இவர்களும் அம்பானிகள்தான்

1நாம் பல சமயங்களில் சிலரை குறைத்து மதிப்பிட்டு விடுகின்றோமோ என்ற எண்ணம் அவ்வப்பொழுது வருகின்றது.அதற்கு அவர்களுடைய தோற்றமும் , அவர்கள் செய்யும் வேலையுமே காரணங்களாக அமைந்து விடுகின்றன.அவர்களுடைய வெளித் தோற்றத்தை வைத்து நாம் அப்படி அவர்களை சித்தரித்து விடுகின்றோம்.அவர்களைப் பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தெரியும் நாமும் , நமது எண்ணமும் எத்தகையது என்று.தள்ளு வண்டியில் ஆப்பிள் ஏவாரம் செய்து வருகிறார் எங்கள் வீட்டினருகில் ஒருவர்.சாதாரண லுங்கியும் , கசங்கிய சட்டையும்தான் அவர் அன்றாடம் உடுத்தும் உடை.நம் மக்கள்தான் கார்ப்பரேட் காரனுக்கு சல்யூட் அடிக்கவும் இப்படிப் பட்டவர்களை இளக்காரமாகப் பார்ப்பவர்கள் ஆயிற்றே.இங்கே , நம் மக்கள் என்பதில் நானும் அடங்குவேன் என்று அர்த்தம்.நான் மட்டும் என்ன போதி தர்மரா அல்ல விவேகானந்தரா.இங்கே நாம் அனைவரும் ஒரே மாதிரிதான் இது போன்ற விசயத்தில்.சரி , இந்த ஆப்பிள் ஏவாரம் செய்பவரைப் பற்றி கொஞ்சம் விசாரித்துப் பார்க்கலாம் என்று ஒரு நாள் அவரிடமே விசாரித்தேன்.சொந்த ஊர் கிருஷ்ணகிரி என்றார்.பெங்களூர் வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது என்றும் தனக்கு சொந்தமாக பன்னேருகட்டா ரோட்டில் மூன்றடுக்கு கொண்ட வீடு ஒன்று இருப்பதாகவும் கூறினார்.நம் புத்திக்குத்தான் எதையும் நம்பும் எதார்த்தம் கிடையாதே.சரி இவர் சொல்வது உண்மைதானா என்று எனக்குத் தெரிந்த மற்றொருவரிடம் கேட்டேன் சில நாட்கள் கழித்து.காரணம் , தள்ளு வண்டியில் ஆப்பிள் விற்பவரால் எப்படி சொந்தமாக வீடு வாங்க முடிந்தது என்ற சந்தேகம்.ஆமாம் ஸார் , அவருக்கு சொந்தமாக வீடு இருக்கிறது.கீழ் தளத்தில் இவர் குடியிருந்து விட்டு மற்ற இரண்டு தளங்களில் இருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார் என்றார் நான் விசாரித்த நபர்.எனக்கு ஆச்சரியம்.

