சிங்கம்னா இவர்தான் சிங்கம்

1‘சிங்கம்’ பாஸ்கர் என்றொருவர் இங்கே பெங்களூரில் இருக்கிறார்.’சிங்கம்’ என்றால் போலீஸாகத்தானே இருக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது சரிதான்.ஆனால் இந்த ‘சிங்கம்’ வில்லன்களை அடித்து துவம்சம் செய்பவரல்ல.தினமும் போக்குவரத்து நெரிசலை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் , பெங்களூர் போக்குவரத்துக் காவல் துறையில் பணி புரியும் திறமை மிக்க ட்ராப்பிக் போலீஸ்தான் இவர்.சிங்கம் என்று சொன்னால் மட்டும் போதுமா , சிங்கமாகவே தோற்றம் இருக்க வேண்டுமல்லவா.அவருடைய மீசையும் அதே ‘சிங்கம்’ சூர்யா ஸ்டைலில்தான் இருக்கிறது.விசாரித்ததில் அவர் சூர்யாவின் விசிறி என்றும் தெரிந்தது.அட போப்பா போலீஸ்தானே , அதற்கு எதற்கு இப்படி ஒரு புகழாரம் என்று நீங்கள் கேட்டால் இனி நான் தரப்போகும் தகவல்களைப் படித்தால் நீங்கள் பொறாமைப் படவும் , ஆச்சரியப் படவும் நிச்சயம் வாய்ப்பிருக்கிறது.இந்தச் சிங்கத்திற்கு சுமார் முப்பது அல்லது முப்பதுக்கும் குறைவான வயதுதான் இருக்கும்.சிறு வயதில் இருந்தே காவல் துறையில் சேர வேண்டும் என்று ஆசை.அது நிறைவேறியும் விட்டது.

எங்கள் அலுவலகம் இருக்கும் C.V.ராமன் நகர் அருகில் இருக்கும் BEML ரோடுதான் நமது சிங்கம் தினமும் தனது வேலையை தொடங்கி முடிக்கும் இடம்.மனிதர் காலையில் எட்டு மணிக்கு டான் என்று வந்துவிடுகிறார்.அப்பொழுது இருந்து மனிதர் சுறுசுறுப்பாகி விடுவார்.அவர் நிற்கும் சிக்னலில் அவர் கை காட்டினாலே போதும் வாகனங்கள் நின்றுவிடும்.அது அவர் மேல் இருக்கும் பயம் காரணமாக அல்ல. அந்த வழியாக தினந்தோறும் செல்லும் வாகன ஓட்டிகள் அவர் மேல் வைத்திருக்கும் அன்பும் , மதிப்புமே காரணம்.அந்த சிக்னல் அருகில்தான் நான் வேலை செய்யும் ஐ.டி.பார்க் இருப்பதால் காலை எட்டரை மணிக்கு மேல் போக்குவரத்து நெரிசலுக்குப் பஞ்சமிருக்காது.இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் , அந்த சிக்னலில் விளக்குகள் கிடையாது.விளக்குகள் செய்யும் வேலையையும் சிங்கமே செய்வார்.அனைத்து வாகனமும் அவரின் கை அசைவிற்கு கட்டுப்பட்டு விடும்.முகமும் சாந்தமான முகம்.போக்குவரத்து நெரிசலை சரிசெய்து கொண்டே யாருக்காவது வழியும் சொல்லிக்கொண்டிருப்பார்.அதோடு , வயதானவர்கள் யாராவது ரோட்டைக் கடக்க வேண்டும் என்றால் பல சமயங்களில் அவரே கை தாங்களாக அழைத்துக் கொண்டு போய் விட்டுவிட்டு வருவார்.”காவல் துறை உங்கள் நண்பன்” என்று கேள்விப்பட்டு இருப்பீர்களே , அது கன கச்சிதமாக இவருக்குப் பொருந்தும்.

பெங்களூரில் மழை பெரும்பாலும் அலுவலகம் முடிந்து வீடு செல்லும் நேரத்தில்தான் வரும்.அதே நேரம் ஐ.டி.பார்க்கிலிருந்து பேருந்துகளும் , இரண்டு/நான்கு சக்கர வாகனங்களும் கிளம்பும்.நமக்கெல்லாம் மழையை சமாளிப்பதா , போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதா என்ற பிரச்சனை இருக்கும். இந்த ‘சிங்கம்’ பாஸ்கருக்கு அதெல்லாம் ஒரு நாளும் இடையூறாக இருந்ததில்லை.’மழைக் கோட்’ ஒன்றை அணிந்து கொண்டு சாதாரணமாக தன் வேலையை தொடர்வார் . எப்படிப்பட்ட மழையாக இருந்தாலும் சரி.அந்த நேரத்திலும் இவர் நிற்கும் சிக்னலில் மட்டும் என்றும் நெரிசல் ஏற்பட்டதில்லை.ஒரே ஆளாக சமாளிப்பார். வெய்யில் காலமாக இருந்தாலும் அதே அர்ப்பணிப்போடு தனது பணியில் பிஸியாகவே இருப்பார்.அந்த வழியில் செல்லும் பலரும் பாஸ்கருக்கு வணக்கம் சொல்லிவிட்டே செல்கிறார்கள்.அதில் நானும் ஒருவன்.நாம் வணக்கம் சொன்னால் அவரிடத்தில் இருந்து வெறும் வணக்கம் மட்டும் வராது பெரும்பாலான நேரத்தில் “எப்படி இருக்கிறீர்கள்” என்று கன்னடத்தில் நலம் விசாரிப்பார்.எனக்கெல்லாம் முதல் முறை தூக்கி வாரிப் போட்டது.காவல் துறையில் இப்படியும் ஒருவரா என்று அசந்தேன்.தினமும் ஜிம்முக்குச் சென்று உடம்பையும் அவ்வளவு பிட்டாக வைத்திருக்கிறார் சிங்கம்.

