பெண் குழந்தை கடவுளின் வரம்

2பெண் குழந்தை பிறந்தாலே கள்ளிப் பாலூற்றி கொன்ற கிராமங்கள் ஏராளம் அந்தக் காலத்தில்.காரணம் , பெண் என்றால் பெற்றோர்களுக்கு நிறையச் செலவு வைத்துவிடும் என்பதால்.இன்றைக்கெல்லாம் இப்படிப்பட்ட முட்டாள்கள் உலாவுகிறார்களா என்று தெரியவில்லை.என்னைப் பொருத்தவரை பெண் குழந்தை பெற்றவர்கள் கடவுளிடம் வரம் பெற்றவர்கள் என்றே கூறுவேன்.அந்த விசயத்தில் கடவுள் என்னை வஞ்சித்து விட்டார் என்றே எண்ணுகின்றேன்.முதல் குழந்தை பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டினேன் , நடக்கவில்லை.சரி , இரண்டாவது குழந்தையாவது பெண்ணாக இருக்க வேண்டும் என்று நான் வேண்டாத நாட்கள் இல்லை , இப்பொழுதும் அது நடக்கவில்லை.அதற்காக கடவுளை குறை சொல்லவில்லை.பகவத் கீதையின்படி “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது” என்று சமாதானம் அடைந்து கொண்டேன்.மற்றபடி எனது இரண்டு சிங்கக்குட்டிகள் எப்பொழுதும் எனக்கு ஆண்டவன் கொடுத்த பரிசுதான்.”உங்களுக்கு மகள் பிறக்கவில்லை என்றால் என்ன , வரப்போகும் மருமகளுக்கும் , பேத்திகளுக்கும் நீங்கள் மகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ அதைச் செய்யுங்களேன்” என்று முகநூலில் சொந்தமான மாமா ஒருவர் சில நாட்களுக்கு முன்பு கூறினார்.அதுவும் சரிதான்.மற்றபடி , என் அக்காவின் மகள்தான் இப்பொழுது என்னுடைய மகளும்.அந்த இடத்தை அவள் எடுத்துக்கொண்டாள்.என் நண்பர்கள் நிறையப் பேருக்கு பெண் குழந்தை உள்ளது.அவர்கள் அனைவரிடத்திலும் என் மகன்களுக்காக முன் பதிவு செய்து டோக்கன் வாங்கிவிட்டேன் இப்பொழுதே.

எந்தப் பெண் குழந்தையாக இருந்தாலும் சில நிமிடம் அந்தக் குழந்தை செய்யும் செயல்களை கவனிப்பதுண்டு.அப்படி நான் கவனித்த குட்டிப் பெண்தான் பெங்களூரில் எங்கள் எதிர் குடியிருப்பில் வசித்தவள். அந்தக் குட்டிப் பெண்ணிற்கு வயது சுமார் நான்கு இருக்கும்.பெயர் சாதனா.சாதனை செய்யப் பிரந்தவளைப் போல் எந்நேரமும் சுட்டித்தனமாகவே தெரிவாள்.பயங்கர சுறுசுறுப்பு.யாரிடமும் வெட்கப்படுவது கிடையாது.தைரியமாகப் பேசுபவள்.அவள் செய்யும் சுட்டித்தனங்களுக்கு அவ்வப்பொழுது அவள் அம்மாவிடம் அடி இடிபோல் விழும்.வாங்கிக் கொள்வாள்.அடுத்த நிமிடமே அதே உற்சாகத்துடன் வேலையைப் பார்ப்பாள்.என் மூத்த மகனுடனும் நிறைய நாட்கள் விளையாடி இருக்கிறாள்.அவள் அம்மாவிற்கு மிகவும் குறைந்த வயதே.அப்பொழுது இருந்தால் இருபது பிளஸ் இருக்கும்.அந்த வயதில் நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை , ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை.என் பார்வையில் அவ்வளவாக குழந்தை வளர்ப்பில் சிறந்தவளாக அவள் அம்மா தெரியவில்லை.

இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்துவிட்டு அதே பகுதியில் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்துவிட்டனர்.பிறகு அவர்களைப் பற்றிய செய்தி இல்லை.சில மாதங்களுக்குப் பிறகு அந்த வேதனையான செய்தி என் காதை எட்டியது.சாதனா இறந்துவிட்டாள் என்று .நம்பவே முடியவில்லை.அப்படிச் சுட்டித்தனம் செய்துகொண்டிருந்தவள் என்ன காரணத்தால் இறப்பைச் சந்தித்தாள் என்று யோசித்தவுடன் என்னிடம் தகவல் கூறியவரிடம் கேட்டேன்.அவரின் பதில் இன்னும் என் வேதனையை அதிகப் படுத்தியது.அவர்கள் வசித்த குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து ஒரு நாள் தவறி கீழே விழுந்துவிட்டாள் என்றும் , அவளை காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறினார்.இடிபோல் இறங்கியது அந்தச் செய்தி.யார் பெற்ற பிள்ளை என்றால் என்ன , குழந்தை தெய்வத்திற்கு சமமானது அல்லவா.யாராக இருந்தாலும் அதே வேதனைதான் இருக்கும்.சாதனா ஐந்து வயது கூட எட்டாத நிலையில் இறந்துவிட்டாள்.இப்பொழுதும் எனக்கு அவள் அம்மாவின் மேல் கோபம்தான்.பக்குவப்படாத வயதில் அவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

இது இப்படி இருக்க கடந்த வாரம் திங்கட்கிழமை இன்னுமொரு சம்பவம்.பக்கத்து குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று கீழே விழுந்து விட்டதாகவும் உடனே மருத்துவமனை கொண்டு சென்றுவிட்டனர் என்றும் அத்தை என்னிடம் கூறினார்.நான் அந்த நேரம் குளித்துக்கொண்டிருந்ததால் எனக்கு சத்தம் கேட்கவில்லை.இரவு வீடு செல்லும்வரை அந்தக் குழந்தைக்கு என்னவாயிற்றோ என்ற நினைப்பு.சென்றவுடன் அத்தையிடம் கேட்டேன்.அந்தக் குழந்தையின் பெற்றோர்களை ஆண்டவன் கைவிடவில்லை , குழந்தை பிழைத்துக்கொண்டது.ஆச்சரியம் , ஆனால் உண்மை.தெய்வச் செயல்.ஆனால் , குழந்தை ஆணா , பெண்ணா என்றெல்லாம் கேட்கத் தோணவில்லை , காரணம் தெரியவில்லை.இந்தச் சம்பவங்கள் எல்லாம் இங்கே நான் குறிப்பிடக் காரணம் குழந்தை பெற்றுக்கொண்டு அந்தக் குழந்தையை வளர்க்கும் அளவிற்கு உங்களுக்கு பக்குவம் இருந்தால் மட்டும் பெற்றுக்கொள்ளுங்கள்.குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான விசயமில்லை.இருப்பதிலேயே கடினமான விஷயம் அதுதான்.அந்தப் பக்குவம் இல்லையேல் குழந்தை பெற்றுக்கொண்டு இப்படிப்பட்ட இழப்புகளைச் சந்திக்காதீர்கள்.இன்றளவும் இந்த இரண்டு குழந்தைகளின் விபத்திற்கும் அவர்களின் பெற்றோர்கள்தான் காரணம் என்று என் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது.அதிலும் சாதனா சாதிக்கப் பிறந்தவள் , சாந்தி அடைந்துவிட்டாள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.பெற்றோர்களே , இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்களோ எடுத்துக்கொள்ளுங்கள் , ஆனால் குழந்தைகளை உங்கள் அஜாக்ரதை காரணமாக இழந்துவிடாதீர்கள் என்று மட்டும் நான் உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.

————– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s