நானும் என் சினிமாவும்

1235சினிமாத் துறையில் எப்படியாவது நாம் நுழைந்துவிட வேண்டும் என்ற வெறி [ ஹலோ , ஹலோ இங்கே ஒருத்தன் கதை சொல்லிட்டிருக்கும் போது அது என்ன அந்தப் பக்கமா முகத்த திருப்பிக்கிட்டு “கெக்க புக்க , கெக்க புக்க” ன்னு உங்களுக்கு சிரிப்பு ,இவனெல்லாம் ஹீரோ ஆனா திரைத்துறை உருப்படுமா அப்படின்னுதானே சிரிக்கிறீங்க , ம்ம்ம்…வச்சுக்குறேன் ].1996-ஆம் வருடம் , பத்தாவது முடித்தாகிவிட்டது.நண்பர்கள் வேறு பள்ளிக்குச் செல்லாததால் அவர்களுடன் சேர்ந்து அதே பள்ளியில் அடுத்த இரண்டு வருடம்.பத்தாவது முடித்தவுடனே யோசித்த விஷயம் அது.சினிமாவில் அவ்வளவு வெறி.சென்னை செல்ல வேண்டும் , நிறைய நடிகர்களைப் பார்க்க வேண்டும் , அவர்களிடத்தில் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் , அதை ஊரிலும் பள்ளியிலும் காட்டி நண்பர்களிடத்தில் சீனைப் போட வேண்டும் என்றெல்லாம் ஆசையோ ஆசை அப்படி ஒரு ஆசை.அதே வருடம் சென்னை சென்ற பொழுது நடிகர்களை பார்க்க முகவரிப் புத்தகத்தை வாங்கி அலைந்ததுண்டு.சத்யராஜ் சார் , மணிவண்ணன் சார் வீட்டிற்கெல்லாம் சென்று திரும்பிய நாட்கள் அவை.அவர்கள் சூட்டிங் சென்றுவிட்டதால் அவர்களைச் சந்திக்க முடியவில்லை(இல்லீன்னா , இந்நேரம் டாப் ஸ்டார் நம்மதான் போங்க).அப்படி கொஞ்சம் கொஞ்சம் சினிமாவின் மேல் காதல் ஏற்பட பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுது என்னைப்போல் ஒத்த கருத்துடைய நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது , பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் சென்னை சென்று D.F.Tech படிக்க விண்ணப்பம் வாங்கி வரலாம் என்று முடிவெடுத்தோம்.வீட்டில் யாருக்கும் இந்த விஷயம் தெரியாது.முதலில் D.F.Tech சேர்வது , பின்பு ஒளிப்பதிவு , பின்பு காமெடி , பின்பு வில்லன் , பின்பு கதாநாயகன் , பின்பு ஒரு அரசியல் கட்சி , பின்பு MLA, பின்பு அமைச்சர் , பின்பு டேஷ் டேஷ் டேஷ்.இதுதான் அப்பொழுது என்னுடைய திட்டம்.எவ்வளவு குறைந்த பட்ச ஆசைகள் பாருங்கள் இந்தப் பயபுள்ளைக்கு.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டோம்.நண்பன் வேறு திசையில் பயணிப்பதாகக் கூறிவிட்டான்.இருந்தாலும் , சென்னை சட்டப்பேரவைக் கட்டிடம் என் மனதை விட்டுப் போகவில்லை(சினிமாத் துறைக்குப் போனா கடைசியில் அங்கேதானே போய்த்தீரவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த காலகட்டம் அது , டோன்ட் லாப் ப்ளீஸ்).சரி , நாம் மட்டும் தனியாகச் சென்று விண்ணப்பம் வாங்கி வருவோம் என்று தீர்மானித்து அம்மாவிடம் கூறினேன்.”ஏன்டா சாமி , நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னைய படிக்க வெச்சுட்டு இருக்கோம் , நீ என்னமோ சினிமாவுக்கு போய் ஆடப்போறேன் , பாடப்போறேன்னு சொல்லுறியே , உன்னைய யாருடா கண்ணு இப்படி எல்லாம் மந்திருச்சு விட்டது” என்றார்.அங்கே விழுந்தது நமக்கு முதல் அடி.பிறகு அப்பாவிடம் விஷயம் சென்று அங்கே இரண்டாவது அடி.அப்புறம் எங்கே நம்ம ஹீரோவாறது , முடிஞ்சது நம்ம சினிமா கனவு அன்றே.இருந்தாலும் விடவில்லை , அதே வருடம்(1998) சென்னை சென்று பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க நானும் , கிருஷ்ணமூர்த்தி என்ற மாமாவும் சென்றோம்.இவர் அப்பாவுக்கு சொந்த மாமா மகன்.எங்கள் இருவருக்கும் பத்து வருட வயது வித்தியாசம் என்றாலும் ஊர் சுத்துவதில் அப்படி ஒத்துப்போகும் பாருங்கள்.

