இன்றைக்கு காதல் சர்வ சாதாரணம்

6இரண்டு வாரங்களுக்கு முன்பொரு சனிக்கிழமை மாலை நடைப்பயிற்சி செல்ல பூங்காவிற்குச் சென்றேன்.இரண்டாவது ரவுண்ட் ஆரம்பிக்கும் முன்பே இந்தப் பதிவிற்கான வஸ்து கிடைத்துவிட்டது.சுமார் பன்னிரெண்டு , பதிமூன்று வயது மதிக்கத்தக்க ஆறு பசங்களும் , அதே வயதுடைய ஒரு பெண்ணும் என் கண்ணில் பட்டார்கள்.இந்த பசங்களெல்லாம் நடைப்பயிற்சிக்கு வந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.அந்தப் பெண்ணுக்கும் இது பொருந்தும்.பசங்க ஆறு பேரும் பூங்காவில் இருந்த ஒரு நீண்ட இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர்.அந்தப் பெண் எதிர்திசையில் நடந்து வந்துகொண்டிருந்தார் இவர்களைப் பார்த்தவாறே.நான் அந்தப் பெண்ணின் எதிர்திசையில் நடந்து சென்றதால் கவனித்தேன்.ஒருவன் அந்தப் பெண்ணைப் பார்த்து – ” Where is your friend” என்று கேட்கிறான்.அதற்கு அந்தப் பெண் – ” From first onwards she was loving you only know , you should know” என்று பதில் தருகிறார்.இது மட்டும்தான் எனது காதில் விழுந்தது.அதற்குள் இரண்டாவது ரவுண்ட் ஆரம்பமாகிவிட்டதால் நான் அந்த இடத்தைக் கடந்துவிட்டேன்.எதற்காக அந்த வசனங்கள் என்று எனக்குத் தெரியாது என்றாலும் அவர்களெல்லாம் பிஞ்சுலேயே பழுத்துவிட்டார்கள் என்பது மட்டும் தெளிவானது.

என்ன வயது பாருங்கள் , அவர்களுக்குள் என்ன மாதிரியான உரையாடல் பாருங்கள் ? அந்தப் பசங்களுக்கு மேலே குறிப்பிட்ட பதிலைக் கொடுத்துவிட்டு வெளியில் சென்ற அந்தப் பெண் ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் பூங்காவினுள் நுழைகிறார்.இந்தப் பசங்களும் அந்தப் பெண்ணிடம் கேலி , கிண்டல் செய்கிறார்கள்.அந்தப் பெண்ணும் அதை ரசிக்கிறார்.இதற்கும் மேல் நான் என் கவனத்தை அவர்கள் மேல் செலுத்தி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று என் வேலையை தொடர்ந்தேன்.இப்படிச் சொல்வதால் நான் ஏதோ காதலை எதிர்க்கின்றேன் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம்.காதல் செய்யலாம் , செய்யக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு எனக்கு பக்குவம் இல்லை.நான் நாட்டாமையும் இல்லை.இதெல்லாம் அவரவர் விருப்பங்கள்.ஆனால் , காதல் செய்தாலும் அதற்கென்று வயது ஒன்று இருக்கிறதல்லவா ? காதலைப் பற்றிய புரிதல் என்று ஒன்று இருக்கிறதல்லவா ? அதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது.இவர்களுக்கெல்லாம் காதலென்றால் என்னவென்றும் , அதைப் புரிந்துகொள்ளும் வயதா என்ன ? பதிமூன்று வயதில் காதலைப் பற்றி சர்வ சாதாரணமாக பொது இடத்தில் அதுவும் நிறையப் பெரியவர்கள் வந்து போகும் இடத்தில் சிறிதளவு பயமேதும் இல்லாமல் இன்றைக்கு எந்த அளவிற்கு நடக்கிறது பாருங்கள்.என்னைக் கேட்டால் இதற்கு முக்கியக் காரணங்களில் ஊடகமும் ஒன்று என்றுதான் சொல்லத் தோனுகிறது.நல்ல நிகழ்ச்சிகளும் வருகிறது என்றாலும் , குழந்தைகளை சீரழிக்கக்கூடிய நிகழ்ச்சிகளும் வரத்தான் செய்கிறது.

