுடனோ இருப்பதில்லையே.’கோவில் இல்லாக் குடி பாழ்’, ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’என்று நம் முன்னோர்கள் சொன்னது இப்பொழுது ஞாபகம் வருகிறது.காரணத்தை ஆராய வேண்டும்.

சரி , நான் சொல்ல வந்த விஷயம் நாத்திகத்தைப் பற்றியோ , ஆத்திகத்தைப் பற்றியோ அல்ல.தேவை இல்லாமல் உங்களை உசுப்பேற்றி விட்டு அடி வாங்க நான் தயாராக இல்லை .மேலே குறிப்பிட்ட கும்பாபிசேகத்தில் ஒரு சிறப்பான அம்சம் உள்ளது.பெரும்பாலும் கோவில் விழாக்களில் பிரசாதம், அன்னதானம் என்பது இருக்கும்.அதிலும் கும்பாபிசேகம் என்றால் அன்னதானம் நிச்சயம் இருக்கும்.இந்தக் கும்பாபிசேகத்திலும் இருந்தது.ஆனால் , சற்று வித்யாசமாக மக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தனர் ஊர்க்காரர்கள்.சுவாமி தரிசனம் செய்து விட்டு , உணவருந்திவிட்டு வந்தவர்கள் ஆளுக்கொரு மரக்கன்றை வாங்கிக்கொண்டு சென்றனர்.என் கண்ணிலும் பட்டதால் எனக்கும் ஒன்று கிடைத்தது.வாங்கி வந்து அப்பாவிடம் கொடுத்து நிச்சயம் நட்டு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன் .எவ்வளவு பெரிய நல்ல விஷயம் பாருங்கள். இயற்கை அழிந்து வருவதைத் தடுக்க இந்த ஊர் மக்களால் எடுக்கப்பட்ட ஒரு சிறிய முயற்சி.பாராட்டப்பட வேண்டியதாகும்.நிச்சயம் மரக்கன்று வாங்கிச் சென்றவர்களில் ஐம்பது சதவீகிதமாவது அதை நட்டு வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

அந்த மரம் என்னவென்று அண்ணனிடம் கேட்டபொழுது அது “சொர்க்க மரம்” என்றார்.அன்றுதான் அந்த மரம் எனக்கு அறிமுகமாகியது.சரி , அந்த மரத்தைப் பற்றி கூகிள் மாப்பிள்ளையிடம் கேட்டுப்பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்தேன்.அங்கே கிடைத்த தகவலின் படி , இந்த மரத்தால் நிறைய நன்மைகள் இருப்பதாகத் தெரிந்தது.மருந்து தயாரிக்க , உரமாகப் பயன்படுத்த என்று நிறைய நன்மைகள்.பராமரிப்பும் அவ்வளவு கஷ்டம் இல்லை.[கீழே பின்னூட்டத்தில் இது சம்பந்தமான லிங்க் கொடுத்துள்ளேன் , நேரமிருந்தால் படியுங்கள்].எந்த மரமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.நன்மை தரக்கூடிய மரமாக இருந்தால் எதுவும் சிறந்ததே. இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்திய அந்த ஊர் நல்லுள்ளங்களுக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். ஆடம்பரமாக நடத்தப்படும் திருமண விழாக்களிலும் கூட இதே போல் மரக்கன்றுகள் உறவினர்களுக்கு வழங்கினால் அது நாட்டிற்குச் செய்யும் மகத்தான நல்ல காரியமே.

கல்லூரி செல்லும் ஒரு மாணவனிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது அடுத்த நாள் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த பெங்களூர் அருகில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலைக்கு ஒரு பெரிய குழுவுடன் செல்வதாகத் தெரிவித்தான்.கல்லூரி செல்லும் நாட்களில் இதற்கெல்லாம் உனக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்டால் , கல்லூரி எனக்கு அறிவைக் கொடுக்கிறது, அந்த அறிவை விடுமுறை நாட்களில் என்னால் முடிந்த ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறேன்.நான் பெற்ற கல்விக்கு ஒரு சிறு கைமாறாக என் கல்வியை இது போன்ற நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதால் நாட்டிற்கு ஏதோ சிறு நல்லதைச் செய்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது என்றான்.அவன் சொல்வதைக் கேட்ட பொழுது எனக்குள் ஏற்பட்ட உறுத்தலைத் தவிர்க்க முடியவில்லை.நாம் வசிக்கும் இதே நாட்டில் நிறைய சமூக அக்கறை கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் நண்பர்களே.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s