“தாழி” – சிறுகதைத் தொகுப்பு – என் பார்வையில்

Thaali Imageவருடத்தின் முதல் நாளை பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுதுதான் சென்னையில் இருந்து டிசம்பர் 31-ஆம் தேதி எழுத்தாளரும் , திரைத்துறையைச் சார்ந்தவருமான நந்தன் ஸ்ரீதரன் அவர்களின் “தாழி” சிறுகதைத் தொகுப்பு கூரியரில் அலுவலகம் வந்து சேர்ந்தது.ஆன்லைனில் ஆர்டர் செய்து இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் புத்தகம் எனக்குக் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை.அதற்குக் காரணம் “Discovery Book Palace” – ல் நான் கடந்த முறை ஆர்டர் செய்த புத்தகம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் வந்து சேர்ந்தது என்பதால் “தாழி” புத்தகமும் குறைந்தது ஒரு வாரம் எடுத்துக்கொள்ளும் என்றிருந்தது என் நினைப்பு.ஆனால் , இந்த முறை அதிவேக ரயிலில் வருவதைப் போல் புத்தகம் ஆர்டர் செய்த அடுத்த நாளே சென்னையில் இருந்து பெங்களூர் வந்து சேர்ந்துவிட்டது.அதற்காக “Discovery Book Palace” – க்கு http://discoverybookpalace.com நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆதலால் , என் எண்ணப்படியே சனவரி 1-ஆம் தேதி புத்தக வாசிப்போடு இந்த வருடத்தைத் தொடங்கி வைத்து விட்டேன்.சரி , இனி புத்தகத்திற்கு வருவோம்.

நந்தன் ஸ்ரீதரன் அவர்களைப் பொருத்தவரை அவருடைய எழுத்துக்களை முகநூல் வாயிலாக நான் அறிந்திருந்ததால் இந்தப் புத்தகத்தை வாங்கலாமா வேண்டாமா என்ற கேள்வி எழவில்லை.பாஸ்கர் சக்தி மற்றும் ரமேஷ் வைத்யா இவர்கள் இருவரின் முன்னுரையோடும் , ஆசிரியரின் சிறு முன்னுரையோடும் தொடங்குகிறது புத்தகம்.”இந்திரனின் கண்கள்” என்று ஆரம்பிக்கும் கதையில் இருந்து ஆரம்பமாகிறது கதைக்களம்.முதல் கதையிலேயே காமம் சார்ந்த விசயங்களை கையில் எடுத்திருக்கிறாரே ஆசிரியர் என்று நினைக்கத் தோன்றினாலும் அந்தக் கதையை சிக்கலின்றி முடித்த விதம் ஆறுதலைத் தருகிறது.தன்னுடைய சிறு வயதில் மிகவும் கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட ஒருவன் திருமணத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் பெண்கள் மேல் தன் காமப் பார்வையைக் காட்டுவதால் இல்லறத்தில் ஏற்படும் சிக்கலையும் , பெண்கள் மேலான அந்த காம மனநிலை வரக் காரணமாக இருந்த அவனுடைய இளமைக் காலப் பின்னணியைப் பற்றியும் விவரிக்கும் சில இடங்களில் ஆசிரியர் பயன்படுத்திய காமம் சார்ந்த சில வார்த்தைகள்/விஷயங்கள் கதைக்குத் தேவையா என்பது என் கேள்வியாகவும் அதுவொரு குறையாகவும் தெரிகிறது.இருந்தாலும் கதையின் இறுதிக்கட்டத்தில் மூன்று மாதம் பிரிந்திருந்த தன் மனைவி தன்னால் தாய்மை அடைந்திருக்கிறாள் என்று சொல்லும் இடம் வந்து கதை முடிவுறும் தருவாயில் சுவாரசியத்தைக் கொடுத்துவிட்டார் ஆசிரியர்.