1998-ல் இரண்டாவது முறையாக சென்னை செல்கிறேன் மாமாவுடன்.இந்த முறை சுத்திப் பார்ப்பதற்கோ , ஆட்டோகிராப் வாங்குவதற்கோ அல்ல, படிப்பிற்காக செல்கிறோமடா கதிர்வேலா என்று மண்டையில் நங்குன்னு ஒரு குத்து குத்தி புரிய வைத்துவிட்டு கிளம்பிவிட்டோம்.அண்ணா பல்கலைக் கழகம் எங்களை வரவேற்றது.அங்கே செல்லும் வழியில் , என் மனதில் இருந்த அதே சட்டசபை கட்டிடம் மீண்டும் என்னை உறுத்தியது.ஆனால் , வேறு வழி இல்லை.அப்பா பின்னிடுவார்னு தெரியும்.பொறியியல் கலந்தாய்விற்கு செல்வதற்குமுன் அங்கே திரையில் ஓடிக்கொண்டிருந்த எந்தெந்த கல்லூரியில் எத்துனை இடங்கள் காலியாக உள்ளது என்ற தகவலைப் பார்த்துவிட்டு ஒரே அதிர்ச்சி.உருப்படியான கல்லூரியில் உருப்படியான பிரிவு இல்லை.நம்ம வாங்கின மதிப்பெண்ணுக்கு அண்ணா யுனிவர்சிட்டியிலா சீட்டு கிடைக்கும் .ஸோ , கலந்தாய்விற்கு உள்ளே செல்லவில்லை.இன்னும் ஒரு வருடம் “இம்ப்ரூவ்மெண்ட் ” எழுதி பட்டையக்கிளப்பிவிடலாம் என்று எண்ணி வெளியில் வந்து விட்டோம்.அதோடு விட்டோமா , இல்லை.அப்பொழுது தரமணியில் “M.G.R பில்ம் சிட்டி” இருந்தது.அங்கே சென்று சூட்டிங் பார்க்கலாம் என்றெண்ணி சென்றாகிவிட்டது.அப்பொழுது பிரகாஷ் ராஜ் சார் “ஸ்மைல் ப்ளீஸ்” என்றொரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.ராதாமோகன் சார்தான் இயக்குனர்.ஆனால் , நான் பார்த்த சூட்டிங் ஆயிற்றே , இன்று வரை படம் பெட்டிக்குள்ளேயே இருக்கிறது.இன்னும் வெளிவரவில்லை .அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கிவிட்டேன்.அதன் பிறகு , சன் டி.வி – யின் “தில்லானா தில்லானா” நிகழ்ச்சி சூட்டிங் பார்க்கச் சென்றோம்.அங்கே தலைவாசல் விஜய் சாரிடமும் ஆட்டோகிராப் வாங்கிவிட்டு எங்கள் சென்னை பயணத்தை முடித்துவிட்டு அன்றிரவே ஊருக்கு கிளம்பிவிட்டோம்.

