நான் மனிதனாக வாழ ஆசைப்படுகின்றேன்

3அம்மா , அப்பாவைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் அவ்வப்பொழுது கண்ணீர் வந்துவிடுகின்றது.தினமும் அலுவலகம் வரும் முன் தெய்வ வழிபாடு நிச்சயம் உண்டு.அப்பொழுதும் அம்மாவையும் , அப்பாவையும் மனதிற்குள் வணங்கிவிட்டுத்தான் செல்கின்றேன்.ஏதாவது கெட்ட கனவு கண்டுவிட்டால் ஊரில் இருந்து இருவரும் போன் செய்துவிடுவார்கள்.வண்டீல பாத்து போயிட்டு வாப்பா என்று சொல்கிறார்கள் என்றால் நிச்சயம் முந்தைய நாள் இரவு கெட்ட கனவு கண்டிருக்கிறார்கள் என்று கேட்காமலேயே புரிந்துகொள்வேன்.அது 1983 ஆம் வருடம்.இதை எழுதிக்கொண்டிருப்பவன் மேதாவியாக வர பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட வருடம்.அப்பொழுதுதான் கொடுமுடியில் S.S.V பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பித்திருந்தார்கள் என்று நினைக்கின்றேன்.ஊர்ப் பகுதியில் ஆங்கில வழிக்கல்வி அப்பொழுது பிரபலம் ஆகாத நாட்கள் அவை.அப்பாவிற்கு விவசாயம்தான் உயிர்நாடி.விவசாயம் செய்தெல்லாம் ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க முடியாதுப்பா , உன்னால பீஸ் எல்லாம் சமாளிக்க முடியுமா என்று அக்கம்பக்கத்தினர் அப்பாவிடமும் , அம்மாவிடமும் கேட்டிருக்கிறார்கள்.பையன் படிப்பில் நன்றாக வந்தால் எப்படியும் கஷ்டப்பட்டு படிக்க வைத்துவிடலாமப்பா என்றிருக்கிறார் அப்பா.அப்பா இவ்வளவு தைரியமாகச் சொல்வதற்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்தவர் அம்மாதான்.ஆங்கில வழிக்கல்வியில் L.K.G – யில் சேர்ந்தாகிவிட்டது. என் சிறு வயது முதல் அப்பாவிற்கு புல்லட் என்றால் உயிர்.அதே புல்லட்டில்தான் தினமும் வீட்டிலிருந்து கொடுமுடி அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு வந்துவிடுவார்.என்னுடன் சேர்ந்து உறவினர் ஒருவரின் மகனும் வருவார்.காலையில் அப்பா என்றால் மாலையில் அவரின் அப்பா வந்து அழைத்துச் சென்றுவிடுவார்.படிப்பு எப்படிச் சென்றது என்று கேட்டீர்கள் என்றால் U.K.G படிக்கும்பொழுது சட்டையில் தலை வாரிக்கொள்ள சீப்பு எடுத்துச் செல்லும் அளவிற்கு சென்று கொண்டிருந்தது.இருந்தாலும் எனக்குத் தெரிந்து படிப்பில் ஒன்றும் குறை வைக்கவில்லை.அதன் காரணமாக அப்பாவும் எனக்கு கல்வியில் குறை வைக்கவில்லை.