மற்றொரு கதையில் ஒருவனை தன் முகத்தோற்றத்தை வைத்து புறக்கணிக்கும் சமூகத்தில் அவன் சந்திக்கும் பிரச்சனைகளையும் , அதன் வலியையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.”புறக்கணிப்பில் பெரியது பிச்சைக்காரர்களால் கூட புறக்கணிக்கப்படுவது” போன்ற பல வரிகள் கைத்தட்டல் பெறுகின்றன.இப்படிச் சொன்னவர் இதே கதையில் “இனி இங்கேயே நின்றுகொண்டிருந்தால் நம் முகத் தோற்றத்தைப் பார்த்து யாராவது புகார் கொடுத்தால் போலிஸ் வந்தாலும் வந்துவிடும்” என்று நக்கலாகவும் கதையை நகர்த்திச் செல்கிறார்.சமுதாய சிந்தனையுள்ள கதையும் கூட இது.ஆசிரியரின் இளமைக் காலங்களில் தான் வாழ்ந்த ஒரு கிராமத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு கதையில் ஆசிரியருக்கு நெருக்கமான சினிமாத் துறையைப் பற்றியும் வருத்தம் தெரிவிக்கிறார் இப்படி – ” சினிமாவில் சேர வேண்டும் என்பதில் இவர்கள் காட்டும் ஆர்வத்தில் பத்தில் ஒரு பகுதி காட்டி தியேட்டரில் போய் படத்தைப் பார்த்தால் கூட சினிமா வாழ்ந்திருக்குமே” என்று.தான் சார்ந்த துறை என்பதால் அந்த வருத்தம் கதையில் பதிவாகியிருக்கிறது.அதே கிராமத்தில் நடக்கும் கவுரவக் கொலைகளில் ஒன்றைச் சொல்லியிருக்கும் ஆசிரியர் முதல் சம்பவத்திற்கு தேவையான ஒரு பிளாஷ் பேக்கைச் சொல்லி , பின்பு பிளாஷ் பேக்கிலும் ஒரு பிளாஷ் பேக்கைக் கொண்டுவருகிறார்.என்னடா கதை இப்படிச் செல்கிறதே என்று நினைத்துக்கொண்டு வாசிப்பைத் தொடர்ந்தால் கடைசியில் அனைத்துப் புள்ளிகளையும் ஒன்றாக இணைத்து கதையின் கருவை அருமையாக நிறைவு செய்துவிடுகிறார் ஆசிரியர்.என் பார்வையில் இந்த சிறுகதைத் தொகுப்பில் முதல் இடத்தைப் பிடித்த கதை இந்த “சென்றாயன்” பின்னணி பற்றிய கவுரவக் கொலைக் கதைதான்.இதை ஒரு திரைப்படமாகக் கூட எடுத்தாலும் நிச்சயம் அது பேசப்படும் படமாகவே அமையும்.

சினிமாவில் துணை நடிகைகள் படும் அவஸ்தையைப் பற்றிச் சொல்லியிருக்கும் ஒரு கதை , நகரத்தில் நாய் வளர்ப்பால் ஒருவன் படும் அவஸ்தை பற்றிய கதை , குடிப்பழக்கத்தால் ஒருவனின் தாய் திருடும் நிலைக்குச் செல்லும் அவலத்தைப் பற்றிய சமூகம் சார்ந்த ஒரு கதை , தன் இளமைக் காலத்தில் தான் கண்ட ஒரு காதல் கதை என்று மொத்தம் ஏழு கதைகளைக் கொடுத்துள்ள ஆசிரியரின் எழுத்தில் ஆங்காங்கே பேஸ்புக்கும் எட்டிப்பார்க்கத் தவறவில்லை.ஒரு கதையின் சீரியசான ஒரு இடத்தில் “இங்கு ஒரு ஸ்மைலி போட வேண்டும் போல இருக்கிறது .. பேஸ்புக் என்னை ரொம்பத்தான் குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறது” என்று சொல்லியும் , ஒரு காதல் கதையில் “ஸ்டேடஸ் , ஷேரிங் , லைக்” போன்ற நான் அன்றாடம் சந்திக்கும் பேஸ்புக் வார்த்தைகளையும் உபயோகப்படுத்தி நம்மை வயிறு குலுங்க சிரிக்கவும் வைக்கிறார் ஆசிரியர்.இன்றைக்கு நாம் பேஸ்புக்கில் அடிமையாகிக் கிடப்பதை இப்படி விளையாட்டாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார் ஆசிரியர்.

மொத்தம் மூன்றரை மணி நேரத்தில் படித்து முடித்துவிட்ட இந்தப் புத்தகத்தில் இரண்டாவது பத்தியில் குறிப்பிட்ட அந்தக் குறை ஒன்றுதான் உறுத்தலாக இருக்கிறதே தவிர வேறு சொல்லும்படியான குறைகள் எதுவும் எனக்குத் தென்படவில்லை. 90 ரூபாய்க்கு உண்டான சரக்கை ஆசிரியர் புத்தகத்தில் கொடுத்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

புத்தகம் வாங்க விரும்புவோர் இங்கே செல்க -> http://discoverybookpalace.com/search.php?search_query=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF&x=15&y=12

————– கதிர்  @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s