அந்த தள்ளு வண்டிக்காரரைப் பற்றி மற்றுமொரு ஆச்சரியம் என்னவென்றால் , பெங்களூர் வரும்பொழுது வெறும் கையுடன் வந்தவர் சில வருடங்கள் கடின உழைப்பால் பத்து லட்சத்துக்கு வாங்கியதுதான் இப்பொழுது அவர் குடியிருக்கும் வீடு.இப்பொழுது அந்த வீட்டின் மதிப்பு ஒரு கோடியைத் தொட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது.ஆக , வாழ்க்கையில் படிப்பு இருந்தால் மட்டுமே உயர முடியும் என்றில்லை.அதற்காக கல்வி தேவை இல்லை என்று சொல்லவில்லை. கல்விச் செல்வத்தைப் பெற முடியவில்லை என்றால் பிழைக்க ஆயிரம் வழிகள் உள்ளன.அப்படி தேர்ந்தெடுத்தவர்கள்தான் இப்படி முன்னேறுகிறார்கள்.அம்பானிகளும் , அதானிகளும் கூட பிறவியிலேயே கோடிசுவரர்கள் இல்லையே.இன்றைக்கு அவர்கள் மேல் என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் கடந்து வந்த பாதை ஆச்சரியப்பட வைப்பதுதான். ஆக ஒழுக்கமும், முயற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அம்பானியாகலாம்.தினமும் டிப் டாப்பாக உடை அணிந்து அலுவலகம் சென்று ஏ.சி.ரூமில் அமர்ந்து உடல் உழைப்பே இல்லாமல் மாதக் கடைசியில் சம்பளத்தில் பெரும் தொகையை வீட்டுக் கடனுக்குச் செலுத்திவிட்டு காலரைத் தூக்கிவிட்டு நான் சாப்ட்வேர் எஞ்சினியர் என்று வேண்டுமானால் நாம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்.என்னதான் நாமும் வாழ்க்கையில் முன்னேறி இருக்கின்றோம் என்றாலும் கூட மேலே குறிப்பிட்ட நபரைப் போன்றவர்களின் முன்னேற்றத்தை விட நாம் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை என்றே நினைக்கின்றேன். இவரைப் போன்றவர்களை அவ்வப்பொழுது நினைத்துக்கொண்டால் இன்னும் கூட நமக்கு வெறி அதிகமாகும்.நாம் செல்ல வேண்டிய பாதை இங்கே இன்னும் நிறைய இருக்கிறது.

எங்கள் வீட்டினருகில் போண்டா , பஜ்ஜி கடை வைத்திருக்கிறார் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர்.அதிகம் படித்தவராகத் தெரியவில்லை.போண்டா , பஜ்ஜி , பக்கோடா என்று அனைத்தும் கிடைக்கும்.ஒரு சிறிய இடத்தில் கடை வைத்திருக்கிறார்.காலையில் பதினோரு மணிக்கு வந்துவிட்டால் இரவு பத்து மணிக்குத்தான் வீடு திரும்புவார்.தன்னுடன் வேலைக்கு இரண்டு ஆட்களை வைத்திருக்கிறார்.தொழில் லாபகரமாகவே செல்கிறது. கடையில் எப்பொழுதும் கூட்டம்.நல்ல வருமானம்.கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரம் வேலை செய்து விட்டு வீட்டிற்குச் சென்று உணவருந்திவிட்டு உறங்கிவிட்டு காலை ஆறரை மணிக்கு விளையாட்டு மைதானத்தில் ஆஜராகி விடுகிறார்.பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு நடைப்பயிற்சி செல்லும் போது நான் தினமும் இவரைப் பார்ப்பதுண்டு.பூங்காவிற்கு அருகில் தான் அந்த சிறிய மைதானம் இருக்கிறது.அங்கே இளைஞர்கள் சிலர் தினமும் பேட்மிண்ட்டன் விளையாடுவது வழக்கம்.இந்த போண்டா கடைக்காரரும் அங்கே இருக்க எனக்கு ஆச்சரியம்.அதற்காகவே தினமும் இவரை நான் கவனிப்பதுண்டு.அந்த இளைஞர்கள் விளையாடுவதை பொறுமையாக கவனித்து வந்தார்.அவ்வப்பொழுது அவர்களுக்கு உதவி செய்வார்.சில நாட்களில் விளையாட்டைக் கற்றுக்கொண்டாலும் இவருக்கு அந்த இளைஞர்களுடன் சேர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.போண்டா கடைக்காரனுக்கு இந்த விளையாட்டில் எல்லாம் என்ன தெரியப்போகிறது என்று நினைத்திருக்கலாம் அந்த இளைஞர்கள்.

