அவனே சிறந்தவன்

12345நம்மைப் பற்றி மற்றவர்கள் புகழும்போது அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் நாம் , அதே நம்மை மற்றவர்கள் விமர்சிக்கும் போது வருந்துகின்றோம்.இரண்டையும் ஒரே மாதிரியான மனநிலையுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனும் எதார்த்தத்தை பலரும் புரிந்துகொள்வதில்லை.நம்மை புகழும்போது உணர்ச்சி வசப்படத் தேவையில்லை , நம்மை விமர்சிக்கும் போது வருந்தவோ , கோபப்படவோ தேவையில்லை.மற்றவர்கள் விமர்சிப்பதைப் போல் நம்மேல் குறை இருந்தால் அதை முதலில் சரி செய்துகொள்ளப்பார்க்க வேண்டுமே தவிர கோபப்படத் தேவையில்லை.அப்படியே அவர்கள் குறிப்பிடும் தவறு நம்மிடம் இல்லை என்றால் அதற்காக அவர்களிடம் சண்டைக்குப் போகத் தேவையில்லை.அவர்களை அப்படியே விட்டுவிட்டால் போதும்.வேறு எவரிடமாவது இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்.இதுதான் நிதர்சனம்.ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் போதும் கூட , ஒரே அனுபவம் வாய்ந்த இருவருக்குள் போட்டி இருப்பதைப் பார்க்க முடியும்.அது போட்டியாக மட்டும் இருந்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை.ஒருவரைப் பார்த்து பொறாமைப்படும் போது நம்மிடம் இருக்கும் குறைகள் நம் கண்ணில் படுவதில்லை.நானும் அவனும் ஒரே நேரத்தில் நிறுவனத்தில் சேர்ந்தோம் , இன்று அவன் மட்டும் எனக்கு அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டான் , அவனுக்கு மட்டும் மேலதிகாரி உதவுகின்றார் , என்னை மட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறார் என்று புலம்புகின்றோம்.இப்படிப்பட்ட புலம்பல்கள் அனைத்து நிறுவனங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.ஒரு சிலர் வேண்டுமானால் தங்களின் மேலதிகாரிக்கு “ஆமாம் சாமி” போட்டு மேலே வந்துவிடுகிறார்களே தவிர பலரும் தங்கள் கடின உழைப்பால் மேலே வந்தவர்கள்தான்.

இன்றைக்கும் கூட நான் பணி புரியும் நிறுவனத்தில் என்னை விட ஆறு மாதம் குறைவான அனுபவம் பெற்றவர் அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டார்.அதற்காக நான் அவரைப் பார்த்து பொறாமைப் படவில்லை.என்னிடம் இல்லாத திறமை அவரிடம் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது என்ற கோணத்தில் ஆராய்ந்தால் என்னிடம் என்ன குறை இருக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ள முடியும்.புரிந்து கொண்டேன்.அவர் ஒன்றும் என்னுடைய மேலதிகாரிக்கு “சலாம்” போட்டு அடுத்த நிலைக்குச் செல்ல வில்லை.என்னை விட “ப்ரொமோஷன்” வாங்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.அந்த வகையில் அவருடைய முன்னேற்றத்தில் எனக்கு மகிழ்ச்சிதானே தவிர நான் வருந்தவில்லை.எனக்கென்று ஒரு நாள் வரும் அல்லவா.அதை நோக்கித்தான் என் வேலையை தொடர்கின்றேனே தவிர என்னை யாருடனும் ஒப்பிட்டுப்பார்ப்பதில்லை.இங்கே திறமை உள்ளவன் ஜெயிக்கின்றான்.அவ்வளவுதான்.அடுத்தவரிடம் இருக்கும் அந்தத் திறமையை நாம் வளர்த்துக்கொள்ள நமது நேரத்தை செலவிட வேண்டுமே தவிர பொறாமைப் படத் தேவையில்லை.அந்தத் திறமை உங்களிடமும் வரும் நாளில் நீங்களும் அடுத்த நிலைக்குச் சென்றுவிடுவீர்கள்.நீங்களும் ஜெயித்துவிடுகிறீர்கள்.இதுதான் நிதர்சனம்.குறையைப் புரிந்துகொண்டாலே போதும்.அனைத்தும் சரியாகிவிடும்.

