முட்டையால் பிறந்த சிந்தனைத் துளிகள்

Eggகாட்சி : 1

அன்றொரு நாள் முட்டை வாங்குவதற்காக சிக்கன் கடைக்குச் சென்றிருந்தேன்.எட்டு முட்டை முப்பத்தி ரெண்டு ரூபாய் என்றார் கடைக்காரர்.நான் எட்டு முட்டை கொடுங்கள் என்றேன்.எனக்கு முன்னர் மற்றொரு நபர் காத்திருந்ததால் அவருக்கு கொடுத்துவிட்டு எனக்குத் தருவதாகச் சொன்னார்.நான் சரி என்றேன்.அந்த நபருக்கு ஐந்து முட்டைகள் எடுத்து பேக் செய்துவிட்டு அவரிடம் கொடுத்தார்.உடனே அந்த நபர் “பய்யா பய்யா” என்று சத்தம் போட்டு கடைக்காரரை அழைத்தார் .அந்த சத்தத்தைக் கேட்டவுடன் ஏதோ உடைந்த முட்டையைக் கொடுத்துவிட்டார் போல , அதற்காகத்தான் அந்த நபர் அப்படி டென்சனில் கத்துகிறார் என்று நினைத்துக்கொண்டு , “அடேய் கதிர்வேலா இன்னைக்கி நல்ல மேட்டரு சிக்கிருச்சு நீயும் அந்த நபரோடு சேர்ந்து நீதீடா , நேர்மீடா , நாணயன்டா என்று போராடு” என்று குஷியாகிவிட்டேன்.நாம்தான் எங்கு அநீதி நடந்தாலும் அங்கே ஹீரோவாகி விடுவோமே .பிறகுதான் தெரிந்தது அந்த ஹிந்திக்கார பயபுள்ளையின் அட்டகாசம்.

ஆம், அந்த நபர் ஹிந்திக்காரர்.கழுத்தில் ஐ.டி.நிறுவனத்தின் அடையாள அட்டையுடன் நின்றிருந்தார்.”பய்யா , பய்யா” விற்குப் பிறகு இதுதான் நடந்தது.இந்த ஹிந்திக்கார பயபுள்ள வாங்கின ஐந்து முட்டைகளில் ஒன்று மட்டும் மற்ற நான்கை விடவும் சிறியதாம்.உடனே கோபப்பட்டுவிட்டார்.நான் அந்த முட்டையைப் பார்த்தேன்.கண்ணில் பூதக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால்தான் தெரியும் அது மற்ற நான்கை விடவும் கொஞ்சம் சிறிய முட்டை என்று.இல்லையேல் மற்ற முட்டைகளுக்கும் இந்த முட்டைக்கும் வித்தியாசம் தெரிய வாய்ப்பில்லை.இதே முட்டைதான் நான் மற்றவர்களுக்கும் கொடுக்கின்றேன் என்ற கடைக்காரரின் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டார் ஹிந்தி பாபு.கொடுக்குற காசுக்கு நல்ல பொருளா வாங்கணுமில்ல என்று விளக்கம் வேறு.எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் அவர் பேசியதை புரிந்துகொண்டேன்.கடைக்காரர் தேடிப் பிடித்து வேறொரு முட்டையை எடுத்து அந்த ஹிந்தி பாபுவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தார்.[ அந்த நபரைப் பார்த்து இப்படிக் கேட்க தோணியது -> எசமானே , தாங்கள் KFC -ல் எல்லாம் இப்படித்தான் கேட்டு வாங்குகிறீர்களா ]

அதற்குப்பிறகு யாரோ என்னிடம் – “தம்பி கதிர்வேலா , நீ இப்படியே பச்சப்புள்ளயாவே இருக்காத.பாரு ஊரு உலகத்துல பசங்க எல்லாம் எப்படி இருக்காங்கன்னு” என்று கூறுவதைப் போல் இருந்தது .நான் காறித் துப்ப இடம் தேடி நகர்ந்தேன்.