இதற்கிடையில் ஒவ்வொரு வகுப்பிலும் நடந்த விசயங்களை எல்லாம் சொன்னால் நேரமாகிவிடும் என்பதால் அண்ணாமலை படத்தில் வரும் பாடலைப் போல் நேரடியாக ஆறாம் வகுப்பிற்குச் சென்றுவிடுகின்றேன்.கொடுமுடியில் S.S.V பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி ஐந்தாம் வகுப்பு வரைதான் உள்ளது.இன்றும் அப்படித்தான்.ஆறாம் வகுப்பில் இருந்து சிவகிரி S.S.V பள்ளிக்குச் செல்ல வேண்டும்.சென்றாகிவிட்டது.படிப்பும் நன்றாகச் சென்றது.அவ்வப்பொழுது கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டியில் கலந்துகொள்வதுண்டு.சத்தியமாக ஒன்றைக்கூட நான் எழுதியதில்லை.ஊரில் புலவர் தங்கராசு என்று அண்ணன் ஒருவர் இருக்கிறார்.நல்ல கவிஞர்.அப்பொழுதே கவிதைத் தொகுப்பொன்றை வெளியிட்டவர்.பின்னாளில் திரைத்துறைக்குச் சென்றவர்.”கேம்பஸ்” என்ற படத்திற்கு வசனம் இவரே. என்னுடைய கவிதை , கட்டுரை அனைத்தும் அண்ணன் எழுதியதுதான்.அப்படியே எடுத்துக்கொண்டு போய் போட்டியில் வாந்தி எடுத்துவிட்டு பரிசுகளும் பெறுவதுண்டு.அவை அனைத்தும் எனக்குக் கிடைத்ததில்லை.அனைத்தும் அண்ணனுக்கே சேரும்.அறிவுத் திருட்டு என்று சொல்வார்களே அதை இப்படியும் நாகரீகமாக திருடலாம்.திருடியதை வைத்து பரிசும் வாங்கலாம்.ஆனால் , நான் செய்தது அனைத்தும் அண்ணனுக்கு தெரிந்தே செய்தது.அவர் எழுதிக்கொடுப்பார் , நான் எடுத்துச் செல்வேன்.அவ்வளவுதான்.இன்றைக்கு நானும் கொஞ்சம் எழுதுகின்றேன் என்பதை உங்களைப் போல் என்னாலும் நம்ப முடியவில்லை.என்ன செய்வது காலத்தின் கோலத்தை அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.அனுபவியுங்கள். இதற்கிடையில் பள்ளி ஆண்டு விழா என்றால் ஆங்கில/தமிழ் நாடகங்களில் நடிக்க என்னையும் சேர்த்து விடுவார்கள்.அதை சேர்த்து விடுவார்கள் என்று கூட சொல்ல முடியாது , கோர்த்து விடுவார்கள்.தமிழ் நாடகங்கள் கூட பரவாய் இல்லை.இன்று வரை நான் எப்படி ஆங்கில நாடகங்களில் நடித்தேன் என்று சத்தியமாக நம்பமுடியவில்லை.

ஒருவழியாக பன்னிரெண்டாம் வகுப்பு 1998-ல் முடிந்துவிட்டது.பெற்றோர்களின் ஆசைப்படி என்னால் முடிந்த நல்ல மதிப்பெண்கள் பெற்றேன்.இருப்பினும் அந்த வருடம் இந்த நாட்டின் சிறந்த கம்ப்யூட்டர் இஞ்சினியருக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.ஒரு வருடம் கழித்து 1999-ல் தான் கல்லூரியில் சேர்ந்தேன்.அப்பொழுதுதான் அக்காவின் திருமணமும் முடிந்திருந்தது.அப்பா எந்தக் குறையும் இல்லாமல் அக்காவின் திருமணத்தை நடத்தியிருந்தார்.எனக்கு வாய்த்த மச்சானும் சொக்கத் தங்கம் என்றுதான் சொல்லவேண்டும்.நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதை யாரேனும் பார்த்தால் பொறாமைப்படும்படிதான் இருக்கும்.இன்றுவரை அப்படித்தான் இருக்கிறது எங்கள் உறவு.அக்கா திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே நானும் கல்லூரி செல்கின்றேன்.அந்தக் காலகட்டம் அப்பாவிற்கு விவசாயத்தில் நஷ்டமே தவிர ஒரு பைசா கூட லாபம் வந்ததில்லை. வெள்ளாமை நன்றாக இருந்தால் விலை இருக்காது , விலை இருந்தால் வெள்ளாமை நன்றாக இருக்காது.அதே சமையத்தில் என் கல்லூரிச் செலவும் வந்துவிட்டது.தான் ஆசையாக வைத்திருந்த புல்லட்டை விற்றுத்தான் என்னுடைய முதல் வருட கல்லூரிக் கட்டணத்தைக் கட்டினார்.நானும் படிப்பில் குறை வைக்கவில்லை.இரண்டாம் வருடம் வந்தது.விவசாயம் இன்னும் மோசமான நிலையில்தான் இருந்தது.அப்பா கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை.என்னுடைய இரண்டாம் வருட கல்லூரி படிப்பின் போது அப்பாவின் கடன் 2.5 லட்சத்தை தொட்டிருந்தது.அப்பாவிடம் சென்றேன்.அப்பா , நீங்கள் படும் கஷ்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை.நான் வேண்டுமானால் படிப்பை நிறுத்திக்கொள்கின்றேன் என்று சொன்னவுடன் அம்மா என்னைத் திட்டினார்.நாங்கள் உயிரோடு இருக்கும் வரை அது மட்டும் நடக்காது என்றார்.நீ படிப்பில் மட்டும் கவனம் செலுத்து மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்றார்கள் இருவரும்.வாங்கிய கடனை உயிரைக் கொடுத்தாவது திருப்பிக் கொடுத்துவிடவேண்டுமே தவிர , மற்றவர்களை ஏமாற்றத்தான் கூடாது என்றார் அப்பா.

