உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ?

2342010-ல் ஒரு நாள் பைக்கில் சென்று கொண்டிருக்கின்றேன்.அப்பொழுது ஒரு கைப்பேசி அழைப்பு வருகிறது.நான் பேச முடியாது என்பதால் , மனைவியிடம் கைப்பேசியைக் கொடுத்து “இந்தாம்மா யார்னு பாரு” என்று பின்னால் கைப்பேசியை நீட்டுகின்றேன்.அதை மனைவி வாங்கவில்லை.மீண்டும் ஒரு முறை பின்னால் நீட்டிவிட்டு அழைப்பை எடுக்கச் சொல்கிறேன்.அப்பொழுதும் அவர் கைப்பேசியை வாங்க வில்லை.எனக்கு சற்று கோபம்தான்.பின்னால் திரும்பிப் பார்த்தால் மனைவி பின்சீட்டில் இல்லை.எனக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது.வரும் வழியில் எங்காவது விழுந்துவிட்டாரா என்று பைக்கை நிறுத்திவிட்டு பின்னால் திரும்பிப் பார்க்கிறேன்.அப்பொழுது , மீண்டுமொரு முறை கைப்பேசிக்கு அழைப்பு வருகிறது.பார்த்தால் , அழைப்பதே மனைவிதான்.பதட்டத்துடன் அழைப்பை எடுக்கின்றேன்.பயமும் கூட.என்னவாயிற்றோ என்ற பயம்.ஞாபக மறதி பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்த பொழுது இந்தச் சம்பவம்தான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

மனம் அமைதியில்லாமல் இருப்பது , சரியான நேரத்திட்டமிடல் இல்லாதது , தூக்கமின்மை என்று பல காரணங்களைச் சொல்லலாம் ஞாபகமறதிக்கு.அதிலும் பெரும்பாலான நேரங்களில் நம் ஞாபக மறதிக்குக் காரணம் இன்றைய காலகட்டத்தில் நேரத்தை சரியாக நாம் திட்டமிடாததுதான்.அதிகாலையில் எழுவதற்கும் எட்டு மணிக்கு எழுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.அதிகாலையில் எழுந்தால் உடலும் , மனமும் அவ்வளவு சுறுசுறுப்பாகவும் , அமைதியாகவும் இருப்பதை நாம் உணரலாம்.ஆனால் , இன்றைய இயந்திர வாழ்க்கை முறையில் இரவு தூங்கும் நேரமே பதினோரு மணிக்குமேல் ஆகிவிடுகிறது , ஆதலால் ஏழு, எட்டு மணிக்கு எழுந்து அரக்கப்பரக்க குளித்துக் கிளம்பும் மனிதர்களே இன்று அதிகம்.அப்படிச் செல்கையில்தான் மனம் அமைதியில்லாமல் சீக்கிரம் அலுவலகம் சென்றாக வேண்டுமே என்ற எண்ணத்துடனேயே பயணிக்கின்றோம்.இது போன்ற சமயங்களில்தான் பல விபத்துகளும் நடக்கின்றன.ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டு செல்லும்பொழுது கவனம் பைக்/கார் ஓட்டுவதில் இருப்பதில்லை.முடிவில் , விபத்து.இந்தவகையான விபத்துகளில் சிக்கியவர்கள் ஏராளம்.

அன்று நானும் அப்படித்தான்.அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால் , சீக்கிரம் சென்றாக வேண்டுமே என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.காரணம் , நானும் மனைவியும் வங்கி சென்றுவிட்டு அங்கு அரைமணி நேரம் செலவானதால் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது.வங்கி வேலையை முடித்துவிட்டு இருவரும் வெளியில் வந்து நான் பைக்கை எடுக்கின்றேன்.பின்னால் , மனைவியை உட்காருமாறு சொல்லிவிட்டு உடனே வண்டியை எடுத்துவிட்டேன் அவர் உட்காருவதற்கு முன்பே .ஒரு கிலோமீட்டருக்கு மேல் சென்றபிறகுதான் அந்த கைப்பேசி அழைப்பு வந்தது.அழைத்தவர் மனைவிதான்.அவர் அழைப்பது தெரியாமல் , அவர் பின்னால் இருக்கிறார் என்று நினைத்து அவரிடமே கைப்பேசியை கொடுத்தேன்.நல்ல வேலை , அவர் வங்கியிலேயே நின்றுகொண்டிருந்தார்.அவர்தான் பைக்கில் ஏறவே இல்லையே.பிறகு , மீண்டும் அதே வங்கிக்குச் சென்று மனைவியை அழைத்துக்கொண்டு இருவரும் அலுவலகம் சென்றோம்.சரியாக நேரத்தை அன்றைக்கு திட்டமிடவில்லை என்பது மட்டும் புரிந்தது.நல்ல வேலை எங்களுக்குள் பெரிய சண்டை வரவில்லை.நான் திரும்பி வங்கிக்குப் போகும் பொழுது சிரித்துக்கொண்டுதான் இருந்தார்.பிறகு ,”தர்மத்தின் தலைவன்” ரஜினியை நினைவு கூர்ந்து கொண்டேன் நான்.

இந்த ஞாபக மறதியை இருவகையாகப் பிரிக்கின்றனர்.அண்மைக் கால ஞாபக மறதி மற்றும் நீண்ட கால ஞாபக மறதி என்று.பொதுவாக இந்த ஞாபக மறதியை முற்றிய நிலையில் “அல்சைமர்” என்று அழைக்கின்றனர் மருத்துவத்துறையில்.”மூளைதேய்வு ” என்றும் கூறுகின்றனர்.மனதை சற்று அமைதியாக வைத்துக்கொள்வது மிக முக்கியம் என்றும் , சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுவதும் முக்கியம் என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.இன்றைக்கு குழந்தைகளுக்குக்கூட ஞாபக மறதி பிரச்சனை இருப்பதைப் பார்க்கலாம்.சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு நேரத்தை சரியாக எப்படி செலவிடுவது என்பதைச் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்றும் “பங்க்சுவாலிட்டி” எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஆய்வு கூறுகிறது.நினைவாற்றலை அதிகரிக்கக்கூடிய விளையாட்டுகள் , மனதை அமைதியாக வைத்திருக்க யோகாசனம் என்று சிறு வயதில் இருந்தே அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம்.அவர்கள் மட்டுமில்லை அவை அனைத்தையும் நாமும் பின்பற்றலாம் என்று நான் சொன்னாலும் அனைத்தும் நமக்கு சாத்தியமில்லை.முடிந்த வரை , ஒரு அரை மணி நேரம் நடைப்பயிற்சி/உடற்பயிற்சி செய்து மனதையும் , உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டாலே நேரத்தை திட்டமிடல் தானாக வந்துவிடும்.தேவையற்ற குழப்பங்களை மனதில் வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள்.அது ஆபத்தில் முடியும் வாய்ப்புகள் அதிகம்.

———- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s