அவ்வழியாக நடந்து செல்லும் பலரும் இவருக்கு கை கொடுத்துவிட்டுத்தான் செல்கிறார்கள்.அவருடன் ஒரு நிமிடம் நின்று பேசுவதே பெருமை என்று நினைப்பவர்கள் நிறையப் பேர்.இதை எல்லாவற்றையும் தாண்டி மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் அந்த ஏரியாவில் வசிப்பவர்கள் இவரை தங்கள் வீட்டில் ஒரு உறுப்பினராகவே நடத்துவதுதான்.அவர்கள் வீட்டில் விசேஷம் என்றால் சிங்கத்திற்கு அழைப்பில்லாமல் இருக்காது.அப்படி ஒரு அன்பை அந்தப் பகுதி மக்கள் இவர் மேல் செலுத்துகிறார்கள்.பெங்களூர் போக்குவரத்துக் காவல் துறையில் இவருக்கென்று தனி முத்திரை இருக்கிறது.முகநூலிலும் இவரைப் பற்றிய செய்திகள் நிறைய வந்துவிட்டன.இவருக்கு பல ரசிகர்கள் சேரும் அளவிற்கு காரணம் இவருடைய கடமை உணர்ச்சி , கனிவு , பண்பு , பொறுமை , நேர்மை என்று பல நற்குணங்களைக் கூறலாம்.ஹெல்மெட் போடாமல் ஒருவர் வந்தால்கூட அவரை நிறுத்தி அபராதம் விதித்ததில்லை.வண்டியை நிறுத்தி ஹெல்மெட் போடாமல் வந்தவரின் தோல் மீது கை போட்டு பக்குவமாக எடுத்துச் சொல்வார். அந்த நபர் வேறு வழியில்லாமல் அன்பில் மயங்கி அடுத்த நாள் ஹெல்மெட்டுடன் வந்துவிடுவார்.இவருடைய ரசிகர்கள் இவருக்கு I.P.L கிரிக்கெட் பார்க்க டிக்கெட் எடுத்து அழைத்துச் சென்றதெல்லாம் உண்டு.அவை அனைத்தும் இவர் மேல் வைத்திருக்கும் அன்பின் காரணமாகவே.
பொதுவாகவே காவல் துறை என்றால் நம்மில் பலருக்கும் சரியான எண்ணம் இருப்பதில்லை என்பது உண்மைதான்.ஆனால் , இங்கே குறிப்பிட்ட ‘சிங்கம்’ பாஸ்கரைப் போன்றவர்கள் இன்னும் காவல்துறையை மக்களின் நண்பனாகவே நிலைநிறுத்தி வருகிறார்கள்.அரசுத் துறையில் வேலை பார்ப்பவர்கள் , அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி ,இந்த நாயகனைப் போல் நாமும் இருக்க வேண்டும் என்று நினைத்து வேலை செய்தால் இந்தியா எங்கேயோ சென்றுவிடும்.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

4 Responses to சிங்கம்னா இவர்தான் சிங்கம்

 1. சிங்கம்னா இவர்தான் சிங்கம் =சிங்கம்’ பாஸ்கர் என்றொருவர் இங்கே பெங்களூரில் இருக்கிறார்.’சிங்கம்’ என்றால் போலீஸாகத்தானே இருக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது சரிதான் = ”காவல் துறை உங்கள் நண்பன்” = .அரசுத் துறையில் வேலை பார்ப்பவர்கள் , அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி ,இந்த நாயகனைப் போல் நாமும் இருக்க வேண்டும் என்று நினைத்து வேலை செய்தால் இந்தியா எங்கேயோ சென்றுவிடும்.= Kathirvel Subramaniam = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

  Liked by 1 person

 2. சிங்கம்னா இவர்தான் சிங்கம் =சிங்கம்’ பாஸ்கர் என்றொருவர் இங்கே பெங்களூரில்
  இருக்கிறார்.’சிங்கம்’ என்றால் போலீஸாகத்தானே இருக்க முடியும் என்று நீங்கள்
  நினைத்தால் அது சரிதான் = ”காவல் துறை உங்கள் நண்பன்” = .அரசுத் துறையில் வேலை
  பார்ப்பவர்கள் , அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி ,இந்த நாயகனைப் போல்
  நாமும் இருக்க வேண்டும் என்று நினைத்து வேலை செய்தால் இந்தியா எங்கேயோ
  சென்றுவிடும்.= Kathirvel Subramaniam = அருமையான பதிவு. எனது பக்கத்தில்
  பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

  2014-11-21 14:39 GMT+05:30 ” நிதர்சனம்” :

  > Kathirvel Subramaniam posted: “‘சிங்கம்’ பாஸ்கர் என்றொருவர் இங்கே
  > பெங்களூரில் இருக்கிறார்.’சிங்கம்’ என்றால் போலீஸாகத்தானே இருக்க முடியும்
  > என்று நீங்கள் நினைத்தால் அது சரிதான்.ஆனால் இந்த ‘சிங்கம்’ வில்லன்களை
  > அடித்து துவம்சம் செய்பவரல்ல.தினமும் போக்குவரத்து நெரிசலை தனது கட்டுக்குள்
  > வைத்த”

  Liked by 1 person

 3. post this matter to read all TN police.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s