நான்கு வருடத்திற்கு முன்பு அலுவலகத்தில் ஒரு பெரிய பொறுப்பொன்றை எனது மேனேஜர் என்னிடம் கொடுத்திருந்தார்.நான் அப்பொழுது டீம் லீடராக இருந்த காலம்.எனது மேனேஜருக்கு வேறு ஒரு ப்ராஜக்டை கவனித்துக்கொள்ள அவருடைய மேனேஜர் உத்தரவு போட்டுவிட்டார்.ஆகையால் , அவர் பார்த்துக்கொண்டு இருந்த , நான் டீம் லீடராக இருந்த அந்த ப்ராஜக்டை என்னிடம் ஒப்படைத்து விட்டு புதிய ப்ராஜக்டிற்குச் சென்றுவிட்டார் எனது மேனேஜர்.அதுவரை அலுவலகத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு அன்றிலிருந்து முப்பத்தியைந்து பேரை நிருவகிக்கும் பொறுப்பு வந்துவிட்டது.என் மேல் நம்பிக்கை வைத்துத்தான் அந்த பெரிய பொறுப்பை என்னிடம் கொடுக்கச் சொன்னார் என் மேனேஜர்.பொறுப்பு வந்துவிட்டது.மேனேஜர் செய்த அனைத்து வேலைகளையும் நான் செய்தாக வேண்டும்.எனக்கு அது புதிய அனுபவம்.அந்த சமையம் ப்ராஜக்ட்டும் சிக்கலாகச் சென்று கொண்டிருந்தது.ஆரம்பத்தில் தடுமாறும் அளவிற்குத்தான் இருந்தது.நிலைமையை கொஞ்சம் சமாளிக்க முடியாத சூழ்நிலையில் என் மீது நம்பிக்கையை இழந்த மற்றொரு மேனேஜர் என் மேனேஜரைத் தொடர்பு கொண்டு என் வேலையில் திருப்தி இல்லை என்றும் , வேறு ஒரு நபரை என் இடத்திற்கு கொண்டுவரவும் பரிந்துரை செய்திருக்கின்றார்.பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற என் முந்தைய மேனேஜர் எனக்குத் தொடர்பு கொண்டு என்ன பிரச்சனை என்றார்.

இப்பொழுதுதான் இரண்டு வாரங்கள் ஆகி இருக்கின்றது . இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இரண்டு வாரத்திற்குள் என்மேல் குறையை கண்டுபிடிப்பது எனக்கு சரியாகப் படவில்லை.என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இன்னும் இரண்டு வாரங்கள் பொறுத்திருங்கள்.அதற்குப் பின்பும் நம்பிக்கை வரவில்லை என்றால் நிச்சயம் நீங்கள் சொல்வதைப் போல் நானே இந்தப் பொறுப்பில் இருந்து விலகிவிடுகின்றேன் என்று என் நிலைப்பாட்டை விளக்கினேன்.என் மேல் நம்பிக்கை வைத்தார் என்னுடைய மேனேஜர்.இரண்டு வாரங்கள் முடிந்தது.என்னை மாற்றச் சொன்ன மற்றொரு மேனேஜர் என்னுடைய முந்தைய மேனேஜரை தொடர்பு கொள்கின்றார் இரண்டு வாரத்திற்குப் பிறகு .”ராஜேஷ் , என்னை மன்னித்து விடுங்கள்.கதிர்வேலை மாற்றும்படி அன்றைக்கு உங்களிடம் சொல்லியதற்கு இன்று நான் வருந்துகின்றேன் , எனக்கு இப்பொழுது அவர்மேல் முழு நம்பிக்கை வந்துவிட்டது , இனி இந்த ப்ராஜக்டிற்கு அவரையே மேனேஜர் பொறுப்பில் இருக்க விடுங்கள் ” என்றிருக்கிறார்.என்னுடைய மேனேஜர் எனக்குத் தொடர்பு கொண்டார்.”இரண்டு வாரத்தில் அப்படி என்ன மாற்றம் நடந்தது” என்றார்.”எனக்குக் கொடுத்த வேலையை மட்டுமே நான் செய்தேன்” என்றேன்.அந்த இரண்டு வாரத்தில் நான் எங்கெங்கே பின்தங்கி இருந்தேனோ அதைத் தெரிந்து கொண்டு சரி செய்தேன்.அவ்வளவுதான்.பின்பு அவர்களுக்கு என் மேல் நம்பிக்கை வந்துவிட்டது.பாராட்டுக்களோடு சேர்த்து ஓரிரு மாதங்களிலேயே மேனேஜர் பொறுப்பில் மட்டும் இருந்த என்னை மேனேஜர் பதவிக்கு பரிந்துரை செய்து கிடைக்கவும் அவர்களே வழிவகை செய்தனர்.

நான் ஒன்றும் பெரிதாக அப்பொழுது செய்யவில்லை.எங்கெங்கு நான் சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே தெரிந்து கொண்டேனே தவிர என்னை யாருடனும் ஒப்பிட்டுப்பார்க்கவில்லை.அதே போன்ற மன நிலைதான் இப்பொழுதும் இருக்கின்றது .என்னை விட ஆறு மாதம் அனுபவம் குறைந்தவராக இருந்தாலும் அவர் அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டார் என்று வருந்தவில்லை.எனக்குக் கொடுத்த வேலையை திருப்தியுடன் செய்து வருகின்றேன்.எனக்கான அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று நினைத்துக்கொண்டே. நம்மீது குறை இருந்தால் அதை சரி செய்து கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர மற்றவர்மேல் பொறாமைப்படுவது நம் திறமையை வளர்த்துக்கொள்ள நிச்சயம் உதவாது.மீண்டும் சந்திப்போம்.

———– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s