மனைவியும் காதலியும்

123456தம்பி ஒருவர் நேற்று என்னிடம் கேள்வியொன்றைக் கேட்டார்.அண்ணே , காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம் என்று அறிவுசார்ந்த அற்புதமான கேள்வியொன்றைக் கேட்டார்.நமக்குத்தான் முகநூல் வந்ததிலிருந்து கிளை கிளையாகப் பிரிந்து கிடக்கிறதே அறிவுக் களஞ்சியம்.என் அறிவுக் களஞ்சியத்தில் இருந்து இதை எடுத்து விட்டேன்.இங்க பாரு தம்பி , இது ஒரு பெரிய விஷயமே இல்ல.ஒரு ஆண் ஒரு பெண்ணை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு போய் பேருந்து நிறுத்தத்தில் விடுகின்றான் என்று வைத்துக்கொள்.பைக்கில் இருந்து அந்தப் பெண்ணை இறக்கி விட்டபிறகு “ஒகே , பாய் ” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டால் அந்தப் பெண் அவனுக்கு மனைவி என்று அர்த்தம்.அதே ஆண் , அந்தப் பெண்ணை இறக்கி விட்டபிறகு குறைந்தது மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் அதே இடத்தில் நின்று கொண்டு அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தால் நீ அந்தப் பெண்ணை அவனுடைய காதலி என்று உறுதி செய்து கொள்ளலாம் என்றேன்.சரி அப்படி என்னதாண்ணே பேசுவாங்க ஐந்து நிமிடம் என்றான் தம்பி.வேறு என்னப்பா “ஒகே , போயிட்டு வா ,ஆப்பீஸ் போயிட்டு போன் பண்ணு , மத்தியானம் நல்லா சாப்பிடு , சாயந்திரம் கிளம்பும் போது போன் பண்ணு , பஸ்சுல போறப்போ பாத்து போ , வாரப்போ பாத்து வா ” என்று தினமும் பேசும் அதே டயலாக்கைத்தான் அவனும் பேசிக்கொண்டிருப்பான் , அவளும் அதை ரசித்துக்கொண்டிருப்பாள் என்றேன்.

சரிண்ணே.அப்படின்னா ஏன் மனைவியிடம் கணவர்கள் வெறும் “ஒகே பாய்” என்று மட்டும் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள் என்று மீண்டுமொரு கேள்வியைக் கேட்டான்.அவனுடைய இந்த இரண்டாவது அறிவுப்பசிக்கு கஷ்டப்பட்டு யோசித்து நீ திருமணம் செய்த பிறகு இதற்கான விடை தெரியும் என்றேன்.அண்ணே , என்னண்ணே இப்படிச் சொல்லிட்டீங்க என்றான் தம்பிப் பயல்.சிலவற்றை சொல்லிப் புரியவைக்க முடியாது தம்பி.அனுபவத்தால் தெரிந்து கொள்ளும் விஷயங்கள் நிறைய இருக்கு கண்ணு என்று என் பில்ட் அப்பை அதோடு நிறுத்திக் கொண்டு தம்பியை அனுப்பிவிட்டேன்.கல்யாணத்துக்கு தீவிரமா பொண்ணு தேடிக்கிட்டு இருக்குற பயபுள்ள என்ன கேள்விய கேக்குறாம்பாருங்க.நாம யாரு , உண்மையச் சொல்லி அவன மட்டும் தப்பிக்க விட்டுவிடுவோமா என்ன.

————– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s