நாகரீகக் கோமாளிகள்

1லண்டனில் சில காலம் பணி புரிய வாய்ப்புக் கிடைத்தது.ஆங்கிலேயர்கள் காலையில் ஷார்ப்பாக எட்டு மணிக்கு அலுவலகம் வந்தால் மாலை ஐந்து மணிக்கு எப்படிப்பட்ட அப்பாடக்கர் வேலையாக இருந்தாலும் அலுவலகத்தில் இருந்ததில்லை.ஐந்து மணி என்றால் கிட்டத்தட்ட அனைவரும் கிளம்பி விடுவார்கள்.அதன் பிறகு அங்கிருக்கும் தலைகளை கணக்கெடுத்தால் எத்துனை இந்தியர்கள் அங்கே வேலை செய்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.நான் குறிப்பிடுவது இங்கிருந்து I.T கம்பெனிகளால் அங்கே அனுப்பப்பட்டவர்களை.சரி , அதை விடுங்கள்.நான் சொல்ல வந்த விஷயம் வேறு.பல நேரங்களில் ஆங்கிலேயர்களிடம் இருந்து பல நல்ல டிசிப்ளின்-களை நாம் கற்றுக்கொள்ளலாம்.அவர்கள் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் நாம் அவர்களிடத்தில் இருந்து நல்ல விசயங்களைக் கற்றுக்கொள்ளவில்லையோ என்றும் கூட சில நேரங்களில் யோசிப்பதுண்டு.ஒரு முறை நான் காலையில் அலுவலகத்தின் கீழ் தளத்தில் இருந்து நான்காவது தளத்திற்குச் செல்ல லிப்டில் சென்று கொண்டிருந்தேன்.நான் இறங்க வேண்டிய நான்காவது தளம் வந்தது.லிப்ட்டில் இருந்து நான் வெளியில் செல்ல கால் எடுத்து வைத்தவுடன் அதே தளத்தில் லிப்டினுள் வருவதற்கு காத்திருந்த ஒரு ஆங்கிலேயரும் உள்ளே நுழைய காலெடுத்து வைத்தார்.அவர் உள்ளே நுழையும் முன் நான் வெளியில் வர தயாராகிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை.அவர் காலெடுத்து வைத்தவுடன் நான் வெளியல் வரவிருப்பதை அவர் உணர்ந்து கொண்டார்.உடனே , உள்ளே நுழைய இருந்தவர் பின்னால் சென்றார்.பின்னால் சென்றது மட்டுமில்லாமல் என்னைப் பார்த்து – “I am extremely sorry , I didn’t notice that you are coming out” என்று மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.நான் லிப்டில் இருந்து வெளியில் வந்தவுடன் “Thanks a lot” என்று கூறிவிட்டு புன்னகையுடன் லிப்டினுள் நுழைந்தார்.இது வெறும் சாதாரண நிகழ்வுதான்.அதற்கும் கூட மன்னிப்பும் , நன்றியும் தெரிவிப்பது ஆங்கிலேயர்களின் ‘டிசிப்ளின்’ களில் ஒன்றுதான்.

சரி , இந்தப் புராணத்தை இங்கே நான் சொல்லக் காரணம் என்னவென்று நீங்கள் வினவக்கூடும்.காரணம் இருக்கிறது.மேலே குறிப்பிட்ட இதே சம்பவம் இங்கே நமது நாட்டில் நடந்திருந்தால் எனக்கு என்ன மரியாதை கிடைத்திருக்கும் என்று நான் சொல்லத் தேவையில்லை.நாம் இதே போன்ற சம்பவங்களை நாள்தோறும் அலுவலகங்களிலும் , மால்களிலும் சந்திக்கின்றோம்தானே.”Sorry , Thank You” எல்லாம் இங்கே இதே விசயத்தில் பலரிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் குறைந்த பட்ச நாகரீகம் , மனிதத்தன்மை இவையாவது நம் மக்களிடமும் இருக்கலாமே என்பதுதான் என் வேதனை.குறைந்த பட்ச நாகரீகம் என்பது லிப்டினுள் இருப்பவர் வெளியில் வரும் வரை காத்திருந்து பிறகு வெளியில் இருப்பவர் உள்ளே நுழைவது.அதுதான்.உள்ளே இருப்பவர் வெளியில் வரும் முன்பே அவரைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய முற்படும் பல மேதாவிகள் தினந்தோறும் என் கண்ணில் படத் தவறுவதில்லை.சரி , இதற்கெல்லாம் கூட நான் கோபப்படவில்லை.சில வாரங்களுக்கு முன்பு இங்கே இருக்கும் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.நான் லிப்டினுள்.என்னுடன் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் இருந்தார்.மற்றும் சிலர் இருந்தனர். அந்தக் கர்ப்பிணிப் பெண் மூன்றாவது தளத்திற்குச் செல்ல வேண்டும் .மூன்றாவது தளமும் வந்தது.அந்தப் பெண் வெளியில் செல்லத் தயாரானார்.கர்ப்பிணி என்பதால் சற்று மெதுவாகவே நடந்து வெளியில் செல்லத் தயாரான பொழுது அதே தளத்தில் வெளியில் நின்றுகொண்டிருந்த சுமார் முப்பது , முப்பத்தியைந்து வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் லிப்டிற்கு உள்ளே வர முயற்சித்தார்.பார்க்க நன்கு படித்தவரைப் போலவே இருந்தார் அவர்.