இதுபோக , இன்றைக்கு “What’s App” துணையோடு பல கிளர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சர்வசாதாரணமாக உலாவருகின்றன.மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பசங்களிடமும் கையில் ஒரு மொபைல் போன் இருந்தது. இந்த அளவிற்கு பொது இடத்தில் பேசுபவர்கள் “What’s App” போன்றவற்றில் என்ன வேலை செய்து கொண்டிருப்பார்கள் என்று நீங்களே யூகித்துக்கொள்ளலாம்.அரும்பு மீசை கூட இன்னும் முளைக்காத வயது.இப்பொழுதே ஆரம்பித்துவிட்டார்கள்.அதற்கு அடுத்த நாளும் அதே பூங்காவில் அதே நேரத்தில் அவர்களைப் பார்த்தேன்.இதில் என்ன வருத்தம் என்றால் அவர்களைப் பெற்றவர்களை நினைத்துத்தான்.என்னென்ன கனவுடன் இருக்கிறார்களோ தெரியவில்லை.கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பு பெங்களூர் நாளிதழில் வெளிவந்திருந்த ஒரு கட்டுரையைப் படித்த எனக்கு அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது.காரணம் , பெங்களூரில் அபார்ஷன் செய்ய வரும் பெண்களில் முக்கால்வாசிப் பேர் பத்தாவது , பதினொன்றாவது படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல்.ஒன்பது வருடத்திற்கு முன்பே அப்படி.இந்த வயதில் வருவதற்குப் பெயரா காதல் ? என்னால் இதில் வெறும் காமத்தை மட்டுமே பார்க்க முடிகிறது.சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்ததைப் போல் , குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு இன்றைக்கெல்லாம் எந்தவொரு பூங்காவிற்கும் செல்லமுடிவதில்லை.ஆங்காங்கே அமர்ந்து கொண்டு காதல் என்ற பெயரில் இன்றைக்கு அரங்கேறும் அசிங்கங்கள் சகிக்க முடியவில்லை.

பல குழந்தைகள் கல்விச் செல்வத்தைப் பெற்றிருந்தும் தொடர்ந்து படிக்க முடியாமல் வசதியின்மையால் தவிக்கும் அதே சமூகத்தில்தான் மேலே குறிப்பிட்டுள்ளவர்களும் வசிக்கிறார்கள்.வசதி வாய்ப்பு இருந்தாலும் பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு செல் போன் எல்லாம் தேவையற்றது.அதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கே உள்ளது.பள்ளிக்கூடம் செல்லும் வயதில் செல் போன் எல்லாம் அவர்களுக்கு கிடைத்தால் வேறென்ன செய்வார்கள்.இப்படித்தான் சிறு வயதிலேயே சீரழிந்து போக வேண்டியதுதான்.இதில் பெற்றோர்களுக்கும் நிச்சயம் பங்கிருக்கிறது என்றுதான் சொல்லுவேன்.நாமெல்லாம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் “Love” என்ற வார்த்தையைச் சொல்வதற்கே அவ்வளவு பயமிருக்கும்.இன்றைக்கு நாகரீகமும் , தகவல் தொழில் நுட்பமும் வளர்ந்து விட்ட நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் வயதிலேயே “Love” , “காதல்” போன்ற வார்த்தைகள் சர்வசாதாரணமாக குழந்தைகள் வாயிலிருந்து வந்துவிடுகின்றது.இள வயது காதல் திருமணங்கள் நிறைய அரங்கேறிய கையோடு பிரிந்தும் விடுகின்றது.முக்கிய காரணம் , காதல் என்றால் வெறும் காமம் சார்ந்த விஷயம் மட்டுமில்லை என்ற புரிதல் இல்லாததுதான்.அதனாலேயே பல விவாகரத்துகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.காதல் செய்யுங்கள் , அது உங்கள் சொந்த விஷயம்.ஆனால் , அதற்கென்று பருவமும் , வயதும் , பக்குவமும் இருக்கிறது.அதை மட்டும் சற்று உணர்ந்து கொண்டு, வாழ்க்கையை வீணாக்கிக்கொள்ள வேண்டாம் என்பதுதான் எனது ஆதங்கம்.

————— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

6 Responses to இன்றைக்கு காதல் சர்வ சாதாரணம்

 1. இன்றைக்கு காதல் சர்வ சாதாரணம் = பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு செல் போன் எல்லாம் தேவையற்றது.அதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கே உள்ளது = Kathirvel Subramaniam = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

  Liked by 1 person

 2. Reblogged this on rathnavelnatarajan and commented:
  இன்றைக்கு காதல் சர்வ சாதாரணம் = பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு செல் போன் எல்லாம் தேவையற்றது.அதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கே உள்ளது = Kathirvel Subramaniam = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

  Like

 3. இன்றைக்கு காதல் சர்வ சாதாரணம் = பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு செல்
  போன் எல்லாம் தேவையற்றது.அதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டிய பொறுப்பு
  பெற்றோர்களுக்கே உள்ளது = Kathirvel Subramaniam = எனது பக்கத்தில்
  பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

  2014-11-15 15:03 GMT+05:30 ” நிதர்சனம்” :

  > Kathirvel Subramaniam posted: “இரண்டு வாரங்களுக்கு முன்பொரு சனிக்கிழமை
  > மாலை நடைப்பயிற்சி செல்ல பூங்காவிற்குச் சென்றேன்.இரண்டாவது ரவுண்ட்
  > ஆரம்பிக்கும் முன்பே இந்தப் பதிவிற்கான வஸ்து கிடைத்துவிட்டது.சுமார்
  > பன்னிரெண்டு , பதிமூன்று வயது மதிக்கத்தக்க ஆறு பசங்களும் , அதே வயதுடைய ஒரு
  > பெண்ணும்”

  Liked by 1 person

 4. உண்மைதான். இன்றைக்கு பத்திரிகைகள் சினிமா சீரியல்கள் குடும்பங்களைப் பெரிதும் பாதிக்கின்றன. சினிமாவில் பள்ளி சீருடையோடு காமுற்றுக் காதலிக்கும் காட்சிகளை எடுக்கிறார்கள். மொபைல் மூலம் ஆபாசப்படங்கள் அனுபவத்திற்கு வித்திடுகின்றன. குறிப்பாக இன்டர்நெட்டில் கணக்கு வழக்கில்லாத நிர்வாணக் காட்சிகள் கண்களுக்குள் பயணித்துவிடுகின்றன. அவை மிதமிஞ்சி நிலையில் சலிப்பையும் ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் எதிர்காலத்தில் மணவாழ்க்கையில் காலடி பதிக்கும்போது சுவாரஸ்யமற்ற உறவு உப்புச் சப்பில்லாத வாழ்வியலுக்குக் காரணமாகிறது. வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிட்டால் அணை போட முடியாதபோது அவரவர் நீந்திக்கரை சேர்ந்தால் உண்டு என்ற நிலையில் ஊடகங்களுக்கு அணை போட முடியாது என்றநிலையில் அவரவர் அவரவர் பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது கடமை. ஆனால் பிள்ளைகள் கேட்டுக்கொள்ளவே மாட்டார்கள். காரணம் பருவமத்தின் ஆசைகள்.

  இளம் வயதில் செக்ஸ் என்றால் என்ன எப்படி என்றே தெரியாமல் இருந்ததால் வாழ்க்கையில் எதிர்பார்ப்பும் திரில்லும் இருந்தது. இன்றுள்ள பிள்ளைகள் செக்ஸ் என்பது அத்துபடி என்பது போன்ற மன நிலையில்தான் சேர்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை இனிமையில்லாமல் போகப்போகிறது என்பதை எண்ணி கவலையாக உள்ளது.

  எப்படியாவது இளம் தலைமுறையினருக்கு யோகப்பயிற்சிகள் அளித்து அவர்களை நன்னெறி வழித்திருப்புவதற்கு அரசுதான் பெற்றோர்கள் மற்றும் பொறுப்புள்ள ஆன்மீகப் பெரியவர்களோடு கலந்து பேசி நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

  Liked by 1 person

  • உண்மைங்க.இன்றைக்கு “லவ்” என்ற வார்த்தை சர்வ சாதாரணமாக குழந்தைகள் வாயில் வருகிறது.காரணம் ஊடகங்கள்.அவர்களை நன்னெறிப்படுத்தி வளர்க்கவேண்டிய கடமை பெற்றோர்களையே சேரும்.ஆசிரியர்கள் உதவுவார்கள்.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s