வெறி நாய்கள்

12கற்பழிப்பு சம்பவங்கள் எங்கு நடந்தாலும் நம் அனைவருக்கும் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது ஊடகங்கள்.அவர்களைப் பொருத்தவரை இது போன்ற செய்திகள் எல்லாம் அவர்களுக்கு லட்டு போன்றவை.இப்பொழுது நாம் ஊடகங்களைப் பற்றி ஏன் பேச வேண்டும்.பெரும்பாலும் நமக்கு கற்பழிப்பு சம்பவங்களை கடந்த சில மாதங்களாக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருப்பது தலைநகர் டெல்லிதான்.இது போன்ற குற்றங்களுக்கு இன்னும் அங்கே சரியான ஆட்சி அமையவில்லை என்பதெல்லாம் காரணமாக இருக்க வாய்ப்பில்லை.கடந்த வெள்ளியன்று டெல்லியில் மீண்டுமொரு கற்பழிப்பு சம்பவம்.மீடியாவில் தற்பொழுது இதுதான் பிளாஷ் நியூஸ்.இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்கு உயிருக்கு ஆபத்தில்லை என்பதுதான்.”உபேர்”(Uber) என்ற பெயரை நம்மில் நிறையப்பேர் கேள்விப்பட்டிருப்போம்.சர்வதேச அளவில் டாக்சி சேவை அளிப்பதில் புகழ் பெற்ற நிறுவனம்தான் உபேர்.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருவதுதான் உபேர் நிறுவனம்.மொத்தம் 52 நாடுகளில் தங்களது டாக்சி சேவையை நடத்திவருகிறது.இந்தியாவில் சென்னை , பெங்களூர் , டெல்லி உட்பட 11 நகரங்களில் இயங்கி வருகிறார்கள்.2009-ல்ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்து இன்று 52 நாடுகளில் கால்பதித்திருக்கிறார்கள்.ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சி சாதாரணம் அல்ல.

அவர்கள் வலைதளத்திற்கு சென்றுபார்த்தால் கொட்டை எழுத்தில் எங்களுக்கு வாடிக்கையாளரின் பாதுகாப்பே அனைத்திலும் முக்கியம்.நீங்கள் எங்கள் நிறுவனத்தில் டாக்சி புக் செய்தது முதல் வீட்டில் சென்று இறங்கும் வரை பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பு என்ற வாசகங்கள் பளிச்செனத் தெரிகிறது.அவை அனைத்தும் முற்றிலும் விளம்பரத்திற்காகவே என்பது கடந்த வாரம் நடந்த கற்பழிப்பு சம்பவம் உணர்த்துகின்றது.கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண் இரவு 9:30 மணி அளவில் உபேர் டாக்சியில் ஏறி இருக்கிறார்.டாக்சி சென்று கொண்டிருக்கும் போது உறங்கிவிட்டார்.டாக்சி டிரைவர் மறைவான ஒரு இடத்திற்குச் சென்று காரை நிறுத்தியிருக்கிறார்.அந்தப் பெண் காரணம் கேட்டதற்கு கம்பி ஒன்றைக் காட்டி மிரட்டியிருக்கிறார்.பின்பு அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டு , அதை போலீஸில் சொல்லிவிட்டால் கொன்று விடுவேன் என்றும் பயமுறுத்திவிட்டு, அந்தப் பெண்ணை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.இதுதான் சம்பவம்.கற்பழிக்கப்பட்டாலும் உயிருடன் வந்த அந்தப்பெண் உடனடியாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார்.காவல்துறைக்கு இதில் சவாலான விஷயம் என்னவென்றால் கற்பழித்த இந்த வெறியனை எல்லாம் தேடிக் கண்டுபிடிக்க ஒரு லட்சம் ரூபாய் பரிசளிப்பதாக அறிவிப்பு செய்து பின்பு பிடித்திருக்கிறார்கள்.இன்றைக்கு வெறிநாயைத் தேடுவதற்கெல்லாம் நமது நாட்டில் ஒரு லட்சம் ரூபாய் செலவழித்து தேட வேண்டிய நிலை.

