என்னை மன்னித்து விடுங்கள் மாப்பிள்ளை

5அந்த நண்பர் எனக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் முகநூலில் நண்பரானார்.மிகவும் எதார்த்தமான மனிதர்.உள்ளொன்று வைத்துக்கொண்டு புறமொன்று பேசாதவர்.அவருக்கு எது சரி என்று படுகிறதோ அதை வெளிப்படையாகக் கூறிவிடுவார்.எந்த ஒரு விசயத்திலும் தன்னிலை விளக்கத்தை தைரியமாகக் கொடுப்பவர்.எனக்கு அவரை எப்படித் தெரியும் என்றால் இந்த முகநூல்தான் எனக்கு அவரை அறிமுகப்படுத்தியது என்று சொல்லியாகவேண்டும்.நாங்கள் இருவரும் முகநூலில் நண்பர்களான பிறகு இருவரைப் பற்றியும் சேட்டிங்கில் தெரிந்து கொண்டோம்.அவரும் எங்கள் கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவர் என்பதால் உறவு முறைப்படி என்னை “மாப்பிள்ளை ” என்று அழைப்பது வழக்கம்.நானும் அப்படியே அவரை அழைப்பேன். முகநூலில் அவர் எனக்கு எப்படி அறிமுகமானார் என்று சொல்லவேண்டுமானால் அவரைப் பற்றிய “பிளாஷ் பேக்” – ஐ இங்கே ஓட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.நண்பரின் குடும்பம் சாதாரண நடுத்தர விவசாயக் குடும்பம்.ஒரு ஏக்கர் நிலம் உள்ளது அவர்களுக்கு ஊரில்.அதில் வரும் வருமானத்தை வைத்துத்தான் குடும்பம் ஓடியது.தங்கள் வயலில் வேலை இல்லை என்றால் நண்பரின் அப்பா கூலி வேலைக்குச் செல்வதும் உண்டு.அதில் கிடைக்கும் வருமானமும் குடும்பத்துக்கு உதவியது.அம்மா வீட்டு வேலையைப் பார்த்துக்கொள்வதோடு ஆடு மாடுகளை கவனித்துக்கொள்கிறார்.பாவம் அவருக்கு தீராத மூட்டு வலி.நண்பருக்கு ஒரு தங்கை.அவரை விட மூன்று வயது குறைவு.அந்தக் குடும்பமே நண்பரின் அப்பாவை நம்பித்தான் இருந்திருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் நண்பர் படிப்பில் கெட்டிக்காரராகத் திகழ்ந்திருக்கிறார்.மகனை எப்படியாவது படிக்க வைத்து விடவேண்டும் , அவனுக்கு நல்ல வேலை கிடைக்க முடிந்த வரை வியர்வை சிந்துவோம் என்பது பெற்றோர்களின் எண்ணம்.அதற்கு ஏற்றாற்போல் நண்பரும் படிப்பில் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்.பன்னிரெண்டாவது முடித்துவிட்டார்.தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்கள் 1138.கோயமுத்தூரில் தலைசிறந்த கல்லூரி ஒன்றில் பொறியியல் இடம் கிடைக்கிறது. இதற்கிடையில் தன் அப்பா ஒரு விபத்தில் சிக்கி விடுகிறார்.விபத்தால் வலது கால் செயலிழந்து விடுகிறது.அவரால் எந்தவொரு வேலையும் செய்வதற்கில்லை.இப்பொழுது நண்பர் கல்லூரியில் காலெடுத்து வைக்க வேண்டும்.கல்லூரிக்குக் கட்ட பணம் இல்லை.அங்குமிங்கும் அலைந்து நண்பர்கள் சிலர் தயவாலும் , சொந்த பந்தங்களின் உதவியாலும் நான்கு ஆண்டு கல்லூரிப் படிப்பை முடிக்கிறார்.பிறகு , “கேம்பஸ் இண்டர்வ்யூ” வில் பெங்களூரில் ஒரு பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது.அவரை மட்டுமே நம்பி இருந்த அந்தக் குடும்பம் இப்பொழுது கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.நண்பர் வேலையில் சேர்கிறார் , தன் தங்கையை நல்ல கல்லூரியில் படிக்க வைக்கிறார் , தங்கைக்கும் வேலை கிடைக்கிறது , பிறகு ஓரிரு வருடத்தில் தங்கைக்குத் திருமணமும் கோலாகலமாக நடக்கிறது.அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து நண்பருக்கும் திருமணம் ஆகிறது.இவ்வளவு சவால்களைச் சந்தித்து வந்த நண்பர் அனைத்தையும் தன் பதிவில் போட்டிருந்தார்.எப்படியோ என் கண்ணிலும் பட்டது.அந்தப் பதிவை படித்தவுடனேயே எனக்கு அவரைப் பிடித்துவிட்டது.நட்பு விண்ணப்பம் கொடுத்து எனது நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொண்டேன்.பெங்களூரில்தான் நாங்கள் இருவரும் இருக்கின்றோம் என்றாலும் இதுவரை நாங்கள் சந்தித்துக்கொண்டதில்லை.போனிலும் பேசியதில்லை.