ஒரு வருடம் கழித்து பொறியியல் படிப்பிற்கு இடம் கிடைத்தாலும் , படிக்க திருவாரூர் செல்ல வேண்டும் என்பதால் அதையும் மறுத்தேன்.பெற்றோர்களும் , நண்பன் ஒருவனும் புத்திமதி சொல்லி அனுப்பிவைத்தார்கள்.சரி , நான்காண்டு காலம் படிப்பு முடிந்துவிட்டது.இனி வேலைக்குச் செல்ல வேண்டும்.பெங்களூர் போய் வேலை தேடிப்பாருப்பா என்றனர் பெற்றோர்கள்.வெளியில் செல்ல மனதில்லை.ஊரைச் சுற்றியே(கோயமுத்தூரில்) ஏதாவது வேலை பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணம்.ஒரு பயலும் நம்ம அறிவுக்குத் தகுந்த வேலை தரவில்லை ஊர்ப்பக்கத்தில்.திரும்பவும் பெற்றோர்களின் அறிவுரையை ஏற்க வேண்டிய கட்டாயம்.பெங்களூர் வந்து வேலை தேட ஆரம்பித்த பத்தாவது நாளில் இந்த ஊர் அப்பொழுது பிடிக்காததால் திரும்பவும் ஊருக்கே ஓடி விட்டேன்.பெற்றோர்களின் என்னைப் பற்றிய கனவுகளை நான் சுமக்க வேண்டியதாகிவிட்டது.மீண்டும் அவர்களின் அறிவுரையை மனதில்லாமல்தான் ஏற்கவேண்டி இருந்தது.மீண்டும் பெங்களூர்.வேண்டா வெறுப்பாக வேலை தேடினேன்.அவ்வப்பொழுது பெற்றோர்களிடம் இருந்து ஆறுதலான வார்த்தைகள் வரும். அதுதான் “இனி பெங்களூரிலேயே உருப்படியாக ஒரு வேலை தேடி வாழ்க்கையில் உருப்பட வேண்டும்” என்ற எண்ணத்தை எனக்குக் கொடுத்தது.வேலை கிடைத்தது.திருமணம் ஆனது.இன்று நான் இதை எழுதுகிறேன் என்றாலும் கூட அதற்கு பெற்றோர்களே காரணம்.சின்ன வயதில் சினிமா அது இதுன்னு நமக்கு ஒத்துவராத ஆசைகளை வளர்த்திருந்தாலும் , அப்பொழுது சரியான முடிவுகளை எடுக்கத்தெரியாத வயது(சினிமாத் துறையை நான் விமர்சிக்கவில்லை , அங்கே சென்று வென்றுவிடத் தேவையான தகுதிகள் என்னிடத்தில் இல்லை என்று மட்டும் எனக்குத் தெரியும்).ஒவ்வொரு விசயத்திலும் பெற்றோர்கள்தான் உந்துதலாக இருந்தனர். நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை எனக்கு வடிவமைத்துக் கொடுத்தவர்களும் அவர்களே , நானல்ல.மாணவப் பருவத்திலும் அதற்குப் பிந்தைய பருவத்திலும் நாம் பல சமயங்களில் சரியான முடிவெடுக்கத் தவறி விடுகின்றோம்.அந்தச் சமயங்களில் பெற்றோர் சொல் கேட்பதில் எந்தவித தவறும் இல்லை என்பதை நான் எங்கு வேண்டுமானாலும் வந்து சத்தியம் செய்து சொல்லத் தயார். எந்தச் சமையத்திலும் அவர்களே நமக்குத் தெய்வம்.மீண்டும் சந்திப்போம்.

——————— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to நானும் என் சினிமாவும்

  1. maragatha kandhasamy says:

    ezhuthu thuraiyil cinimavilum sadhikalaam. kalam varum kathirupom..

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s