குழந்தைச் செல்வம்

123எண்பதுகளில் வந்த திரைப்படங்களில் இதை நீங்கள் அதிகமாகப் பார்த்திருக்கலாம்.மனைவி பேசிக்கொண்டிருக்கும்போதே வேகமாகப் போய் கை கழுவும் தொட்டியில் வாந்தி எடுப்பார்.இல்லையேல் மயக்கம் போட்டு விழுவார்.டாக்டரிடம் கணவன் மனைவியை சோதனைக்கு அழைத்துச் செல்வார் , இல்லையேல் டாக்டரே வீட்டிற்கு வந்து நாடியைப் பிடித்து சோதனை செய்து விட்டு அவருடைய கதாப்பாத்திரம் கிளைமாக்ஸை நெருங்கும் போது “கங்குரா ஜூலேசன்ஸ், நீங்க அப்பாவாகப் போறீங்க” என்ற அதே மந்திரத்தை ஓதிவிட்டுப் போவார்.அன்றைய காலகட்டத்தில் இருந்து சினிமாவில் டாக்டர் கேரக்டர் என்றால் இந்த வசனம் பிரபலம்.இன்றும் கூட.சரி , இன்றும் கூட அதே டயலாக்கைத்தானே டாக்டர்கள் படத்தில் சொல்கிறார்கள் என்பீர்கள்.உண்மைதான்.ஆனால் , இன்றைக்கெல்லாம் டாக்டரிடம் சென்று கர்ப்பத்தை உறுதி செய்துகொள்வதெல்லாம் வெகு சிலரே.காரணம் , இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது.டாக்டரிடம் செல்வதற்கு முன்பே வீட்டிலேயே நாம் முதல் கட்ட பரிசோதனையை செய்துவிட்டுத்தான் செல்கிறோம்.ஆம் , ஒரு ஐம்பது ரூபாய் இருந்தால் போதும்.கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ளும் கருவி வந்துவிட்டது.மருந்துக் கடையில் ஐம்பது கொடுத்து வாங்கி வந்துவிட்டால் , நாம் அப்பாவாகப் போறோமா , அம்மாவாகப் போறோமா என்பதை உறுதிசெய்து கொள்கிறோம். பின்புதான் , மருத்துவரிடம் செல்கிறோம்.இதுதான் , இன்றைய கால கட்டத்தில் நடக்கிறது. அதனால்தான் என்னவோ , நான் மேலே குறிப்பிட்ட டாக்டரின் வசனம் இன்றைக்கு அவ்வளவாக திரையில் வருவதில்லை.விஞ்ஞானத்தின் பிரதிபலிப்பு எங்கெல்லாம் இருக்கிறது பாருங்கள்.

இந்த ஐம்பது ரூபாய் கருவியைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.பணம் வெறும் ஐம்பதுதான் , ஆனால் அது கொடுக்கும் மகிழ்ச்சி பல கோடிக்கு சமம்.இந்த கருவி மூலம் நீங்கள் சோதனை செய்து கர்ப்பம் உறுதியாகிவிடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியைச் சொல்கிறேன்.சோதனையின் போது அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிறம் அதில் தெரிந்தவுடன் அடையும் மகிழ்ச்சி அளப்பரியது.குழந்தையைச் சுமக்கும் தாய்மார்களுக்கு அந்த நிமிடங்களில் கிடைக்கும் சந்தோஷம் பத்து மாத சந்தோசத்திற்கு இணையானது.டெக்னாலஜியைப் பற்றிப் பேசும்பொழுது கர்ப்ப காலத்தில் இருக்கும் தாய்மார்களைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.கர்பத்தை உறுதி செய்த நாளில் இருந்து இவர்கள் கூகிளிடம் சரண்டர் ஆகிவிடுகிறார்கள்.என்னென்ன சாப்பிட வேண்டும் என்பதில் ஆரம்பித்து குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைக்க வேண்டும் என்பது வரைக்கும் தினம் இவர்களுக்கு கூகிள் மச்சான் உதவி செய்த வண்ணம் இருப்பான்.சரி , இது நல்ல விஷயம் தானே , இதில் தவறேதும் இல்லையே என்று கூட நீங்கள் கேட்கலாம்.என் பதிலும் , உங்கள் பதிலும் ஒன்றுதான்.

