கல்வித் தொழில்

123காமராஜர் அய்யா காலத்தில்தான் முன்னேற்றத்திட்டங்கள் அதிக அளவில் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டன.தொலைநோக்குப் பார்வையுடன் இருந்தன அவருடைய திட்டங்கள் அனைத்தும்.அதில் முக்கியமாக கல்வித் துறையைச் சொல்லியே ஆக வேண்டும்.அன்று அவர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை என்றால் இன்று நாமெல்லாம் எந்த நிலையில் இருப்போம் என்று தெரியவில்லை.”கல்வித் தந்தை” என்பது அவருக்கு சரியாகப் பொருந்தும்.இத்துனைக்கும் அவருக்கும் கல்விக்கும் சம்பந்தமே இல்லை.மக்கள் நலனை மற்றுமே கருத்தில் கொண்டு செயல் பட்டவர் கர்ம வீரர் அய்யா அவர்கள்.அன்று அவரால் பட்டி தொட்டிக்கெல்லாம் கொண்டு செல்லப்பட்ட கல்வி இன்று எப்படி இருக்கிறது என்று யோசித்தீர்கள் என்றால் நீங்கள் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும்.அன்றைய கல்வித் தந்தைகள் கல்வியை மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் செய்தனர்.ஆனால் , இன்றைய உண்மையான “கல்வித் தந்தைகள்” வெகு சிலரே.காரணம் இன்றைக்கு கல்வி சேவையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து “தொழில்” என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.

இன்றைக்கு கல்விக்கூடங்கள் ஆரம்பிக்க வேண்டுமானால் உங்களுக்கு பணம் மட்டும் இருந்தால் போதும் , வேறெதுவும் தேவை இல்லை , பிறகென்ன நீங்களும் “கல்வித் தந்தை” தான்.அதுதான் இன்றைய நிலை.அதையும் தாண்டி இன்றைக்கு கல்வி கார்பொரேட் நிலைக்கும் போய்க்கொண்டிருக்கிறது.ஹோட்டல் தொழில் செய்பவர் எப்படியோ பல வகைகளில் சம்பாதித்து மற்றொரு தொழிலாக பள்ளிக்கூடம் ஆரம்பித்தால் அவரால் எப்படி சேவை மனப்பான்மையுடன் கல்வியைக் கொடுக்க முடியும் , முடியாது.பள்ளிக்கூடமும் ஒரு தொழில் என்பதால் பணத்தை மட்டுமே குறிக்கோளாக நினைத்து நடத்த முடியும்.அப்படி நடத்தும் பள்ளிக்கூடங்களில் அவ்வப்பொழுது அசம்பாவிதங்கள் நடப்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.அதற்கு பெங்களூர் விப்ஜியார் பள்ளிக்கூடம் ஒரு உதாரணம்.எந்தக் காலத்திலும் வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராவெல்லாம் பொருத்தியதில்லை.இன்றைக்கு பல பள்ளிகளில் நீங்கள் அதைப் பார்க்கலாம்.குழந்தைகள் வகுப்பறைகளில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை பெற்றோர்களுக்கு காண்பிக்க பொருத்தி இருக்கிறார்கள் என்றாலும் , பெண் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் யாராவது தொந்தரவு கொடுக்கிறார்களா என்று கண்காணிக்கவும் இந்த கண்காணிப்பு கேமராவை பல பள்ளிக்கூடங்கள் தற்பொழுது பொருத்தி வருகிறார்கள்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல கல்வியை இந்தத் தொழிலதிபர்கள் எப்படி மாணவர்களுக்கு கொடுக்க முடியும் என்று தெரியவில்லை.

தொழிலதிபர்கள் கல்வி சேவை செய்ய வரலாம் , எதிர்க்கவில்லை. ஆனால் , கல்வியின் நோக்கம் , அதன் பின்னணி , அதைக் குழந்தைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய வழிமுறைகள் , கல்வியைப் பற்றிய புரிதல் இவை எல்லாம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கலாம்.ஆனால் , இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை.கள்ளச் சாராயம் விற்றவனும் , கட்டப்பஞ்சாயத்து செய்பவனும் மிக எளிதாக பள்ளிக்கூடமோ , கல்லூரியோ ஆரம்பித்து விட முடியும்.காரணம் ,இவர்களுக்கெல்லாம் அதிகார வர்க்கத்துடன் நிச்சயம் தொடர்பு இருக்கும்.பணம் பாதாளம் வரை பாய்ந்தால் அடுத்த நாளே இவர்களும் “கல்வித் தந்தைகள்” தான்.எப்படிப்பட்ட கேவலமான நிலைமைக்கு கல்விச் செல்வம் தள்ளப்பட்டிருக்கிறது பாருங்கள்.கல்லூரிப் பக்கம் சென்றால், ஒருகாலத்தில் பொறியியல் படிப்பு என்றால் அவ்வளவு மவுசு இருந்தது.ஆனால் இன்றைக்கு , நிறைய கல்லூரிகளில் நிறைய இடங்கள் நிரம்பாமல் இருக்கிறது.காரணம் , இன்றைக்கு அத்துனை பொறியியல் கல்லூரிகள் வந்துவிட்டன.தரம் மட்டும் இல்லை.வெறும் தொலைக்காட்சி விளம்பரம் மட்டுதான்.நேரில் சென்று பார்த்தால் அவர்கள் காட்டிய கல்லூரி இதுதானா என்ற கேள்வி நிச்சயம் எழும்.

தகவல் தொழில் நுட்பத்தில் பணி புரியும் நண்பர் ஒருவர் அதிலிருந்து “டீச்சிங்” துறைக்கு மாறலாம் என்று நினைத்து M.E படிக்கலாமா என்று ஊரில் விசாரித்திருக்கிறார் , அவருக்கு இப்படித் தகவல்கள் கிடைத்திருக்கிறது .M.E படித்து முடித்துவிட்டு கல்லூரி விரிவுரையாளராக போய்விடலாம் என்று நினைத்து அதைப் படித்துவிட்டு வேலை தேடுபவர்களும் இன்று அதிகமாகி விட்டனர்.அதிலும் இன்றைக்கெல்லாம் பல கல்லூரிகளில் சம்பளம் ஒன்றாம் தேதியானால் வந்துவிடும் என்ற உறுதியான நிலை இல்லை.வேண்டுமென்றால் இருங்கள் இல்லை என்றால் வேறு கல்லூரி செல்லுங்கள் என்ற நிலை இன்று.இதிலும் இன்னொரு கேவலமான விஷயம் என்னவென்றால் , இந்த கல்லூரி விரிவுரையாளர்கள் எல்லாம் கோடை விடுமுறை நாட்களில் அவர்கள் பகுதியில் வீடுவீடாகச் சென்று பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களைச் சந்தித்து தாங்கள் பணி புரியும் கல்லூரியில் சேர “கவுன்சிலிங்” செய்ய வேண்டுமாம்.அதுவும் அவர்கள் சொந்தச் செலவில் சென்று வர வேண்டும்.எப்படி ஆள் பிடிக்கிறார்கள் பாருங்கள்.இப்படி இருக்கும் இந்தக்கால கல்வியை தொழில் என்று சொல்லாமால் வேறு எப்படிச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை.ஒன்று மட்டும் நிச்சயம் , இதே நிலை தொடர்ந்தால் நாளைய இந்தியாவிற்கான தூண்களை சிறந்தவர்களாக இந்தக் “கல்வித் தந்தைகள்” கொண்டு வருவார்களா என்பது சந்தேகம்தான்.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s