இப்பொழுது விசாரணையில் கிடைத்த தகவலைப் பார்ப்போம்.சர்வதேச அளவில் டாக்சி சேவை அளிப்பவர்கள் இப்படியும் வேலைக்கு ஆட்களை எடுப்பார்களா என்று சிறு குழந்தை கூட கேள்வி கேட்கும் அளவிற்கு இருக்கிறது அவர்கள் செயல்.கீழே கொடுக்கப்பட்டுள்ள எதையும் இவர்கள் பின்பற்றவில்லை என்பதுதான் ஒரு சர்வதேச நிறுவனத்தின் மீது நமக்கு எரிச்சல் வரக் காரணமாக இருக்கிறது.

•டிரைவருக்கு கட்டாய போலீஸ் வெரிபிகேசன் செய்ய நிர்வாகம் தவறியிருக்கிறது.பணிக்கு அமர்த்தும் டிரைவர்களின் பின்னணி பற்றி ஒழுங்காக விசாரிக்காமல் வேலைக்கு அமர்த்தியிருக்கிறது
•டெல்லி போக்குவரத்து அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் டிரைவரிடம்இல்லை
•டாக்சியில் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டிய GPS பொருத்தப்படவில்லை
•டிரைவர் சமர்ப்பித்தமற்ற ஆவணங்கள் அனைத்தும் போலியானவை
•இதே போல் வேறொரு பெண்ணை கற்பழித்த வழக்கில் தற்போது பிடிபட்ட டிரைவர் இதற்கு முன்னர் 7 மாத சிறை தண்டனை பெற்றிருந்தது போலீஸ் வெரிபிகேசன் செய்யாததால் மறைக்கப்பட்டுள்ளது

மேலே குறிப்பிட்ட அனைத்தும் மிகவும் அடிப்படை விஷயங்களாகும்.ஒருவரை வேலைக்கு வைப்பதற்கு முன் எத்துனை இடங்களில் விசாரிக்கின்றோம்.வேலைக்கு எடுக்கும் நபர் நல்லவனா என்று விசாரிப்பது எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் அடிப்படை விஷயமே.அப்படி விசாரித்திருந்தால் நிச்சயம் இந்த டிரைவரின் ஒழுக்கத்தைப் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும்.இவர்களுக்கு ஆள் கிடைக்க வேண்டும் என்பதால் அப்படிப்பட்ட விசாரணை எதையும் “உபேர்” நிறுவனம் நடத்தவில்லை.நமது நாட்டில்தான் பணம் பாதாளம் வரைபாயுமே.பாய்ந்திருக்கிறது.அதிகாரிகள் ஒத்துழைப்பில்லாமல் இப்படி கட்டாய விதிகளை எல்லாம் இவர்களால் உடைத்திருக்க வாய்ப்பில்லை.இப்பொழுது இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மேலே குறிப்பிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தநிறுவனம் டெல்லியில் இயங்க நிரந்தரத்தடை விதித்துள்ளது டெல்லி அரசு.கூடிய விரைவில் மற்ற நகரங்களிலும் இவர்களுக்கு தடை வந்தாலும் வரலாம்.

இப்பொழுது போராட்டங்களும் , அமைச்சர்களின் பேட்டிகளும் ஊடகங்களில் வந்த வண்ணம் இருக்கின்றன.ஒரு சர்வதேச நிறுவனத்திற்கே இங்கே எப்படி சட்டதிட்டங்களை உடைத்தெறிந்து தொழில் புரிய வேண்டும் என்று தெரிந்திருக்கிறதோ அதிலிருந்தே தெரிகிறது நமது சட்டமும் அதைக் காப்பவர்களின் தகுதியும்.பணத்தை விட்டெறிந்தால் யார் வேண்டுமானாலும் சட்டத்தை விலைக்குவாங்கலாம்.ஆனால் , விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அப்பாவிகளான இந்தப் பெண்களின் கற்புதான்.எந்தக்கோணத்தில் பார்த்தாலும் கடைசியில் சட்டத்தில் எங்கோ ஓட்டை இருப்பதாகவும் , இப்படிப்பட்ட குற்றம்புரிவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் அளவிற்கு சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றே எனக்குத் தோனுகிறது.ஆசை மட்டுமே நமது.நிறைவேற்றுவது அரசின் கையில்தான் இருக்கிறது.

———- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to வெறி நாய்கள்

  1. நமது சட்டமும் அதைக் காப்பவர்களின் தகுதியும்.பணத்தை விட்டெறிந்தால் யார் வேண்டுமானாலும் சட்டத்தை விலைக்குவாங்கலாம்.= Corruption Leads.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s