சில நாட்களிலேயே அப்பா தானே சுயமாக சம்பாதித்து வாங்கிய இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க முடிவுசெய்தார் என் படிப்பிற்காக.அவருடைய கண்களில் வந்த நீரை நான் பார்க்கத் தவறவில்லை.இறுதியில் இரண்டு ஏக்கர் விற்றுவிட்டோம்.விற்ற பணத்தில் கல்லூரிப் படிப்பையும் முடித்துவிட்டேன்.அப்பா தான் வாங்கிய 2.5 லட்சம் கடனையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். இந்த சோதனைகள் அனைத்தையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம்.ஒன்றைத் தவிர.”அட என்னப்பா , இவனென்னமோ காடு தோட்டத்தை எல்லாம் வித்து பையன படிக்க வெக்கிறே , அவனெங்கடா வேலைக்கு போயி சம்பாரிச்சு கிழிக்கப்போறான் , காடு கரைய வித்து படிக்க வெச்சு சும்மாதே திரியப் போறாம் பாரு” என்று என் காதிற்கே கேலியும் , கிண்டலுமான பேச்சு எட்டியதுதான் வேதனையே தவிர வேறெதுவும் இல்லை. நான் கவலைப்படவில்லை.என் மேல் அப்பா , அம்மா இருவரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த நம்பிக்கையை நான் பொய்யாக்கவில்லை என்று இப்பொழுது யாரிடம் வேண்டுமானாலும் அடித்துச் சொல்வேன்.கிராமத்துப் பின்னணியில் வளர்ந்த நான் என் விருப்பப்படி இன்றைக்கு வெளி நாடுகளுக்கும் சென்று வந்தாகிவிட்டது.இருந்தாலும் எனக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை.இப்பொழுதும் அலுவலகத்தில் வெளிநாட்டு வாய்ப்புகள் நிறைய வருகின்றன.நான் நிராகரித்து விடுகின்றேன்.இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது ஊருக்குச் சென்று பெற்றோர்களையும் , சொந்த பந்தங்களையும் பார்த்துவிட்டு வரவில்லை என்றால் மனம் அமைதி கொள்வதில்லை.இந்த வாழ்க்கைதான் எனக்குப் பிடித்திருக்கிறது.இன்றைக்கு ஓரளவு வசதி வந்துவிட்டது.ஊருக்குச் செல்லும் பொழுது அன்றைக்கு அப்பாவை கேலி செய்தவர்கள் என்னிடம் பெங்களூரில் இருந்து எப்பொழுது வந்தப்பா , நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரிக்கிறார்கள்.