ஆரம்பத்தில் இரண்டு நிமிடம் , மூன்று நிமிடம் என்று வாய்ப்பு கிடைத்து விளையாடி வந்தவர் இப்பொழுது அந்த டீமில் ஒருவராக மாறிவிட்டார். தினமும் ஷூ அணிந்து கொண்டு வந்து விடுகிறார்.அந்த இளைஞர்களுடன் சேர்ந்து தினமும் பேட்மிண்ட்டனில் அசத்தி வருகிறார்.யாருக்குத் தெரியும் வருங்காலத்தில் தேசிய அளவில் கூட விளையாடும் அளவிற்கு இவர் முன்னேறக் கூடும்.அவர் செய்யும் தொழிலுக்கும் இந்த விளையாட்டிற்கும் சம்பந்தமே இல்லை. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் , அதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று முயற்சியும் தான்.இப்பொழுதெல்லாம் வெறித்தனமாக விளையாடுகிறார். ஆக , இங்கே படித்தவர்கள் மட்டுமே சாதனை செய்வதில்லை.மேலே குறிப்பிட்டவர்களைப் போல் பலரும் அதிகம் படிக்காமல் இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் கண்ட முன்னேற்றத்தைப் பார்த்தால் நாமெல்லாம் சாதாரணம் என்றுதான் தோனுகிறது. யாரிடம் வேண்டுமானாலும் நம்மிடம் இல்லாத திறமைகள் பல இருக்கலாம்.வெறும் வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை உணர்ந்துகொள்ள இப்படிப்பட்டவர்களை நாம் சந்தித்தாலே போதும்.நமது எண்ணத்தையும் மாற்றிக்கொள்வோம்.இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் அது உதவும்.

——————- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

6 Responses to இவர்களும் அம்பானிகள்தான்

 1. இவர்களும் அம்பானிகள்தான் = யாரிடம் வேண்டுமானாலும் நம்மிடம் இல்லாத திறமைகள் பல இருக்கலாம்.வெறும் வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை உணர்ந்துகொள்ள இப்படிப்பட்டவர்களை நாம் சந்தித்தாலே போதும்.= Kathirvel Subramaniam = அருமையான பதிவு. நான் சந்திக்க நினைக்கும் நண்பர் நீங்கள் திரு Kathirvel Subramaniam = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் Kathirvel Subramaniam

  Like

 2. Reblogged this on rathnavelnatarajan and commented:
  இவர்களும் அம்பானிகள்தான் = யாரிடம் வேண்டுமானாலும் நம்மிடம் இல்லாத திறமைகள் பல இருக்கலாம்.வெறும் வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை உணர்ந்துகொள்ள இப்படிப்பட்டவர்களை நாம் சந்தித்தாலே போதும்.= Kathirvel Subramaniam = அருமையான பதிவு. நான் சந்திக்க நினைக்கும் நண்பர் நீங்கள் திரு Kathirvel Subramaniam = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் Kathirvel Subramaniam

  Like

 3. இவர்களும் அம்பானிகள்தான் = யாரிடம் வேண்டுமானாலும் நம்மிடம் இல்லாத திறமைகள்
  பல இருக்கலாம்.வெறும் வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் குறைத்து
  மதிப்பிடக்கூடாது என்பதை உணர்ந்துகொள்ள இப்படிப்பட்டவர்களை நாம் சந்தித்தாலே
  போதும்.= Kathirvel Subramaniam = அருமையான பதிவு. நான் சந்திக்க நினைக்கும்
  நண்பர் நீங்கள் திரு Kathirvel Subramaniam = எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  நன்றி & வாழ்த்துகள் Kathirvel Subramaniam

  2014-12-02 12:10 GMT+05:30 ” நிதர்சனம்” :

  > Kathirvel Subramaniam posted: “நாம் பல சமயங்களில் சிலரை குறைத்து
  > மதிப்பிட்டு விடுகின்றோமோ என்ற எண்ணம் அவ்வப்பொழுது வருகின்றது.அதற்கு
  > அவர்களுடைய தோற்றமும் , அவர்கள் செய்யும் வேலையுமே காரணங்களாக அமைந்து
  > விடுகின்றன.அவர்களுடைய வெளித் தோற்றத்தை வைத்து நாம் அப்படி அவர்களை
  > சித்தரித்து விடுகின”

  Like

 4. sivakumar says:

  நன்றி & வாழ்த்துகள்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s