காட்சி : 2

அன்றைக்கு பெரியவனுக்கு முட்டை ஊட்டிவிடும் பெரிய பொறுப்பை மனைவி என்னிடம் நம்பிக் கொடுத்தார்.நானும் அவர் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட வேண்டாம் என்று கெத்துடன் முட்டையை எடுத்துக்கொண்டு பையனைக் கூப்பிட்டேன்.குட்டி ராஸ்கோலு ஒரு சிறிய முட்டையைச் சாப்பிட முக்கால் மணி நேரம் எடுத்துக்கொண்டான்.அவன் செய்ததும் ஒரு விதத்தில் நல்லதாக அமைந்துவிட்டது.பையனுக்கு ஊட்டிக்கொண்டிருக்கும்போது இரண்டு சுவற்றின் இடையே உள்ளே நுழைய பூச்சி ஒன்று சிரமப்பட்டுக் கொண்டிருந்ததை காண முடிந்தது.அது என்ன பூச்சி என்று என் அறிவுக்கு எட்டவில்லை.அது தேவையானதாகவும் நான் நினைக்கவில்லை.இரண்டு சுவற்றிற்கும் இடையே நுழைய சிரமப்பட்டுக் கொண்டிருந்த பூச்சிக்கு போதுமான சந்து இல்லை.சிறிய சந்துதான் இருந்தது.அந்த சந்துக்குள் அதனால் நுழைய முடியவில்லை.அதன் நோக்கம் சந்தை பெரியதாக்கி உள்ளே சென்று மறைந்துகொள்வதாகத்தான் இருக்க முடியும் என்று என் ஆறாம் அறிவு உணர்த்தியது.

நானும் பையனுக்கு முட்டையை ஊட்டிக்கொண்டே அந்தப் பூச்சியையும் கவனித்துக்கொண்டிருந்தேன்.எப்படித்தான் உள்ளே செல்கிறது பார்ப்போம் என்று.தனது கால்களால் அந்தச் சந்திலிருந்து மண்ணை கொஞ்சம் கொஞ்சமாக தோண்ட ஆரம்பித்தது.கால்களாலேயே தோண்டி முன்னால் இருக்கும் இரண்டு கால்களால் தோண்டிய மண்ணை எடுத்துக்கொண்டு வந்து வெளியே போட்டுக்கொண்டிருந்தது.இதே காட்சி முக்கால் மணி நேரத்திற்கு தொடர்ந்தது.நான் முட்டை ஊட்டி முடிப்பதற்கும் அந்தப் பூச்சி அந்தச் சந்தை பெரியதாக மாற்றுவதற்கும் சரியாக இருந்தது அந்த முக்கால் மணி நேரம்.நேரம் அவ்வளவு ஆனாலும் தன் முயற்சியை கைவிடவில்லை அந்தப் பூச்சி.சந்தைப் பெரியதாக்கிய பிறகு உள்ளே சென்று மறைந்துவிட்டது. எனக்கு சற்று குற்ற உணர்வாகத்தான் இருந்தது.நானும் கூட சில வேலைகளில் முயற்சியைக் கை விட்டவன்தான்.பிறகு வருந்தி இருக்கின்றேன்.எனக்கு இந்தப் பூச்சி பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது.நான் மட்டுமில்லை.இங்கே நாம் பலரும் இந்தப் பூச்சிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பிரச்சனைகளையே வாழ்க்கையில் நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்றால் வெற்றி எனும் நண்பன் உங்களுக்கு கை கொடுக்கக் காத்திருக்கின்றான் என்று அர்த்தம்.முயற்சியை மட்டும் விட்டுவிடாதீர்கள்.முயற்சி திருவினையாக்கும்.அதற்கு இந்தப் பூச்சி ஒரு சாட்சி.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s