தன்னம்பிக்கை

interview

கடந்த சனிக்கிழமை நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் இண்டர்வியூ நடந்தது.நாம் அறிவாளி என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால் இண்டர்வியூ எடுப்பதற்காக என்னையும் அழைத்திருந்தார்கள்.இப்பொழுதெல்லாம் ஏதோ இண்டர்வியூ எடுக்கப் போகின்றோம் என்று போவதில்லை.காரணம் , இண்டர்வியூவிற்கு வரும் கல்லூரிப் படிப்பு முடித்த மாணவர்கள் நமது கேள்விக்கு அசத்துகிறார்கள்.சில நேரங்களில் நம்மிடமும் கேள்வியைக் கேட்டுவிடுகிறார்கள்.அப்படிப்பட்ட அவர்களிடம் கேள்வி கேட்க நாமும் தயார் செய்து கொண்டு போக வேண்டி இருக்கிறது. சனிக்கிழமை என்னிடம் மாட்டிய ஒரு மாணவனிடம் சுமார் அரை மணி நேரம் கேள்விக் கணைகளால் என் பந்தாவை அரங்கேற்றிக் கொண்டிருந்தேன்.அந்த மாணவனும் பொறுமையாக பதில் தந்து கொண்டிருந்தார்.கடைசியாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு இவனை தேர்வு செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்துகொள்வோம் என்று நினைத்து இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

“ஐ.டி.துறையில் சேர்ந்தால் அடுத்த ஐந்து வருடம் கழித்து நீ என்னவாக வர ஆசைப்படுகின்றாய் ” என்ற கேள்வியைக் கேட்டேன்.இதே கேள்வியை பல மாணவர்களிடம் கேட்டிருக்கின்றேன் , அவர்களும் சற்று யோசித்து பதில் தந்துள்ளனர்.இந்த மாணவன் நான் கேள்வியைக் கேட்ட உடனேயே “ஸார் , ஐந்து வருடம் கழித்து நீங்கள் இப்பொழுது உட்கார்ந்து இருக்கும் இடத்தில் நிச்சயம் நான் இருப்பேன்” என்று அசத்தலான ஒரு பதிலைக் கொடுத்தார்.ஐந்து வருடத்தில் அந்த இடத்தைப் பிடித்துவிட முடியாது என்றாலும் அந்த மாணவனின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அவனுடைய பதிலை ரசித்தேன்.இவன்தான் நமக்குத் தேவை என்று அந்த மாணவனை தேர்வும் செய்து விட்டேன்.நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியமே.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s