கடவுளிடம் சென்றுவிட்ட பிஞ்சுகள்

PAK“தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்” – இந்த தீவிரவாத அமைப்புதான் டிசம்பர் 16-ஆம் தேதி பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளியில் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகளை கொன்று குவித்துள்ளது.யார் இந்த  “தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்” தீவிரவாதிகள் என்று நாம் தெரிந்துகொள்ள ஆப்கானிஸ்தானில்இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது.ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த தலிபான் அரசு பெண்கள் கல்விக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதித் திருந்தனர்.தாலிபான் அரசின் பல கட்டுப்பாடுகளையும் , அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து  அமெரிக்கா போர் தொடுத்து வந்தது.பலவருடங்களாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானிற்கு தற்போது பொதுத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட அஷ் ரப் கனி புதிய அதிபராகபொறுப்பேற்றுள்ளார்.  தாலிபான்களை அகற்றிவிட்டு மாற்று அரசாங்கம் அமைந்துவிட்டதால் அங்கு தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன.அப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் தொடுக்க ஆரம்பித்ததில் இருந்து பாகிஸ்தானில் ஒரு பிரிவினர் தலிபான்களுக்கு ஆதரவாக குரல்எழுப்பினர்.2007-ம் ஆண்டில் இஸ்லாமாபாத்தில் மசூதி மீது திடீரென தாக்குதல் நடத்திய இவர்கள்  அப்போது தங்களை முதல்முறையாக ‘தெஹ்ரிக்-இ-தலிபான்பாகிஸ்தான்’ என்று அறிவித்தனர்.அப்பொழுது முதல்  இந்த அமைப்பு   பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறது.இவர்களுக்கு அல் -கொய்தா தீவிரவாதஅமைப்பும் ஆதரவாக செயல்படுகிறது.

ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் பழங்குடியின பகுதிகளான வடக்கு வஜிரிஸ்தான் மற்றும் கைபர் பகுதியில் இந்த அமைப்பு ஆதிக்கம் செலுத்திவருகிறது.அங்கே முகாம் அமைத்து பயிற்சி பெற்று வருகிறது. இதில் சுமார் 35 ஆயிரம் பேர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த அமைப்பினர் கடந்த ஆறு மாத காலமாக பாகிஸ்தானில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல் நடத்தி வருவதும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில்  இந்த தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.இதைக் கண்டித்து வஜிரிஸ்தான் மற்றும் கைபர் பகுதியில் அமெரிக்காவின்  ஆளில்லா விமானங்கள்  திடீர் தாக்குதல் நடத்தி கராச்சி தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது.அதோடு சேர்த்து பாகிஸ்தான் ராணுவமும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாத அமைப்பில் பலர் பலியானார்கள்.கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த குண்டு வீச்சிலும் பாகிஸ்தான் ராணுவம் “தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்” தீவிரவாத அமைப்பில் பல தீவிரவாதிகளைக் கொன்றனர் .இந்த தாக்குதலில் வஜிரிஸ்தான் மற்றும் கைபர் பகுதியில் தீவிரவாதிகளின் பல மறைவிடங்கள் பாகிஸ்தான் ராணுவத்தால்அழிக்கப்பட்டன.

கடந்த மாதம் இந்த தீவிரவாத அமைப்பு மீது  பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் இன்னும் அதிகரித்தது.தீவிரவாதிகளை வஜிரிஸ்தான் மற்றும் கைபர் பகுதியில் இருந்து விரட்டும்  முயற்சியில் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கையில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் கடும் துப்பாக்கிச் சூடு  நடத்தியது.இந்த தாக்குதலிலும் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.மீண்டும் இந்த மாதம் 3-ஆம் தேதியும் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தாக்குதல் நடக்க பாகிஸ்தான் போர் விமானங்கள் தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து குண்டுகளை வீசியதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஆக , ஜூன் மாதம் முதல் இந்த மாதம் வரை ராணுவம் நடத்திய தாக்குதலில் அதிக இழப்பு “தெஹ்ரிக்-இ-தலிபான்பாகிஸ்தான்” தீவிரவாத அமைப்பிற்குத்தான்.இந்த இழப்புகள் அந்த அமைப்பின் கோபத்தை அதிகரித்தது.நேரடியாக ராணுவத்தைத் தாக்கினால் இழப்பு தங்களுக்கு அதிகம் ஏற்படும் என்று நினைத்து ராணுவ பள்ளிக்குள் நுழைந்து குழந்தைகளை கொன்று குவித்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு எச்சரிக்கையும் , கண்டனத்தையும் தெரிவிக்கும் விதமாகத்தான் 16-ஆம் தேதி நடந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதுதான் இந்த தாக்குதலின் பின்னணி.

ராணுவத்துடன் நேரடியாக மோதி சமாளிக்க முடியாத கோழைகள் பிஞ்சு உள்ளங்களைக் குறிவைத்து அதை நடத்திக் காட்டி விட்டனர்.வடக்கு வஜிரிஸ்தானில் எங்களின் உறுப்பினர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகத்தான் இப்பள்ளியில் தாக்குதல் நடத்தியுள்ளோம் என்றும் திமிராக அறிக்கையும் விட்டிருக்கின்றனர் இப்பொழுது.பலியான குழந்தைகள் அனைவரும் 16 வயதிற்கும் குறைவானவர்கள்.தாக்குதல் நடந்த சமையம் சில குழந்தைகள் மேஜைகளுக்கு கீழே ஒளிந்து கொண்டும் , செத்து விட்டதைப் போல் பிணமாக நடித்தும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.பல குழந்தைகளும் தப்பிக்க வழியின்றி  குண்டடி பட்டு மடிந்துவிட்டனர்.எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் தங்கள் உரிமைக்காக போராட வேண்டுமானால் அதற்கான ஆயுதம் தீவிரவாதம் ஒன்றுதான் வழி என்றில்லை. தீவிரவாதத்தினால் உயிர் பலி மட்டுமே மிஞ்சுமே தவிர தாங்கள் நினைத்ததை நிச்சயம் சாதிக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கான  அறிவும் , மனநிலையும் இவர்களிடத்தில் இல்லாததற்கு காரணம் மதம் எனும் காரணத்தைச் சொல்லி இவர்களை இந்த அமைப்புகள் மூளைச்சலவை செய்து வைத்திருப்பதுதான்.எந்தவொரு மதமும் உயிர் பலி கொடுத்தாவது நமது லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தவில்லை.அதிலும் குழந்தைகளைக் கொள்வது அந்த மதக் கடவுளைக் கொள்வதற்குச் சமமான செயலேயாகும்.

கடவுளிடம் சென்ற அந்த பிஞ்சு  உள்ளங்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.கண்ணீர் அஞ்சலியுடன் விடை பெறுவோம்.

————  கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s