பலவீனமாகும் அஸ்திவாரம்

Drugsஇன்றைக்கு குழந்தைகள் வெறும் தொலைக்காட்சியைப் பார்த்தே கெட்டுப் போகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.தொலைகாட்சி/ஊடகங்கள்  அதிகம் பங்கு வகிக்கிறது , அவ்வளவுதான்.மற்றபடி கெட்டுப்போக வேண்டும் என்று ஒருவன் நினைத்துவிட்டால் எங்கிருந்தாலும் கெட்டுத்தான் போவான்.நான் பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் அதே ஊரில் மற்றொரு பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எனக்குத் தெரிந்த அந்தப் பையன் குடியும் கும்மாளமுமாக கொடி கட்டிப் பறந்தார்.பள்ளிக்கூடம் படிக்கும் பொழுதே அவரைச் சுற்றி எப்பொழுதும் ஜால்ராக்கள் இருப்பார்கள்.இவர் நல்ல வசதி என்பதால் இவருக்கு ஜால்ரா போட்டு இலவசங்களை அனுபவித்தவர்கள் அவர்கள்.பதினேழு வருடங்களுக்கு முன்பு மீடியாக்களின் ஆதிக்கம் இன்றைக்கு இருப்பதைப் போல் அவ்வளவு ஒன்றும் அதிகமில்லை.அப்பொழுதும் கெட்டுக் குட்டிச் சுவரான இளைஞர்கள் இருந்தார்கள்தான்.

எங்கெல்லாம் மாணவர்கள் தவறு செய்கிறார்களோ அங்கெல்லாம் நாமும் அந்தப் பள்ளியையும் ஆசிரியர்களையும் எளிதில் குற்றம் சுமத்தி விடுகின்றோம். கெட்டுப் போயே தீருவேன் என்று திரியும் மாணவனை கண்காணித்துக்கொண்டே இருப்பது ஆசிரியர்களின் வேலை அல்லவே.பெற்றோர்களும் கூட அவர்களால் முடிந்த வரைதான் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியுமே தவிர  வேறொன்றும் செய்வதற்கில்லை.இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் தவறை சரியான முறையில் புரிய வைப்பதே மிகப் பெரிய சவால்தான். பெற்றோர்கள் தங்கள் நலனுக்காகத்தான் சொல்கிறார்கள் என்பதை அவர்கள் வழியில் சென்றே புரிய வைக்க வேண்டியிருக்கிறது.எங்கள் பள்ளிக்காலங்களில் பெற்றோருக்குத் தெரியாமல் எல்லாம் நண்பர்களுடன் சினிமாப் பார்க்கச் சென்றதே எங்களைப் பொருத்தவரை அன்றைக்கு மிகப் பெரிய குற்றம்.வீட்டிற்குத் தெரிந்தால் அப்பா சண்டியராகி  விடுவார் என்பது வேறு கதை.பெற்றோர்களை ஏமாற்றி விட்டுப் போனது அன்றைக்கு குற்றம் என்றாலும் இன்றைய  நிலையைப் பார்த்தால் அதுவொன்றும் பெரிய குற்றமில்லை என்றே தோனுகிறது.

சமீபத்தில் படித்த செய்தியொன்றில் தமிழகத்தில் ஒரு அரசுப் பள்ளியின் மாணவர்கள்  ஷீட் ஒட்டப் பயன்படுத்தப்படும் ஒருவிதமான பசையை போதை வஸ்துவாக  பயன்படுத்தி வந்தது அதிர்ச்சியளித்தது.இத்துனைக்கும் அந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புக் கூட தாண்டாதவர்கள் என்பது மற்றுமோர் அதிர்ச்சி.இந்த விசயத்தில் நாம் யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.அதிலும் ஆசிரியர்கள் மீது  நிச்சயம் குற்றம் சுமத்த முடியாது.பெற்றோர்கள் மீது வேண்டுமானால் குழந்தைகளின் நடத்தையை  சரியாக கண்காணிக்கவில்லை என்று  ஓரளவு குற்றம் சுமத்தலாம் என்றாலும் மேலே குறிப்பிட்டதைப் போல் கெட்டுப் போக வேண்டும் என்று நினைப்பவன் எப்படியும் சாதித்துவிடுவான்.நல்ல விசயத்தைக் கற்றுக்கொள்ள அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும்.அதில் உடனடியான சுவாரசியங்களும் இருக்காது.ஆனால் , கெட்ட விசயங்களை எளிதில் கற்றுக்கொள்ளலாம் , சுவாரசியமும் அதிகம்.எதிர்காலம் என்பது கேள்விக்குறிதான் என்பதை உணரும் போது மாணவப் பருவத்தில் இருக்கும் இந்தக்  குழந்தைகள் வளர்ந்து தங்கள் வாழ்வின் பாதி நாட்களை தொலைத்திருப்பார்கள்.அதற்கு சாட்சியாக நம்மைச் சுற்றி இருக்கும்  பலரை நாம் அடையாளம் காட்டலாம்.

நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் பெங்களூரில் மிகப்பெரிய புகழ் வாய்ந்த ஒரு பள்ளியைப் பற்றிய அதிர்ச்சித் தகவலைச் சொன்னார்.அந்தப் பள்ளியில் சேருவதற்கு கிட்டத்தட்ட குழந்தை பிறந்தவுடன் விண்ணப்பம் போட்டு வைக்க வேண்டும் என்ற அளவில் போட்டி இருக்கும்.நான் பெயரைச் சொன்னால் நிச்சயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும் அந்தப் பள்ளிக்கூடம்.அங்கேதான் மாணவர்கள் நிறையப் பேர் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்களாம் .”என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க” என்று அவரிடம் கேட்டால் , அது உறுதி செய்யப்பட தகவல் என்றார்.அரசுப் பள்ளிக்கூடமோ , தனியார் பள்ளிக்கூடமோ இது போன்ற தவறுகள் நடந்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது , மாணவர்களும் தங்கள் வாழ்க்கையை சீரழித்துக்கொண்டுதான்  இருக்கிறார்கள்.தங்கள் குழந்தைகளின் இது போன்ற தீய பழக்கங்களை பெற்றோர்கள் கண்டுபிடித்தாலும் பெரும்பாலும் அவர்கள் சரியான முறையில் கவுன்சிலிங் கொடுத்து அவர்களைத் திருத்தத் தெரிவதில்லை.அவர்களைத் திருத்தும் சந்தர்பம் வருவதற்குள் தாங்கள் செய்யும் தவறின் உச்சத்தையே பலரும் தொட்டு விடுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க இன்றைக்கு ஆசிரியர்கள் மீதும் மாணவர்களுக்கு  வெறுப்பு வந்து ஆசிரியரைக் கொலை செய்யும் அளவிற்கும் சென்றுவிடுகிறார்கள் என்பதை அண்மைக் காலங்களில் வந்த செய்திகள் உணர்த்துகின்றன.ஆசிரியர்கள் மீது வெறுப்பு வரக் காரணம் மற்ற மாணவர்களுக்கு முன்பு தங்களை ஆசிரியர் திட்டிவிட்டார் என்பதே.இங்கே திட்டிவிட்டார் என்பதை அவமானப் படுத்திவிட்டார் என்றே நிறைய மாணவர்கள் எடுத்துக்கொள்வதுதான் பிரச்சனைக்குக் காரணம்.இவர்களை எல்லாம் திருத்திக் கொண்டுவருவது ஒன்றும் எளிதான விசயமில்லை ஆசிரியர்களுக்கு. சவாலான விசயம்தான் என்றாலும் அதையும் சாதித்துக்காட்டி மாணவர்களை நல்வழிப் படுத்தும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சில ஆசிரியர்கள் எவன் எக்கேடு கேட்டால் என்ன என்ற மனநிலையில் இருப்பதையும் மறுக்க முடியாது.

பள்ளிக் காலங்களில் கெட்டுப்போய் விட்டால் பள்ளிப்படிப்பை முடிப்பதே சிரமம்.அப்படியும் தாண்டி கல்லூரி வரைக்கும் வந்துவிட்டால் அங்கே இவர்கள் முழுவதும் சீரழிந்து போய்விடுவதோடு மட்டுமில்லாமல் இன்னும் சிலரையும் சேர்த்துத்தான் கெடுத்துவிடுகிறார்கள்.இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்று பார்த்தால் குழந்தைகளுக்கே தங்கள் எதிர்காலம் பற்றிய அக்கறை வேண்டும்.அதோடு சேர்த்து நல்ல பழக்க வழக்கமுள்ள நண்பர்களுடன் பழக வேண்டும்.சேர்க்கை சரியில்லை என்றால் வாழ்க்கையும் சரியாக அமையாதுதானே. ஆக , குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளர பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அரவணைப்பு மட்டுமே போதாது.குழந்தைகளுக்கும் தங்கள் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையும் , அதில் முன்னேறுவதற்கான செயல் திட்டத்தைப் பற்றிய சிந்தனையும் , தன்னைச் சுற்றியுள்ள நல்ல நண்பர்களுடன் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்வதும் அவர்கள் கடமை. அதோடு சேர்த்து படிக்கும் மாணவர்கள் நாள் தோறும் யோகா ,தியானம் போன்ற மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.

கெட்டுப் போகும் மாணவர்கள் ஒரு புறம் இருந்தாலும் இன்றைக்கு படிப்பில் போட்டிபோட்டுக் கொண்டு அசத்தும் மாணவச் செல்வங்கள் நம் கண்ணில் படத்தான் செய்கிறார்கள்.அதனாலேயே , நாளைய இந்தியாவின் தூண்களில் சிலர் இன்று அஸ்திவாரம் பலவீனமாக காணப்பட்டாலும் பல தூண்கள் இன்னும் உறுதியுடன்தான் இருக்கிறது என்பது ஆறுதலான விஷயம்.இருந்தாலும் நாளைய தூண்கள் அனைத்தும் இன்றைக்கும் பலமாக இருந்தால்தானே நமக்கு முழுத் திருப்தி கிடைக்கும் .அந்த வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

———– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

One Response to பலவீனமாகும் அஸ்திவாரம்

  1. A RAVI says:

    அடியாத மாடு படியாது ! அன்போடு வளர்கிறேன் என்பதால், குழந்தைகள் பண்போடு வளர்வதில்லை. ஒரே குழந்தை என்பதால் சகிப்புத்தனமை பூஜ்ஜியம். அடிக்கிற கையின் அனைப்புதான் உண்மையான அன்பு !

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s