இதுதான் கால மாற்றங்கள் என்பது.ஒரு மனிதனுக்கு சமூகத்தில் மரியாதை என்பது பணத்தை வைத்துத்தான் கிடைக்கிறது.அன்று அப்பாவை கேலி செய்தவர்கள் இன்று சிரிக்கச் சிரிக்க என்னிடம் நலம் விசாரிக்கிறார்கள்.நான் அவர்களை வெறுக்கவில்லை.புன்னகையுடனேயே அவர்களுக்கு பதில் கொடுத்தாலும் என் புன்னகை வெறும் நடிப்புத்தான் என்பது அவர்களுக்குப் புரிந்தால் எனக்கு மகிழ்ச்சியே.நான் அவர்களை பழி வாங்க நினைக்கவில்லை.என் புன்னகை வெறும் நடிப்புத்தான் என்பதை அவர்கள் உணரும் பட்சத்தில் அவர்களே அவர்களை தண்டித்துக்கொள்ளட்டும் என்று நகர்ந்து விடுகின்றேன். நான் மனிதனாக வாழ ஆசைப்படுகின்றேன்.அவர்களைப் போல் அல்ல.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

4 Responses to நான் மனிதனாக வாழ ஆசைப்படுகின்றேன்

 1. நான் மனிதனாக வாழ ஆசைப்படுகின்றேன் = இன்றைக்கு ஓரளவு வசதி வந்துவிட்டது.ஊருக்குச் செல்லும் பொழுது அன்றைக்கு அப்பாவை கேலி செய்தவர்கள் என்னிடம் பெங்களூரில் இருந்து எப்பொழுது வந்தப்பா , நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரிக்கிறார்கள்.

  இதுதான் கால மாற்றங்கள் என்பது.ஒரு மனிதனுக்கு சமூகத்தில் மரியாதை என்பது பணத்தை வைத்துத்தான் கிடைக்கிறது.அன்று அப்பாவை கேலி செய்தவர்கள் இன்று சிரிக்கச் சிரிக்க என்னிடம் நலம் விசாரிக்கிறார்கள் = Kathirvel Subramaniam = அருமை. படிப்பு தான் மனிதனின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் போது ஊரெல்லாம் கேலி பேசுவார்கள் = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் Kathirvel Subramaniam

  Liked by 1 person

 2. Reblogged this on rathnavelnatarajan and commented:
  நான் மனிதனாக வாழ ஆசைப்படுகின்றேன் = இன்றைக்கு ஓரளவு வசதி வந்துவிட்டது.ஊருக்குச் செல்லும் பொழுது அன்றைக்கு அப்பாவை கேலி செய்தவர்கள் என்னிடம் பெங்களூரில் இருந்து எப்பொழுது வந்தப்பா , நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரிக்கிறார்கள்.

  இதுதான் கால மாற்றங்கள் என்பது.ஒரு மனிதனுக்கு சமூகத்தில் மரியாதை என்பது பணத்தை வைத்துத்தான் கிடைக்கிறது.அன்று அப்பாவை கேலி செய்தவர்கள் இன்று சிரிக்கச் சிரிக்க என்னிடம் நலம் விசாரிக்கிறார்கள் = Kathirvel Subramaniam = அருமை. படிப்பு தான் மனிதனின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் போது ஊரெல்லாம் கேலி பேசுவார்கள் = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் Kathirvel Subramaniam

  Liked by 1 person

 3. நான் மனிதனாக வாழ ஆசைப்படுகின்றேன் = இன்றைக்கு ஓரளவு வசதி
  வந்துவிட்டது.ஊருக்குச் செல்லும் பொழுது அன்றைக்கு அப்பாவை கேலி செய்தவர்கள்
  என்னிடம் பெங்களூரில் இருந்து எப்பொழுது வந்தப்பா , நல்லா இருக்கீங்களா என்று
  நலம் விசாரிக்கிறார்கள்.

  இதுதான் கால மாற்றங்கள் என்பது.ஒரு மனிதனுக்கு சமூகத்தில் மரியாதை என்பது
  பணத்தை வைத்துத்தான் கிடைக்கிறது.அன்று அப்பாவை கேலி செய்தவர்கள் இன்று
  சிரிக்கச் சிரிக்க என்னிடம் நலம் விசாரிக்கிறார்கள் = Kathirvel Subramaniam =
  அருமை. படிப்பு தான் மனிதனின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது.
  கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் போது ஊரெல்லாம் கேலி பேசுவார்கள் = அருமையான
  பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் Kathirvel Subramaniam

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s