அன்று அலுவலகத்தில் இருந்து கிளம்பும் பொழுது மணி மாலை ஆறு.புறப்பட்டு ஐந்து நிமிடத்தில் மழை வந்துவிட்டது.மழை இல்லை என்றால் பைக்கில் நான் செல்வதை ‘மாதவன்’ கண்டால்கூட பொறாமைப்படுவார்(கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ப்ளீஸ்).மழை வந்துவிட்டால் “அலைபாயுதே” மாதவன் ஸ்டைலில் பைக் ஓட்ட வாய்ப்பில்லை.ட்ராப்பிக் அதிகமாகிவிடும் பெங்களூரில்.பைக்கை மெதுவாக ஓட்டிச் செல்கின்றேன்.எட்டு மணிக்கு தன்வந்த் – ஐ டாக்டரிடம் தடுப்பூசி போட அழைத்துச் செல்லவேண்டும்.காலையிலேயே மனைவி கண்டிசனாகச் சொல்லி அனுப்பி இருந்தார்.ஆதலால் , மழை பெய்து கொண்டிருக்கிறதே எப்படி சீக்கிரம் வீட்டிற்குச் சென்று பையனை டாக்டரிடம் அழைத்துச் செல்வேனோ என்ற நினைப்பிலேயே வருத்தத்துடன் பைக்கில் செல்கிறேன்.ஈஜிபுரா சிக்னலில் இருந்து ஒரு “ஷார்ட் கட்” பாதையில் செல்கின்றேன்.அதில் சென்றால் சீக்கிரம் சென்றுவிடலாம் என்று.அப்பொழுது மழை சற்று ஓய்ந்திருந்தது.நானும் வேகத்தை அதிகப்படுத்தினேன்.நான் வேகமாகச் சென்று கொண்டிருக்கையில் நான் சென்றுகொண்டிருந்த ரோட்டின் இடது புறம் இருந்த ஒரு சிறிய ரோட்டில் இருந்து பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் நின்று நிதானமாக வராமல் நான் சென்றுகொண்டிருந்த ரோட்டில் இடதுபுறம் இருந்து வேகமாக வந்து எனது வாகனத்தில் மோதிவிடுகிறார்.தவறு அவருடையது.இருவரும் ஹெல்மெட் மாட்டிக்கொண்டே பைக்கில் இருந்தவாறே சிறு சண்டையில் இறங்கிவிட்டோம்.நான் அவர் மீது தவறு என்கின்றேன் , அவர் என் மேல் தவறு என்கிறார்.எனக்கு மகனை டாக்டரிடம் அழைத்துச் செல்ல நேரமாகிவிட்டதால் எனக்குத் தெரிந்த அரைகுறை கன்னடத்தில் அவரைத் திட்டிவிட்டு பைக்கை மீண்டும் ஓட்டிச் சென்றுவிட்டேன்.

அடுத்த நாள் காலையில் முகநூல் நுழைகின்றேன்.முந்தைய நாள் நடந்த இந்தச் சண்டையை என் பதிவில் போட்டுவிடுகின்றேன்.” இன்று எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது , காரணம் நான் சண்டையிட்ட அந்த நபர் ஒரு தமிழராக இருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன் , சண்டை முடிந்து நான் எனது பைக்கை எடுக்கும்போது அவருடைய வண்டியின் நம்பர் பிளேட் என் கண்ணில் பட்டது , அதில் “TN 43 AJ 4691” என்று இருந்தது.தவறு அவருடையதாக இருந்தாலும் நம்ம ஊர்க்காரர் ஒருவரை திட்டிவிட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது” என்று கண்ணீரும் கம்பலையுமாக ஒரு பதிவைப் போட்டுவிட்டு அலுவலகம் கிளம்பிவிடுகின்றேன்.அலுவலகம் சென்று முகநூல் நுழைந்து பார்த்தால் இப்படி ஒரு பின்னூட்டம்(Comment) வந்திருந்தது — “ஐயோ மாப்பிள்ளை உங்களிடமா நான் நேற்று சண்டை போட்டேன் , என்னை மன்னித்து விடுங்கள் , என்னை மன்னித்து விடுங்கள் , நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த இளைஞன் நானே தான் , உங்கள் அலைபேசி எண் கொடுங்கள் இப்பொழுதே உங்களைக் கூப்பிடுகின்றேன்” என்று இருந்தது அந்தப் பின்னூட்டம்.அந்தப் பின்னூட்டத்தைப் போட்டவர் வேறு யாருமில்லை மேலே முதல் இரண்டு பாராக்ராப்பை ஆக்கிரமித்துக்கொண்ட அதே நண்பர்தான்.அவருடைய உள்பெட்டிக்குச் சென்று என்னுடைய அலைபேசி எண்ணைக் கொடுத்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவரிடம் இருந்து போன் வருகிறது.”மாப்பிள்ளை , நான்தான் அசோக் பேசுகின்றேன்” என்று அவர் சொன்னவுடன் “ஐயோ மாப்பிள்ளை , நீங்கள் மன்னிப்பு கேட்கும் முன் நான் முதலில் கேட்டுவிடுகின்றேன் , என்னை மன்னித்து விடுங்கள் என்னை மன்னித்து விடுங்கள் நான் உங்களை அப்படித் திட்டி இருக்கக்கூடாது” என்று ஒரே சத்தம்.இந்த சத்தத்தை தாங்க முடியாமல் பக்கத்தில் படுத்திருந்த மனைவி என்னைத் தட்டி எழுப்பி விடுகிறார்.”எப்பப் பாத்தாலும் எதாவது கெனா கண்டு இப்படியே உளறிக்கொண்டே என்னையும் குழந்தையையும் தூங்க விடுவதில்லை , கம்முனு தூங்குங்க” என்கிறார்.

நான் அப்பொழுது என்னுடைய அலைபேசியை எடுத்து நேரம் என்னவாகிறது என்று பார்க்கிறேன்.அது , ‘இரண்டு’ என்ற எண்ணைக் காட்டியது.

—————— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to என்னை மன்னித்து விடுங்கள் மாப்பிள்ளை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s