ஆனால் , ஒரு விசயத்தில் எனக்கு உடன்பாடில்லை.ஈரோட்டில் முப்பது வருடங்களுக்கு மேல் இயங்கிக்கொண்டிருக்கும் புகழ் பெற்ற மருத்துவமனை அது.அங்கேதான் , என் அக்கா மகளும் , எனது இரண்டு மகன்களும் பிறந்தார்கள்.நான் ஒரு சென்டிமென்டல் ராஸ்கல் என்பதால் எனக்கு அக்கா மகள் பிறந்தபொழுது எந்த ரூம் கொடுத்தார்களோ அதே ரூம்தான் வேண்டும் என்று கேட்டேன் முதல் மகன் பிரசவத்தின் பொது.சக்சஸ் , கிடைத்தது.பிறகு , சென்ற வருடம் இரண்டாவது மகன் பிறந்த பொழுதும் அதே கண்டிசன்.அப்பவும் சக்சஸ் , அதே ரூம் கிடைத்தது.ஒரு வகையில் கைராசியான டாக்டர்/மருத்துவமனை என்பதால் எங்களின் மூன்று குழந்தைகளும் இங்கேயே பிறந்தார்கள்.சென்ற வருடம் மனைவியின் எட்டாவது மாதத்தில் பரிசோதனைக்காக டாக்டரிடம் சென்ற பொழுது டாக்டரிடம் சில விளக்கங்களைக் கேட்டோம்.அவரும் பொறுமையாகப் பதில் கொடுத்தார்.எங்களுடைய கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்துவிட்டார்.பிறகு , இவ்வாறு சொல்கிறார் எங்களிடம்.”இது போன்ற கேள்விகளுக்கு இன்றைக்கெல்லாம் எங்களிடம் நீங்கள் வருவதற்கு முன்பே இன்டர்நெட்டில் அலசி விட்டுத்தான் வருகிறீர்கள் , அதில் தவறேதும் இல்லை. ஆனால், இங்கே வரும் படித்த பலரும் அவர்களின் சந்தேகங்களுக்கு இன்டர்நெட்டில் முதலில் விடையைத் தேடிவிட்டு , எங்களிடம் வந்து அது சரிதானா என்று அதே கேள்வியைக் கேட்டு எங்கள் பதிலும் இன்டர்நெட்டில் கிடைத்த பதிலும் ஒன்றுதானா என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.அதிலும் , சிலர் எங்களிடமே சொல்லிவிடுகிறார்கள் , இன்டர்நெட்டில் அப்படிக் கொடுத்திருந்தது இப்படிக் கொடுத்திருந்தது என்று , இது எங்களை சோதனை செய்வதைப் போல் இருக்கிறது ,அந்த விசயத்தில் நீங்கள் பரவாய் இல்லை” என்றார்.

நீங்கள் கர்ப்பகால தகவல்களைப் பற்றி கூகிளில் நிறையத் தேடலாம் , அந்த சந்தேகங்களை டாக்டரிடமும் கேட்கலாம்.தவறில்லை.ஆனால் , அங்கே வேறு மாதிரி இருந்தது நீங்கள் வேறு மாதிரி சொல்கிறீர்கள் என்று டாக்டரிடம் கேட்பது அபத்தம்.நாம் வேண்டுமானால் நம்மை ஜீனியஸ் என்று நினைத்துக்கொள்ளலாம்.ஆனால் , டாக்டரிடம் செல்லும்பொழுது அவர்மீது நம்பிக்கை அவசியம்.டாக்டர் தொழிலில் இருப்பவர்கள் சிலர் செய்யும் தவறுகளை அவ்வப்பொழுது பார்க்கிறோம் . வருத்தத்தைத் தருகிறது.அவர்களுக்குக் கண்டனங்கள் நிச்சயம் உண்டு.ஆனால், மருத்துவத் துறையில் நல்லுள்ளத்துடன் சேவை செய்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது உண்மை.நீங்கள் அப்படிப்பட்டவர்களைத் தேடிப்போக வேண்டும்.சென்ற பிறகு , அவர்கள் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.அது முதல் நாளிலிருந்து குழந்தை பிறந்து வீட்டிற்கு வரும் வரை இருக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு நமது அறிவுத்திறனை பயன்படுத்தியும் கூகிளின் துணையுடனும் டாக்டர்களை சோதனை செய்வது என் பார்வையில் தவறாகவே படுகிறது.நம்பிக்கை , அதானே எல்லாம்.

———- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s