நான் குறிப்பிட்ட அந்தக் கர்ப்பிணிப் பெண் வெளியில் செல்ல நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில் இவரும் உள்ளே நுழைகிறார்.அந்தப் பெண் வெளியில் வருவதைப் பார்த்த பிறகாவது நின்றிருக்கலாம்.அதைக்கூடச் செய்யவில்லை அந்த மாமேதை.உள்ளே நுழைந்தவர் அந்தப் பெண் வெளியில் வருவதற்கு போதுமான இடத்தைக் கொடுக்கவில்லை.அதுபோக , அந்தப் பெண் அந்த நபரின் மேல் மோதி கிட்டத்தட்ட கீழே விழும் நிலைக்கே சென்றுவிட்டார்.உள்ளே இருந்தவர்கள் அந்த நபரை சத்தம் போட்டு வெளியில் செல்லச் சொன்னோம்.முறைத்துக்கொண்டே சென்றவர் அந்தப் பெண் வெளியில் சென்றவுடன் மீண்டும் உள்ளே வந்தார்.எனக்கு எரிச்சல் எல்லையத் தாண்டி இருந்தது.கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணிற்குக் கூடவா வழி விட முடியாத அளவிற்கு அந்த நபருக்கு அவ்வளவு அவசரம் என்று.இதில் இன்னும் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் , அந்த நபர் நன்கு உடை உடுத்தி , நன்கு படித்தவர் போல் தெரிந்ததுதான்.அவர் பெற்ற கல்வி இது போன்ற காட்டு மிராண்டித் தனத்தை எல்லாமா கற்றுக்கொடுத்தது என்று யோசிக்கத் தோணியது.படிக்காத மேதை , படித்த முட்டாள் என்பார்களே அது இது போன்ற ஆசாமிகளுக்கு அருமையாகப் பொருந்தும்.இந்த குறைந்த பட்ச மனிதம் கூட இல்லாத ஒருவன் தான் பெற்ற கல்வியால் ஒரு பைசா பிரயோஜனமும் இல்லை என்பதே என் வாதம்.

இவர்களைப் போன்றவர்களுக்காகவே “எலிவேட்டர் எதிக்ஸ்” என்றால் என்ன என்று லிப்டிற்குள்ளேயே எழுதி வைத்திருக்கிறார்கள். நான் ஏதோ இந்த ஆண் செய்த தவறை மட்டும் சுட்டிக்காட்டி பெண்ணியம் பேசுவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.இந்தச் சம்பவத்தில் இந்த ஆண் தவறு செய்திருக்கிறார்.அவ்வளவுதான்.அதற்காக பெண்கள் இந்த விசயத்தில் தவறே செய்வதில்லை என்று சொல்லவில்லை.அப்படிப்பட்டவர்களையும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை நான் நிறையவே பெற்றிருக்கின்றேன்.ஆக , இது ஒரு பொதுவான பதிவே. யார் செய்தாலும் தவறு தவறுதானே.நல்ல ஒழுக்கமும் , பண்பும்தான் நாம் பெரும் கல்வியின் முக்கியமான அங்கமாகும்.இவை இரண்டையும் தவிர்த்து வெறும் மதிப்பெண்களோடு பெறப்படும் கல்வி ஒரு நாளும் உயர்வைத் தராது.

———– கதிர்  @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

4 Responses to நாகரீகக் கோமாளிகள்

 1. நாகரீகக் கோமாளிகள் = Kathirvel Subramaniam = நல்ல ஒழுக்கமும் , பண்பும்தான் நாம் பெரும் கல்வியின் முக்கியமான அங்கமாகும்.இவை இரண்டையும் தவிர்த்து வெறும் மதிப்பெண்களோடு பெறப்படும் கல்வி ஒரு நாளும் உயர்வைத் தராது.= எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

  Liked by 1 person

 2. Reblogged this on rathnavelnatarajan and commented:
  நாகரீகக் கோமாளிகள் = Kathirvel Subramaniam = நல்ல ஒழுக்கமும் , பண்பும்தான் நாம் பெரும் கல்வியின் முக்கியமான அங்கமாகும்.இவை இரண்டையும் தவிர்த்து வெறும் மதிப்பெண்களோடு பெறப்படும் கல்வி ஒரு நாளும் உயர்வைத் தராது.= எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

  Like

 3. நாகரீகக் கோமாளிகள் = Kathirvel Subramaniam = நல்ல ஒழுக்கமும் , பண்பும்தான்
  நாம் பெரும் கல்வியின் முக்கியமான அங்கமாகும்.இவை இரண்டையும் தவிர்த்து வெறும்
  மதிப்பெண்களோடு பெறப்படும் கல்வி ஒரு நாளும் உயர்வைத் தராது.= எனது பக்கத்தில்
  பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

  2014-11-28 18:24 GMT+05:30 ” நிதர்சனம்” :

  > Kathirvel Subramaniam posted: “லண்டனில் சில காலம் பணி புரிய வாய்ப்புக்
  > கிடைத்தது.ஆங்கிலேயர்கள் காலையில் ஷார்ப்பாக எட்டு மணிக்கு அலுவலகம் வந்தால்
  > மாலை ஐந்து மணிக்கு எப்படிப்பட்ட அப்பாடக்கர் வேலையாக இருந்தாலும்
  > அலுவலகத்தில் இருந்ததில்லை.ஐந்து மணி என்றால் கிட்டத்தட்ட அனைவரும் கிளம்பி
  > விடு”

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s